பழைய கற்காலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Kurinjinet (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 7:
ஆண், பெண்களுக்கு இடையே ஏறத்தாழ சமநிலை நிலவியது. ஆண் வேட்டையில் ஈடுபடப் பெண் உணவு சேகரிப்பதிலும், குழந்தைகளைக் கவனிப்பதிலும் ஈடுபட்டாள். இதற்கு மேலுள்ள வேலைகளை இரு பகுதியினரும் பகிர்ந்து செய்ததாகவே தெரிகிறது. அவர்கள் [[தாவரம்|தாவரங்கள்]], [[மூலிகை]]கள் என்பன பற்றிக் குறிப்பிடத்தக்க அறிவைப் பெற்றிருந்தனர். இதனால் அவர்களுடைய உணவு சுகாதாரமானதாக இருக்க முடிந்தது.
 
அவர்களுடைய தொழில்நுட்பத்[[தொழினுட்பம்|தொழினுட்பத் திறனை]], அவர்கள் உருவாக்கிய, உடைக்கப்பட்ட கற்களினாலும், தீக்கல்லினாலும் ஆன பயன்பாட்டுப் பொருட்கள் (''artifacts''), [[மரம்]], களிமண், [[விலங்கு]]ப் பகுதிகளின் பயன்பாடு, ஆகியவற்றின் மூலம் அறிந்து கொள்ளமுடிகிறது. அவர்களுடைய கருவிகள் பல்வேறுபட்டவை. [[கத்தி]]கள், [[கோடரி]]கள், சுரண்டிகள், [[சுத்தியல்]]கள், [[ஊசி]]கள், [[ஈட்டி]]கள், [[தூண்டில்]]கள், [[கேடயம்|கேடயங்கள்]], கவசங்கள், [[அம்பு வில்|அம்பு விற்கள்]] ஆகியவை இவற்றுள் அடங்கும்.
 
இக் காலத்தில் பல்வேறு இடங்களில், பனிக்கட்டி [[வீடு]]கள், சிறிய மிதவைகள் போன்றவை பற்றி அறிந்திருந்ததுடன், பாம்புகளின் [[நஞ்சு]], [[ஐதரோசயனிக் அமிலம்]] (hydrocyanic acid), [[அல்கலோயிட்டு]]கள் போன்ற நச்சுப் பொருட்கள் பற்றியும் அறிந்திருந்ததாகத் தெரியவருகிறது. குளிரில் உறையவைத்தல், காயவைத்தல், மெழுகு, களிமண் ஆகியவற்றைப் பயன்படுத்திக் காற்றுப்புகாது அடைத்தல், போன்ற உணவுகள் கெட்டுப்போகாது காக்கும் முறைகள் பற்றிய அறிவும் அவர்களுக்கு இருந்தது.
"https://ta.wikipedia.org/wiki/பழைய_கற்காலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது