"முதலாம் சந்திரகுப்தர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,797 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
'''சந்திரகுப்தர்''' அல்லது '''முதலாம் சந்திரகுப்தர்''' (Chandragupta) , [[குப்தப் பேரரசு|குப்தப் பேரரசின்]] மூன்றாவது பேரரசர் ஆவார். குப்த பேரரசை விரிவாக்கியவர்களில் முதலாமவர். கி பி 320 முதல் 335 முடிய குப்த பேரரசை ஆட்சி செய்தவர். இவரது மகன் [[சமுத்திரகுப்தர்]] மற்றும் பேரன் [[இரண்டாம் சந்திரகுப்தர்]] குப்தப் பேரரசின் முக்கிய பேரரசர்கள் ஆவார். இவர் தற்கால [[உத்திரப் பிரதேசம்]], [[பீகார்]] மற்றும் [[நேபாளம்|நேபாளத்தின்]] பெரும் பகுதிகளை ஆட்சி செய்தவர்.<ref>[http://www.britannica.com/biography/Chandra-Gupta-I Chandra Gupta I]</ref>
 
ஸ்ரீகுப்தரின் பேரனும், கடோற்கஜனின் மகனுமாகிய முதலாம் சந்திரகுப்தர் '''மகாராஜா''' பட்டத்துடன் குப்தப் பேரரசின் ஆட்சியாளராக இருந்தார். கி பி 320-இல் குப்தப் பேரரசின் அரியணை ஏறிய, முதலாம் சந்திரகுப்தர் [[லிச்சாவி]] நாட்டு இளவரசியை திருமணம் செய்ததன் மூலம், முதலாம் சந்திரகுப்தரின் அரசியல் ஆதிக்கம் கூடியது. இவரது பதினைந்து ஆண்டு கால ஆட்சியில், [[வட இந்தியா]]வின் தற்கால [[பிகார்]] மற்றும் வடக்கு [[உத்தரப் பிரதேசம்|உத்தரப் பிரதேசப்]] பகுதிகளில் குப்தப் பேரரசை விரிவாக்கினார்.
 
முதலாம் சந்திரகுப்தருக்குப் பின் அவரது மகன் [[சமுத்திரகுப்தர்]] குப்தப் பேரரசை மேலும் விரிவாக்கினார்.
==மேற்கோள்கள்==
{{reflist}}
* {{Citation|last1=Majumdar|first1=Ramesh Chandra|title=Ancient India|publisher=New Delhi:Motilal Banarsidass.-new Delhi|url=https://books.google.co.in/books?id=XNxiN5tzKOgC&pg=PR2&dq=Ancient+India,+New+Delhi:Motilal+Banarsidass,+ISBN+81-208-0436-8&hl=en&sa=X&ei=AGveVKO8E4zluQTMt4D4AQ&ved=0CB4Q6AEwAA#v=onepage&q=Ancient%20India%2C%20New%20Delhi%3AMotilal%20Banarsidass%2C%20ISBN%2081-208-0436-8&f=false|date=2013|ISBN=81-208-0436-8}}
 
{{s-start}}
{{s-reg}}
{{s-bef|before=கடோற்கஜன்}}
{{s-ttl|title=[[குப்தப் பேரரசு]]<br>ஆட்சிக் காலம்:கி பி 320 – 335}}
{{s-aft|after=[[சமுத்திரகுப்தர்]]}}
{{end}}
 
[[பகுப்பு:இந்தியப் பேரரசர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2263923" இருந்து மீள்விக்கப்பட்டது