அசோகர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 68:
 
===புத்த மதம்===
அசோகர் படிப்படியாக புத்த மதத்தை தழுவி கி.பி 263 இல் முற்றிலுமாக உப குப்தர் தலைமையில் புத்தமதத்திற்கு மாறினார். போருக்குப் பிறகு அசோகர் ஒரு சாக்கிய உபாசங்கர் ஆனார். சாக்கிய உபாசங்கர் என்றால் சாதாரன சீடர் என்பது பொருள். இரண்டறை ஆண்டுகள் கழித்து புத்த பிக்குவாக மாறினார். அதன் பிறகு வேட்டையாடுதலைக் கைவிட்டுவிட்டு புத்தகயாவிற்கு புனிதப் பயணம் மேற்கொண்டார்.

அசோகர் பாடாலிபுத்திரத்தில் மூன்றாவது புத்த சமய மாநாட்டை நடத்தினார். மெக்காலி புத்ததிஸ்ஸா இதற்கு தலைமை வகித்தார். இந்த புத்த மாநாட்டிலேயே திரிபீடகங்கள் இறுதி வடிவம் பெற்றன. புத்தரால் போதிக்கப்பட்டு அசோகரால் பரப்பப்பட்டது ஹீனயானம் ஆகும். தேவனாம்பியாச பிரியதர்ஷன் என்ற பெயரிலேயே அசோகர் ஆட்சி புரிந்தார் ,அவர் எழுதிய கல்வெட்டுக்களிலும் இதே பெயர் காணப்பட்டது எனவே அசோகர் தான் அந்த புகழ்பெற்ற கலிங்கப்போர் புரிந்த சக்ரவர்த்தி என்பது நீண்ட நாட்களுக்கு தெரியாமல் இருந்தது,மாஸ்கி என்ற இடத்தில் உள்ள கல்வெட்டில் மட்டும் அசோகர் என்ற பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. பின்னர் ஜேம்ஸ் பிரின்செப் என்ற கல்வெட்டு ஆய்வாளர் தான் இருவரும் ஒருவரே என்பதனை நிரூபித்தார்; இல்லை எனில், இன்று நமக்கு அசோகர் குறித்த விவரங்கள் தெரியாமலே போய் இருக்கும்.
தனது சொத்துக்கள் அனைத்தையும் புத்த சங்கத்திற்கு தானம் அளித்து விட்டு மிகவும் எளிமையாக வாழ்ந்தார்.
 
"https://ta.wikipedia.org/wiki/அசோகர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது