ஏதெனா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

2,012 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
 
குழந்தையாக இருந்த எரிச்டோனியசை ஏதெனா சிசுடா எனப்படும் ஒரு சிறு பெட்டியில் அடைத்து ஏதென்சில் இருந்த எர்சி, பன்ட்ரோசசு மற்றும் அக்லோலசு மூன்று சகோதரிகளிடம் பார்த்துக்கொள்ளுமாறு கொடுத்தார். அந்த பெட்டியில் என்ன இருக்கிறது என்று கூறாத ஏதெனா அவர்களிடம் இந்தப் பெட்டியை திறக்கக் கூடாது என்று எச்சரித்தார். ஆனால் அந்த சகோதரிகளுள் இருவர் ஆர்வ மிகுதியால் அந்தப் பெட்டியைத் திறந்து விட்டனர். அப்போது ஒரு பாம்பு வெளிப்பட்டது. அது அவர்களைத் தூக்கி அக்ரோபோலிசு நகரத்திற்கு வீசியது.<ref>Graves, Robert, ''The Greek Myths I'', "The Nature and Deeds of Athena" 25.d.</ref>பிறகு வளர்ந்த எரிச்டோனியசு ஏதென்சு நகரின் புகழ்பெற்ற அரசன் ஆனான்.
 
==எர்மீசு==
எர்மீசு கடவுள் மூன்று சகோதரிகளில் ஒருவரான எர்சியின் மேல் காமம் கொண்டு அவருடன் உறவாட நினைத்தார். ஒருநாள் மூன்று சகோதரிகளும் ஏதெனாவின் கோவிலிற்கு வந்து வழிபட்டனர். அவர்கள் ஏதெனாவிற்குக் காணிக்கையாக பணத்தைக் கொடுத்தனர். அப்போது எர்மீசு அக்லௌலசிடம் எர்சியுடன் உறவாட தனக்கு உதவும்படி வேண்டினார். அதற்குப் பதிலாக அக்லோலசு எர்மீசிடம் பணம் கேட்டார். எர்மீசு அந்த சகோதரிகள் கொடுத்த காணிக்கை பணத்தையே எடுத்து அவளிடம் கொடுத்து விட்டார். அக்லௌலசின் பேராசையை அறிந்த ஏதெனா அவருக்கு தண்டனை அளிக்க நினைத்தார். அதனால் பொறாமைக் கடவுள் இன்விடியாவை அழைத்து அக்லௌலசுக்கு எர்சி மேல் பொறாமை ஏற்படுமாறு செய்தார். இதனால் எர்சியுடன் உறவாட வந்த எர்மீசை அக்லோயா வழியிலேயே தடுத்துவிட்டார். இதனால் கோபம் கொண்ட எர்மீசு அக்லோலசை கல்லாக மாற்றிவிடுகிறார்.
 
 
1,071

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2262586" இருந்து மீள்விக்கப்பட்டது