பொலன்னறுவை இந்துக் கோயில்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி removing category per CFD
வரிசை 8:
பத்தாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில், இலங்கை மீது படையெடுத்த [[இராஜராஜ சோழன்]] அந்நாட்டின் தலைநகரமாக இருந்த [[அனுராதபுரம்|அனுராதபுரத்தைக்]] கைப்பற்றினான். இதன் மூலம் இலங்கையின் வடபகுதி சோழரின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. அது ''மும்முடிச் சோழ மண்டலம்'' என்னும் பெயருடன் சோழப்பேரரசின் ஒரு பகுதியாக ஆனது. போரில் அழிந்துபோன அனுராதபுரத்தைக் கைவிட்டு, அதற்குத் தென்கிழக்கில் இருந்த பொலன்னறுவை [[தலைநகரம்]] ஆக்கப்பட்டது. [[1017]] ஆம் ஆண்டில் இராஜராஜனின் மகனான [[இராஜேந்திர சோழன்]] மீண்டும் இலங்கை மீது படையெடுத்து அந்நாடு முழுவதையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தான். தொடர்ந்து சோழரின் ஆட்சி இலங்கையில் [[1070]] ஆம் ஆண்டுவரை இடம்பெற்றது.
 
சோழர் இலங்கையில் ஒரு ஆக்கிரமிப்புப் படை என்பதாலும், [[சிங்களவர்|சிங்களவர்களுக்கும்]], சோழர்களுக்கும் நீண்டகாலப் பகை இருந்ததாலும், ஆட்சியைப் பாதுகாப்பதற்காகச் சோழர், ஏராளமான தமிழ்நாட்டுப் படைகளையும், அதிகாரிகளையும், அலுவலர்களையும் இலங்கையில் வைத்திருக்கவேண்டி இருந்திருக்கும் என்பதில் ஐயம் இல்லை. இவர்கள் பெரும்பாலும் இந்துக்களாகவே இருந்திருப்பார்கள். இப்பகுதிகளில் வாழ்ந்த [[சிங்களவர்]]கள் [[பௌத்தர்]]கள் என்பதால், இந்துக்களின் வழிபாட்டிடங்கள் இங்கே இருந்திருக்க முடியாது. எனவே சோழர் ஆட்சிக்காலத்தில் பல இந்துக் கோயில்கள் பொலன்னறுவையில் அமைக்கப்பட்டன.
 
==கோயில்களின் விபரங்கள்==
வரிசை 20:
==கட்டிடக்கலை==
 
இங்கே கட்டப்பட்ட பெரும்பாலான இந்துக் கோயில்கள் அளவிற் சிறியன. இங்கே வாழ்ந்த இந்துக்களிற் பலர் இவ்விடங்களில் நிரந்தரமான ஆர்வம் கொண்டவர்களாக இருந்திருக்க முடியாது. அத்துடன், உள்ளூர் மக்களை மதம் மாற்றும் முயற்சியிலும் சோழர்கள் ஈடுபடவில்லை இதனால், தமிழ் நாட்டில் கட்டப்பட்டது போன்ற பெரிய கோயில்கள் இலங்கையில் சோழர்களால் கட்டப்படவில்லை.
 
வானவன் மாதேவி ஈஸ்வரத்தின் அமைப்பு சோழர் காலத் [[திராவிடக் கட்டிடக்கலை]]ப் பாணியைச் சேர்ந்தது. இக்காலத்தில் அமைக்கப்பட்ட ஏனைய கோயில்களும், இப்பாணியையே பின்பற்றியிருக்கும் எனலாம்.
 
==குறிப்புகள்==
வரிசை 34:
* [[வானவன் மாதேவி ஈச்வரம்]]
 
[[பகுப்பு: இந்துக் கோயில்கள்]]
[[பகுப்பு:ஈழத்துக் கோயில்கள்]]
[[பகுப்பு: திராவிடக் கட்டிடக்கலை]]
[[பகுப்பு:இலங்கையின் தொல்லியற் களங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/பொலன்னறுவை_இந்துக்_கோயில்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது