சிறுகோள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 38:
பிற மூன்று குறுங்கோள்களான ([[2 பல்லசு]]வும் [[3 யூனோ]]வும் [[4 வெசுட்டா]]வும்) அடுத்த சில ஆண்டுகளில் கண்டுபிடிக்கப்பட்டன. இவற்றில் வெசுட்டா 1807 இல் கண்டுபிடிக்கப்பட்டது. அடுத்த எட்டு ஆண்டுகள் தேட்ட்த்தில் புதிய குறுங்கோள் ஏதும் கிடைக்காமல் போகவே, அனைவரும் மேலும் தொடர்ந்து தேடுவதை நிறுத்திக்கொண்டனர்.
 
என்றாலும், [[கார்ல் உலூத்விக் என்கே]] 1830 இல் தொடங்கி, தொடர்ந்தும் குறுங்கோள் வேட்டையில் ஈடுபட்டார். பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு, இவர் கடந்த 38 ஆண்டுகளில் முதன்முதலாக, [[5 அசுட்டிரேயியா]]வைக் கண்டுபிடித்தார். அடுத்த இரண்டாண்டுகட்குள், இவர் [[6 கெபே]]வைக் கண்டுபிடித்தார். இதற்குப் பிறகு, பல வானியலாளர்கள் இத்தேடலில் கலந்துகொண்டனர். எனவே 1945 ஐத் தவிர, ஒவ்வோராண்டும் குறைந்தது ஒரு குறுங்கோளாவது கண்டுபிடிக்கப்பட்டது.. இக்காலக் குறுங்கோள் வேட்டையாளர்களாக ஜான் இரசல் இந்த், அன்னிபேல் தெ கசுபாரிசு, கார்ல் தியோடோர் இராபர்ட் உலூதர், எர்மன் மேயர் சாலமன் கோல்டுசுமித், ழீன் சாகோர்னாக், ஜேம்சு பெர்கூசன், [[நார்மன் இராபர்ட் போகுசன்]], எர்னெசுட்டு வில்கெல்ம் இலெபெரச்ட் டெம்பெல், [[ஜேம்சு கிரைகு வாட்சன்]], கிறித்தியான் என்றிச் பிரீடுரிக் பீட்டர்சு, அல்போன்சு உலூயிசு நிகோலசு போரெலி, யோகான் பாலிசா, பவுல் என்றி, பிராசுபர் என்றி எனும் என்றி உடன்பிறப்புகள், ஆகத்தே சார்லோயிசு ஆகியோரைக் குறிப்பிடலாம்.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சிறுகோள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது