சிறுகோள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 37:
 
பிற மூன்று குறுங்கோள்களான ([[2 பல்லசு]]வும் [[3 யூனோ]]வும் [[4 வெசுட்டா]]வும்) அடுத்த சில ஆண்டுகளில் கண்டுபிடிக்கப்பட்டன. இவற்றில் வெசுட்டா 1807 இல் கண்டுபிடிக்கப்பட்டது. அடுத்த எட்டு ஆண்டுகள் தேட்ட்த்தில் புதிய குறுங்கோள் ஏதும் கிடைக்காமல் போகவே, அனைவரும் மேலும் தொடர்ந்து தேடுவதை நிறுத்திக்கொண்டனர்.
 
என்றாலும், [[கார்ல் உலூத்விக் என்கே]] 1830 இல் தொடங்கி, தொடர்ந்தும் குறுங்கோள் வேட்டையில் ஈடுபட்டார். பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு, இவர் கடந்த 38 ஆண்டுகளில் முதன்முதலாக, [[5 அசுட்டிரேயியா]]வைக் கண்டுபிடித்தார். அடுத்த இரண்டாண்டுகட்குள், இவர் [[6 கெபே]]வைக் கண்டுபிடித்தார். இதற்குப் பிறகு, பல வானியலாளர்கள் இத்தேடலில் கலந்துகொண்டனர். எனவே 1945 ஐத் தவிர, ஒவ்வோராண்டும் குறைந்தது ஒரு குறுங்கோளாவது கண்டுபிடிக்கப்பட்டது.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சிறுகோள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது