பொன்னுருக்கல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Kurinjinet (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 11:
அந்த தங்கத்தை வைத்து அவர்களின் எதிர்கால வாழ்க்கையைச் சொல்லக் கூடியவர்கள் யாழ்ப்பாணத்தில் இன்றும் இருக்கிறார்கள். இதற்கு காரணம் அவர்களின் வயதா, அனுபவமா அல்லது அதையும் தாண்டி ஏதாவது சக்தியா என்பது கேள்விக் குறியாகவே உள்ளது.
 
பொன்னுருக்கிய தங்கத்தை தாலி செய்வதற்கு ஒப்படைப்பதோடு குறித்த நாளில் இரு வீடுகளிலும் [[கன்னிக் கால்]] அல்லது பந்தக்கால் ஊன்ற வேண்டும். இந்நிகழ்ச்சிக்கு [[முள் முருங்கை]]யைப் பயன்படுத்துவார்கள். முருங்கைத் தடி நேராக இருக்க வேண்டும் என்பது ஐதீகம். இதன் காரணமாக நிறைந்த நேரான வாழ்க்கை கிடைக்கும் என்பது நம்பிக்கை.
 
இந்த நாளில் இருந்து திருமண நாள் வரை மணமக்கள் ஒருவரை ஒருவர் பார்க்கக் கூடாது என்பதும் மணமக்கள் வெளியில் செல்லக் கூடாது என்பதும் சம்பிரயதாயமாகும். குறித்த நன்னாளில் இரு வீடுகளிலும் திருமணத்திற்கு உரிய பலகாரங்களைச் செய்யத் தொடங்குவார்கள்.
 
இவ்வாறு தமிழர்களின் இந்து திருமணங்களில் பொன்னுருக்கல் இன்றியமையாத ஒரு சுப நிகழ்வாகக் கருதப்படுகின்றது.
 
==தென் தமிழகம்==
[[பாண்டிய மன்னர்]]கள் ஆண்ட தென்தமிழகத்திலும் இந்த பராம்பரிய வழக்கம் சில இனங்களில் இன்றும் கடைபிடிக்கப்படுகிறது.
 
==உசாத்துணை==
"https://ta.wikipedia.org/wiki/பொன்னுருக்கல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது