வேளாண்மை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: AFTv5Test இல் இருந்து நீக்குகின்றது
No edit summary
வரிசை 1:
{{வேளாண்மை}}
'''உழவு தொழில்''' அல்லது '''விவசாயம்''' அல்லது '''கமம்கவண் ''' என்பது [[உணவு]] மற்றும் பிற பயன்பாடுகளுக்காக சிலவகைப் [[பயிர்]]களை உற்பத்தி செய்வதையும், கால்நடை வளர்ப்பையும் குறிக்கும். வேளாண்மை ஒரு முக்கியமான முதனிலைத் தொழில் ஆகும். இத்தொழிலில் மனிதன் இயற்கையிலிருந்து கிடைக்கும் பொருள்களைச் சேகரித்துப் பயன்படுத்திக் கொள்வதோடு நிறுத்திக் கொள்ளாமல், அவ்வியற்கையோடு ஒன்றிணைந்து பணியாற்றி உணவுப் பொருட்களை உற்பத்தி செய்துகொள்கிறான்.
வீட்டு [[விலங்கு|விலங்குகள்]] மற்றும் தாவரங்களின் (பயிர்கள்) உற்பத்தியைக் கொண்டு [[நாகரிகம்|நாகரிகங்களுக்கு]] வழிவகுத்திட்ட சிறப்பான மானிடவியல் வளர்ச்சி வேளாண்மையாகும். உணவுப் பெருக்கத்தை உருவாக்கிக்கொள்வது [[மக்கள் தொகை அடர்த்தி|அடர்த்தியான மக்கள் தொகை]] மற்றும் நிலத்தொடர்புச் சமூகங்களை வளர்த்தெடுக்க உதவுகிறது. கால்வாய்களை வெட்டுதல் மற்றும் பல்வேறு வகையிலான [[நீர்ப்பாசனம்|நீர்ப்பாசனங்கள்]] மூலம் பயிர் வளர்ப்பிற்கு ஏற்றாற்போல் நிலத்தின் ஏற்புத்திறனை நீட்டிப்பது உள்ளிட்ட பல்வேறுவிதமான சிறப்புக்கூறுகளுடன் கூடிய உத்திகளோடு விவசாயம் தொடர்புகொண்டிருக்கிறது. பயிரிடக்கூடிய [[நிலம்|நிலத்தில்]] பயிர்களை சாகுபடி செய்தல் மற்றும் [[கால்நடை]]களை வளர்த்தல், மேய்ச்சல் நிலம் அல்லது தரிசுநிலத்தில் கால்நடைகளை மேய்த்தல் ஆகியவை விவசாயத்தின் அடித்தளமாக விளங்குகின்றன.
 
"https://ta.wikipedia.org/wiki/வேளாண்மை" இலிருந்து மீள்விக்கப்பட்டது