திரைப்படம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
திரைப்பட வரலாறும் திரைப்படக் கருவிகளும்
வரிசை 31:
 
ஒளி ஊடுருவும் பிலிமில் படங்களை பிரிண்ட் செய்து வேகமாக இயக்குவதன் மூலம் ஒரு காட்சிப்பொருளாக மாற்ற முடியும் என்று முதன்முதலில் , பெல்ஜியம் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றிய ஜோசப் பிளாட்டே கண்டறிந்தார்.படங்களை ஒன்றிணைத்து சலனமடைய செய்த முறையும், படம் பிடிக்க செலுலாயிட் பிலிமையும் கண்டுபிடித்தனர்.இதை வைத்து ஒருவர் மட்டுமே பார்க்கக்கூடிய ‘கினிட்டோஸ்கோப்’ என்ற கருவியை தாமஸ் ஆல்வா எடிசன் 1893 வருடம் கண்டுபிடித்தார்.சி.பிரான்சிஸ் ஜென்கின்ஸ் என்ற அமெரிக்க நாட்டவர் அசையும் படத்தை பலரும் பார்க்கும் வகையில் திரையில் விழச்செய்யும் கருவி ஒன்றை முதன்முதலாக வடிவமைத்தார். இவருடைய கண்டுபிடிப்பின் அடிப்படையிலேயே தற்போதைய சினிமா புரொஜக்டர்கள் இயங்குகின்றன.இவ்விரண்டு கருவிகளையும் ஒன்றிணைத்து லூமியர், லூயிஸ் லூமியர் சகோதரர்கள், சலனப்படம் கண்டுபிடிப்பதில் தீவிர கவனம் செலுத்தினார்கள்.அதன் பயணாக அவர்கள் நவீன திரைப்படத்திற்கு வித்திட்டனர்.
 
===நவீன திரைப்படக் காட்சிப்பதிவு முறைகள்===
 
நவீன திரையரங்குகளில் திரைப்படம் காட்ட ஒளி,ஒலிப்படக் கருவி பயன்படுகிறது.இக்கருவியின் மேலும் அடியிலும் வட்டவடிவில் இரு பெட்டிகள் அமையப்பெற்றிருக்கும்.காட்டவேண்டிய படச்சுருள் மேல் பெட்டியில் பொருத்தப்படும்.இதில் பல பற்சக்கரங்களும் சக்கரங்களும் காணப்படும்.படச்சுருளைப் பற்சக்கரங்களுக்கிடையில் செலுத்தி அடிப்பக்கம் உள்ள பெட்டியில் மீளவும் சுற்றிக் கொள்ளும்படி அமைத்துக் கொள்ளப்படும். இவ்வாறு படச்சுருள் பிரிந்து மீண்டும் பழையபடி சுருளாகிக் கொள்ளும்.ஒளிமிகு விளக்குகளுக்கும் உருப்பெருக்கிகளுக்கும் இடையே படம் வரும்.முன்புறமுள்ள மூடிக்கு இரு கைகள் உண்டு.நொடிக்கு எட்டு முறை வீதம் அவை பதினாறு முறை சுழலும்.அப்படிச் சுழலும்போது,அதன் கைகள் ஒளியை மறைக்கும்.அந்த நேரம் படச்சுருள் நழுவி,அடுத்த படம் வந்து நிற்கும்.அதற்குள் மூடியானது திறந்துவிட,பதிவு செய்யப்பட்ட படமானது திரையில் விழுந்து காட்சியாகும்.
 
==முதல் திரைப்படம்==
"https://ta.wikipedia.org/wiki/திரைப்படம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது