பெருஞ்சேரி வாகீசுவரர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

3 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
சி
re-categorisation per CFD
("'''பெருஞ்சேரி வாகீசுவரர்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
சி (re-categorisation per CFD)
'''பெருஞ்சேரி வாகீசுவரர் கோயில்''' [[நாகப்பட்டினம்]] மாவட்டத்தில் உள்ள [[சிவன்]] கோயிலாகும்.
 
==அமைவிடம்==
இக்கோயில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் [[மயிலாடுதுறை]] அருகே பெருஞ்சேரி என்னுடமித்தில் அமைந்துள்ளது. <ref name="dinamalar"> [http://temple.dinamalar.com/New.php?id=1308 அருள்மிகு வாகீஸ்வரர் திருக்கோயில், தினமலர் கோயில்கள்] </ref>
 
==இறைவன், இறைவி==
இக்கோயிலின் மூலவராக வாகீசுவரர் உள்ளார். கிழக்கு நோக்கிய நிலையில் உள்ளார். ஆவுடையார் சதுர வடிவில் காணப்படுகிறார். இங்குள்ள இறைவி சுவாதந்தரநாயகி என்று அழைக்கப்படுகிறார். கோயிலின் தல விருட்சம் பன்னீர் மரம் ஆகும். <ref name="dinamalar"/>
 
==அமைப்பு==
 
==தல வரலாறு==
சிவனை அழைக்காமல் தக்கன் யாகம் நடத்தியபோது அதில் தேவர்களும், பிரம்மாவும் கலந்துகொண்டனர். பார்வதிதேவி அழைக்காமல் வந்த நிலையில் அவமானப்பட, அதனை அறிந்த சிவன் கோபமடைந்தார். உக்கிரமடைந்த வீரபத்திரர் கோபமடைந்து யாகத்தை அழித்ததுடன் அதில் பங்கேற்ற அனைவரையும் தண்டித்தார். வீரபத்திரனால் பாதிக்கப்பட்ட சரசுவதி தன் கணவரிடம் இந்நிலை குறித்து வருந்திக் கூறினாள். தவத்தால் எதனையும் அடையலாம் என பிரம்மா கருத்து கூற சரசுவதி இங்கு கோயில் கொண்டுள்ள சிவன் முன்பாக தவம் இருந்து தன் குறை நீங்கப் பெற்றாள். <ref name="dinamalar"/>
 
== மேற்கோள்கள் ==
{{reflist}}
 
[[பகுப்பு:நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள சிவாலயங்கள்சிவன் கோயில்கள்]]
3,692

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2254486" இருந்து மீள்விக்கப்பட்டது