பயனர்:TNSEPONKASI(kanyakumari Dist)/மணல்தொட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 2:
'''டென்சிங் நார்கே'''
டென்சிங் நார்கே 1914-ல் திபெத்தில் பிறந்தார்.இவர் தனது இருபத்தொன்றாம் வயதில் எரிக் ஷிப்டன் தலைமையிலான இமயமலையேறும் குழுவில் இடம் பிடித்தார்.இரண்டாம் உலகப்போருக்கு முன்பு வரை எவரெஸ்டின் மீது ஏற திபெத் அரசாங்கம் ஆங்கிலேயருக்கு மட்டுமே அனுமதி வழங்கியிருந்தது.இருப்பினும் அக்குழுவினர் திபெத்திற்குள் நுழைய அனுமதி பெறுவதில் சிரமம் இருந்ததால் குறிப்பிட்ட இடத்தை சென்றடைந்ததும் அடிவாரம் திரும்பியது.ஆகையினால் டென்சிங் நார்கேவின் முதல் முயற்சியில் மலை உச்சிக்கு செல்ல முடியவில்லை.
== '''நேபாள அரசின் அனுமதி''' ==
இரண்டாம் உலகப்போருக்குப்பின் எந்த நாட்டினராக இருந்தாலும் மலையின் தென்புறம் வழியாக எவரெஸ்டில் ஏறலாம் என நேபாள அரசு அனுமதி வழங்கியது.
=== '''பிரிட்டிஷ் குழுவினர்''' ===
மேஜர் சார்லஸ் வில்லி தலைமையில் ஒரு குழுவினர் எவரெஸ்ட் மலையில் ஏற வந்தனர்.அப்போது டென்சிங் நல்ல உடல்நிலையுடன் இருப்பதாக மருத்துவ குழு கூறியதால் அவரும் அக்குழுவில் இணைத்துக்கொள்ள்ப்பட்டார்.டென்சிங் நார்கே தனது 39-வது வயதில் ஏழாவது முறையாக மலையேற தயாரானார்.அக்குழுவில் நியூஸிலாந்து நாட்டைச் சார்ந்த சேர் எட்மண்ட் ஹில்லாரியும் இடம் பெற்றிருந்தார்.இருவரும் சில முகாம்களைக் கடந்து, பல தடைகளைத் தாண்டி 1953 மே 29 காலை 11.30 மணிக்கு எவரெஸ்ட் மலை உச்சியை அடைந்தனர்.மகிழ்ச்சியில் இருவரும் ஒருவரை ஒருவர் கட்டித் தழுவிக் கொண்டனர். தாம் கொண்டு சென்ற பிரிட்டிஷ் கொடி,இந்தியக் கொடி மற்றும் நேபாளக் கொடிகளை எவரெஸ்ட் மலை உச்சியில் பறக்கவிட்டார் டென்சிங்.தனது சட்டைப்பையில் வைத்திருந்த மிட்டாய்களை எடுத்து, சிகரத்தின் உச்சியில் பனியை இலேசாக தோண்டி அதில் வைத்து அதன்மீது தாம் கொண்ட அதீத அன்பினை வெளிப்படுத்தினார்.டென்சிங்கும் ஹில்லாரியும் சுமார் 15 நிமிடங்கள் மலை உச்சியில் நின்றதுடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டனர்.மறுநாள் பிரிட்டிஷ் இளவரசி எலிசபெத்தின் முடிசூட்டு விழா. அன்றைய தினம் இச்செய்தி உலகுக்கு அறிவிக்கப்பட்டது.
'''நேருவின் உபசரிப்பு'''
"https://ta.wikipedia.org/wiki/பயனர்:TNSEPONKASI(kanyakumari_Dist)/மணல்தொட்டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது