ஹொங்கொங்கில் தமிழ் மொழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
HK Arun (பேச்சு | பங்களிப்புகள்)
HK Arun (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
ஹொங்கொங்கில் தமிழ் குழந்தைகள் தமது கல்வியை ஆங்கில வழி மூலக் கல்வியாகவே கற்கின்றனர். இம்மாணவர்களுக்கு தமிழ்மொழி வழி கற்கவோ, தமிழைக் கற்கவோ வாய்ப்பில்லாமல் இருந்தது. இந்த சூழமைவில் (Young Indian Friends Club) இந்திய தமிழ் இளைஞர் குழுவினரால் தன்னார்வ தொண்டாக "தமிழ்" வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டு வெற்றிகரமாக நடாத்தியும் வருகின்றனர்.
 
 
இந்த (YIFC) குழுவினர் கொண்டுள்ள தமிழ் மொழி பற்றும், தமிழ் மொழியை கற்பிக்கவேண்டும் எனும் இவர்களது தன்னார்வ முயற்சியும் மிகவும் வரவேற்புக்கும் பாராட்டுக்கும் உரியது. ஹொங்கொங்கில் தமிழ் பேசும் தமிழர்களான இவர்கள் இந்து இஸ்லாம் எனும் மத பேதங்களின்று ஒற்றுமையுடன் தாய்மொழி என்பது நமது பண்பாட்டின் அடையாளம், நமது மொழி தமிழ், அது ஒரு [[செம்மொழி]] அதை நமது குழந்தைகளுக்கும் கற்று கொடுத்தால் தான் அவர்களிடம் எமது தமிழ் பற்றை வளர்க்க முடியும், அவ்வாறு இல்லாத விடுத்து அந்நிய தேசங்களில் வாழும் குழந்தைளான இவர்கள் தமது தாய் மொழியை மறக்கும் சூழ்நிலை அபாயம் இருப்பதை உணர்ந்து இந்த செயல் திட்டத்தை நடாத்தி வருகின்றனர்.
 
 
இந்த திட்டத்தை ஹொங்கொங் இந்திய முஸ்லிம் கழகமும், தமிழ் பண்பாட்டு கழகமும் இணைந்து ஊக்குவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
 
 
தமிழர் திருநாளாம் தைப்பொங்களையும் இவர்கள் வகுப்புகளில் குழந்தைகளுடன் கூடி கொண்டாடி மகிழ்கின்றனர்.
 
 
தமிழ் மொழி கற்கும் குழந்தைகளும் மிக ஆர்வத்துடன் தமிழ் மற்றும் திருக்குறள் கற்பதையும் காணக்கூடியதாக உள்ளது.
 
 
==வெளி இணைப்புகள்==
 
 
[http://www.youtube.com/user/ramhkg காணொளி காட்சிகளை இங்கே பார்க்கலாம்]
"https://ta.wikipedia.org/wiki/ஹொங்கொங்கில்_தமிழ்_மொழி" இலிருந்து மீள்விக்கப்பட்டது