கரூர் கல்யாணபசுபதீசுவரர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி re-categorisation per CFD
வரிசை 52:
}}
 
'''கல்யாணபசுபதீசுவரர் கோயில்''' என்பது தமிழ்நாட்டில் [[கரூர் (கரூர் மாவட்டம்)|கரூர்]] நகரில் அமைந்துள்ள சிவாலயமாகும். இச்சிவாலயம் [[தேவாரம்]] பாடல் பெற்ற கொங்குநாட்டுத் தலங்களுள் ஒன்றாகும். இத்தலம் காமதேனு வழிபட்ட தலமாகும். இச்சிவாலயத்தினை திருஞானசம்பந்தர், கருவூரார், அருணகிரிநாதர் போன்றோர் பாடியுள்ளனர். இச்சிவாலயத்தில் சித்தர் கரூவூராருக்கு தனி ஆலயம் உள்ளது.
 
இத்தலத்தின் புகழ்ச்சோழ நாயனார் அரசாண்டதாகவும், எறிபக்த நாயனார் தொண்டு செய்ததாகவும் தலவரலாறு கூறுகிறது.
வரிசை 59:
[[File:Karur Pasupateeswarar temple.jpg|thumb|left|700px|<div class="center" style="width:auto; margin-left:auto; margin-right:auto;">கரூர் பசுபதீசுவரர் ஆலயம்</div>]]
 
மூலவர் பசுபதீசுவரர் சுயம்பு லிங்கமாக உள்ளார். இந்த லிங்கத்தின் ஆவுடையார் சதுரமாக உள்ளது. மாசி மாதத்தின் ஐந்து நாட்கள் மூலவரின் மீது சூரிய ஒளி படுகிறது. மூலவரின் இடதுபக்கத்தில் அலங்காரவல்லி , சௌந்தரநாயகி சன்னதிகள் உள்ளன.
 
மூலவரின் நேராக அமைந்துள்ள நந்திக்கு அருகேயுள்ள தூண்களில் புகழ்ச்சோழர் சிவபக்தரின் தலையோடு உள்ள சிலையும், முசுகுந்த சக்கரவர்த்தியின் சிலையும் உள்ளன. வெளிச்சுற்றுபிரகாரத்தில் கருவூரார் சன்னதியும், ராகு கேது பாம்பு சிலைகளும் உள்ள சன்னதியும் உள்ளது.
வரிசை 68:
 
[[கரூர் மாவட்டம்|கரூர் மாவட்டத்தின்]] தலைமையிடமாக அமராவதி ஆற்றங்கரையில் அமைந்துள்ள கரூரில், நகரின் மையப் பேருந்து நிலையத்துக்கு மிக அருகாமையில் இக்கோவில் அமைந்துள்ளது.
 
 
==கோவில் அமைப்பு==
இக்கோவிலின் கொடிமரம் கருங்கல்லால் ஆனது. கொடி மரத்தின் ஒரு புறத்தில் தலையைத் தட்டில் வைத்து கையில் ஏந்தியவாறமைந்த புகழ்ச்சோழ நாயனாரின் சிற்பமும் மறுபுறம் சிவலிங்கமும் சிவலிங்கத்தை நாவால் நக்குகின்ற பசுவும் அமைந்துள்ளன.
 
இக்கோவிலின் பெருமான் கல்யாண பசுபதீஸ்வரர். பசுபதிநாதர், பசுபதீஸ்வரர், ஆநிலையப்பர், பசுபதி என்றும் அழைக்கப்படுகிறார். இங்கு சிவன், சதுரமான ஆவுடையாரின் மீது அமைந்துள்ள லிங்க வடிவிலுள்ளார். அம்மன் அலங்காரவல்லி.
 
தமிழ்நாட்டின் பழம்பெரும் சிவத்தலங்களில் இது ஒன்றாகும். கொங்கு நாட்டின் ஏழு சிவத்தலங்களில் ஒன்றாகும்.
 
இக்கோயில் கட்டடக்கலைச் சிறப்பு மிக்கது. இங்குள்ள நூற்றுக்கால் மண்டபத்திற்கு இங்கு 1960 ஆம் ஆண்டு குட முழுக்கு விழா நடைபெற்றபொழுது ’புகழ்ச் சோழர் மண்டபம்" என்று பெயரிடப்பட்டுள்ளது.
 
கோவிலின் தென்மேற்கு மூலையில் பதினெட்டு சித்தர்களில் ஒருவரான கரூவூராரின் சன்னிதி உள்ளது. இச்சித்தர் ஆநிலையப்பரோடு ஐக்கியமானதால் கருவறையில் சுயம்புலிங்கமாக உள்ள பெருமான் சற்றே சாய்ந்த நிலையில் உள்ளார்.
வரி 101 ⟶ 100:
[http://www.southdreamz.com/temple/sri-kalyana-pasupatheeswarar-temple-karur/ஸ்ரீகல்யாண பசுபதீஸ்வரர் கோவில், கரூர்]
 
[[பகுப்பு:தேவாரம் பாடல் பெற்ற சிவாலயம்சிவன் கோயில்கள்]]
[[பகுப்பு:நாயன்மார் அவதாரத் தலங்கள்]]
[[பகுப்பு:கரூர் மாவட்டத்திலுள்ள சிவன் கோயில்கள்‎]]
"https://ta.wikipedia.org/wiki/கரூர்_கல்யாணபசுபதீசுவரர்_கோயில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது