மருதன் இளநாகனார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி Semmal50ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 1:
மருதன் இளநாகனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். சங்கநூல்களில் இவரது பாடல்கள் 79 உள்ளன.
இவர் மதுரைக்கண் இருந்தவர், மதுரை மருதன் இளநாகனார் எனவும் கூறப்பெறுபவர். அகநானூற்றுள் 23, கலித்தொகையுள் மருதம் பற்றிய செய்யுட்கள் 35, குறுந்தொகையுள் 4, நற்றிணை செய்யுள் 12 ஆகியவும் இவர் பாடியனவாகக் காணப்பெறும். மருதத்திணைச் செய்யுட்கள், செய்வதில் இவர் வல்லவர். இறையனால் அகப்பொருளுக்கு உரை இயற்றியவருள் இவரும் ஒருவர். பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறனையும் நாஞ்சில் வள்ளுவனையும் இவர் பாடியுள்ளார். “கெந்தில் நெடுவேள் நிலை இய காமர் வியன்துறைக் கடுவளி தொகுப்ப ஈண்டிய வடுவாழ் எக்கர் மணலினும் பலவாக வாழிய’ என இவர் நன்மாறனை வாழ்த்துகின்றார். இதனாற் குமரனுக்கும் ‘நெடுவேள்’ என்னும் பெயர் உண்டென்று அறிகின்றோம். ‘கலிகெழு கடவுள் கந்தங் கைவிடப், பலிகண் மாறியபாழ் படு பொதியில் நரை மூதாளர் நாயிடக் குழிந்த வல்லின் நல்லகம்’ எனக் (புறம் 56) கூறும் இவரது சொற்கள், அக்காலதுப் பொரியிலையே நம் கண்முன் கொணர்ந்து நிறுத்துவனவாம். அறநெறி முற்றே அரசின் கொற்றம், அதனால் நமரெனக்கோல் கோடாதும், பிறர் எனக் குணங் கொல்லாதும், ஓர் அரசன் விளங்கவேண்டும் என்று அறிவுறுத்துகின்றார் இவர் (புறம் 55) ஒரு கன்னியை அவளைப் பெற்றோர் தர மறுத்தலால், வந்தோர் போரிட அவ்வூரே அழந்ததனை மரம்படு சிறுதீப்போல அணங்காயினள் தான் பிறந்த ஊர்க்கே (புறம் 339) என்று கூறியவர் இவர் பரங்குன்றத்து முருகனை அந்துவன் பாடிய சிறப்பையும் இவர் போற்றுவர் (அகம், 34) பிட்டன் என்பனது சிறப்பையும், வாணனது சிறப்பையும் இவர் குறித்துள்ளனர். பரசுராமர் செல்லூர்க்கண் யாகஞ் செய்த செய்தியை இவர் கூறுகின்றனர். (220) இவர் செய்யுட்கள் இயற்கை எழிலையும் மக்களது வாழ்வியலையும் சுவையாக எடுத்துக் காட்டும் ஒப்பற்ற ஓவியங்கள் ஆகும். ஏதிலாளன் கவலை கவற்ற ஒரு முலை அறுத்த திருமாவுண்ணி செய்தியைக் கூறியவரும் இவரே.
==பாடல்கள்==
* அகநானூறு 34, 59, 77, 90, 104,<sup>(5)</sup> 121, 131, 184, 193, 206,<sup>(10)</sup> 220, 245, 255, 269, 283,<sup>(15)</sup> 297, 312, 343, 358, 365,<sup>(20)</sup> 368, 380, 387, <sup>(ஆகமொத்தம் 23 பாடல்)</sup>
* கலித்தொகை - மருதக் கலி 35 பாடல்
* குறிந்தொகை 77, 160, 279, 367, <sup>(4 பாடல்)</sup>
* நற்றிணை 21, 39, 103, 194, 216,<sup>(5 பாடல்)</sup> 283, 290, 302, 326, 341,<sup>(10 பாடல்)</sup> 362, 392,<sup>(ஆகமொத்தம் 12 பாடல்)</sup>
* புறநானூறு 52<ref>[http://vaiyan.blogspot.in/2014/10/052.html மருதன் இளநாகனார் பாடல் புறநானூறு 52]</ref>, 55<ref>[http://vaiyan.blogspot.in/2014/10/055.html மருதன் இளநாகனார் பாடல் புறநானூறு 55]</ref>, 138<ref>[http://vaiyan.blogspot.in/2014/12/138.html?view=flipcard மருதன் இளநாகனார் பாடல் புறநானூறு 138]</ref>, 139<ref>[http://vaiyan.blogspot.in/2014/12/139.html?view=flipcard மருதன் இளநாகனார் பாடல் புறநானூறு 139]</ref>, 349,(5 பாடல்)
:ஆகியவை
 
==புலவர் பெயர்==
கலித்தொகையிலுள்ள மருதத்திணைப் பாடல்களை இவர் பாடி 'மருதன்' என்னும் அடைமொழியை இவர் பெற்றுள்ளார்.
==பாடல் சொல்லும் செய்திகள்==
 
==வெளி இணைப்புகள்==
 
[[பகுப்பு:சங்கப் புலவர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/மருதன்_இளநாகனார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது