அகழ்வாய்வு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 20 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி adding unreferened template to articles
வரிசை 1:
{{சான்றில்லை}}
[[தொல்லியல்|தொல்லியலில்]] '''அகழ்வாய்வு''' என்பது தொல்லியல் எச்சங்களை வெளிக்கொணர்தல், செயற்படுதல் (processing), பதிவு செய்தல் என்பவற்றை ஒருங்கே குறிக்கிறது. இச்சொல் இன்னொரு பொருளிலும் பயன்படுத்தப்படுவது உண்டு. இது ஒரு களத்தை ஆய்வு செய்வதற்கான வழிமுறையைப் பயன்படுத்துவதைக் குறிக்கும். இப்படியான அகழ்வாய்வு ஒரு குறிப்பிட்ட [[தொல்லியல் களம்]] அல்லது தொடர்புள்ள பல களங்களோடு சம்பந்தப்படுவதுடன், இது பல ஆண்டுகள் நடத்தப்படவும் கூடும்.
 
அகழ்வாய்வுச் செயற்பாட்டினுள் பல சிறப்பு நுட்பங்கள் உள்ளன. ஒவ்வொரு அகழ்வும் கொண்டிருக்கக்கூடிய அதற்கேயுரிய சிறப்பம்சங்கள் தொல்லியலாளர் கைக்கொள்ள வேண்டிய அணுகுமுறையைத் தீர்மானிக்கின்றன. வளம் மற்றும் பல்வேறு நடைமுறைப் பிரச்சினைகளினால் [[தொல்லியலாளர்]] விரும்பும்போதெல்லாம் அகழ்வாய்வுகளைச் செய்ய முடிவதில்லை. இதன் காரணமாக அறியப்பட்ட களங்கள் பல வேண்டுமென்றே அகழ்வாய்வுக்கு உட்படுத்தப்படாமல் விடப்படுகின்றன. இவை பிற்கால ஆய்வுகளுக்காகப் பாதுகாக்கப்படுகின்றன. சில வேளைகளில் பிற்காலத்தில் ஏற்படக்கூடிய [[தொழில்நுட்பம்|தொழில்நுட்ப]] வளர்ச்சி காரணமாக பின்னர் நடத்தப்படும் ஆய்வுகள் கூடிய பயனுள்ள விளைவுகளைத் தரும் என்ற நம்பிக்கையிலும் அகழ்வாய்வுகளைத் தாமதப்படுத்துவது உண்டு.
 
ஓரிடத்தில் தொல்லியல் எச்சங்கள் இருப்பதை, [[நிலம் ஊடுருவும் ராடார்]]கள் போன்ற [[தொலையுணர்தல்]] முறைகள் மூலம் ஓரளவு துல்லியமாகவே அறிந்து கொள்ள முடியும். இம்முறைமூலம் களமொன்றின் வளர்ச்சி குறித்த மேலோட்டமான தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியுமாயினும். நுணுக்கமான அம்சங்கள் பற்றி அறிந்து கொள்வதற்கு அகழ்வாய்வு இன்றியமையாதது.

==அகழ்வாய்வின் வளர்ச்சி வரலாறு==
வரி 12 ⟶ 10:
 
==களத் தகவல்==
தொல்லியல் பொருட்கள் பெரும்பாலும் ஒருகாலத்தில் அவ்விடங்களிலே குப்பைகளாக விடப்பட்டவையாக இருக்கின்றன. இவை அங்கு அடுத்தடுத்து இடம்பெறும் நிகழ்வுகளினால் அவ்விடத்தில் குவிகின்றன. ஒரு தோட்டக்காரன் பெருக்கிக் குவிக்கும் மண்குவியல், அவன் கற்களைக் கொண்டு அமைக்கும் ஒரு நடை பாதை, பின்னர் அவ்விடத்தில் கட்டப்படும் ஒரு சுவர், இன்னொரு காலத்தில் அங்கு அமையும் ஒரு மாட்டுத் தொழுவம், முன்னர் அமைத்த சுவர் இடிதல் போன்ற ஒவ்வொரு நிகழ்வும் அவ்விடத்திலே ஒரு சூழ்நிலையை விட்டுச் செல்கின்றன. இவ்வாறான நிகழ்வுகளின் அடுக்குகள் பொதுவாகத் [[தொல்லியல் தொடரியம்]] (archaeological sequence) அல்லது [[தொல்லியல் பதிவு]]கள் எனப்படுகின்றன. இத் தொடரியத்தை அல்லது பதிவுகளைப் பகுப்பாய்வு செய்வதன் மூலமே அகழ்வாய்வு கடந்தகாலத்தைப் புரிந்து கொள்ள முயல்கிறது.
 
==அகழ்வாய்வு வகைகள்==
வரி 20 ⟶ 18:
 
# ஆய்வுக்குரிய அகழ்வாய்வு - ஒரு இடத்தில் முழு அளவிலான அகழ்வாய்வைச் செய்வதற்கான நேரமும், இடமும் இருக்கும்போது இவ்வகை அகழ்வாய்வு நடத்தப்படுகின்றது. இது தற்போது, போதிய நிதியையும், தன்னார்வ உழைப்பையும் பெற்றுக்கொள்ளக்கூடிய கல்வியாளர்கள் மற்றும் தனிப்பட்ட அமைப்புக்களினால் கைக்கொள்ளப்படுகின்றது. அகழ்வின் அளவு வேலைகள் நடைபெறும் காலத்தில் வேலைகளை இயக்குபவரால் தீர்மானிக்கப்படுகின்றது.
# வளர்ச்சி சார்ந்த அகழ்வாய்வு - இது தொழில்முறைத் தொல்லியலாளர்களால் செய்யப்படுகிறது. தொல்லியல் களம், கட்டிடச் செயற்பாடு போன்ற வளர்ச்சித் திட்டங்களினால் பாதிக்கப்படும் நிலை வரும்போது இவ்வகை அகழ்வாய்வுகள் நடத்தப்படுகின்றன. பொதுவாக வளர்ச்சித் திட்டங்களை நடைமுறைப் படுத்துபவர்களே இவ்வாய்வுக்கான [[நிதி]]யையும் வழங்குவர். இத்தகைய சூழ்நிலைகளில் நேரம் மட்டுப்பட்டதாக இருப்பதுடன், ஆய்வுகளும் வளர்ச்சித் திட்டத்தினால் பாதிப்புறும் இடங்களை மட்டுமே கவனத்தில் கொள்கின்றன. வேலையாட்களும் பொதுவாக அகழ்வாய்வு செய்வதில் தேர்ச்சி பெற்றவர்களாக இருப்பர்.
 
[[பகுப்பு:தொல்லியல்]]
"https://ta.wikipedia.org/wiki/அகழ்வாய்வு" இலிருந்து மீள்விக்கப்பட்டது