திரைப்படம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 53:
 
லூமியர் சகோதரர்கள் காட்டியதை இயங்கும் படமென்றாலும் கதையம்சத்துடன் திகழ்ந்த முதல் திரைப்படமாக ரயில்கொள்ளை உள்ளது. தொடர்ந்து படம் எடுக்க லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் படப்படிப்புத் தளங்கள் தோன்றின.இதனால் புதிய நடிகர்கள் உருவாயினர்.கிரிபித் என்பார் 1915இல் மூன்று மணி நேரம் ஓடக்கூடிய ஒரு நாட்டின் தோற்றம் என்ற படத்தை பல்வேறு புது உத்திகளைப் பயன்படுத்தி எடுத்திருந்தார். இப்படத்தில் முதன்முதலாக 75 பேர் கொண்ட இசைக்குழு இசையமைத்திருந்தது. இதைத்தொடர்ந்து பல ஊமைப்படங்கள் தயாரிக்கப்பட்டன.1927இல் முதல் பேசும் படம் வார்னர் பிரதர்ஸால் ஜான்சிங்கர் என்னும் பெயரில் எடுக்கப்பட்டது.இதில் உரையாடலுடன் பாடல்களும் இடம்பெற்றிருந்தது.நாளடைவில் வண்ணத் திரைப்படங்கள் வெளிவரத்தொடங்கின.
 
===தமிழகத்தில் திரைப்பட வளர்ச்சி===
 
1897இல் திரைப்படக்கலையானது லூமியர் சகோதரர்களால் சென்னை வந்தடைந்தது. 1900இல் மேஜர் வார்விக்,மின் திரையரங்கம் என்னும் முதல் அரங்கத்தைத் தோற்றுவித்தார்.பின்,ரகுபதி வெங்கையா, திருச்சி சாமிக்கண்ணு வின்சென்ட் ஆகிய இருவரும் திரையரங்கு அமைத்தனர்.நடராஜ முதலியார் புரசைவாக்கம் மில்லர்ஸ் ரோட்டில் கட்டிய திரையரங்கில் தென்னிந்தியாவில் முதல் முறையாகத் தயாரிக்கப்பட்ட அவரது கீசகவதம் வெளியிடப்பட்டது.பிரகாஷ் என்பவர் பீஷ்மப் பிரதிகளும் கஜேந்திர மோட்சம்போன்ற புராணப் படங்களைத் தயாரித்து வெளியிட்டார்.
 
தமிழில் முதல் பேசும்படம் காளிதாஸ் 1931இல் வெளியானது.ஹெச்.எம்.ரெட்டி என்பார் இதை இயக்கியிருந்தார்.இதில் தமிழ்,தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் உரையாடல்கள் காணப்பட்டன.பாடல்கள் அதிகம் இடம்பெற்றன.
 
== இவற்றையும் பார்க்கவும் ==
"https://ta.wikipedia.org/wiki/திரைப்படம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது