உரைநடை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 10:
 
பழைய,புதிய செய்யுள் இலக்கியங்கள்,புதிய உரைநடை நூல்கள்,இதழ்கள் போன்றவற்றை அச்சிட்டுப் பரப்பிட அச்சுக்கருவிகள் நன்குப் பயன்பட்டன.ஆங்கிலேயக் கல்வி முறையைப் பின்பற்றும் தமிழ்க் கல்வி நிலையங்களின் பாடநூல்கள் மூலமாகவும் தமிழில் உரைநடை வளர்ச்சியுற்றது.குறைந்த விலைக்குப் பெறப்பட்ட அச்சிட்ட நூல்களால் படிப்போரின் எண்ணிக்கைக் கூடியது.மேலைநாட்டாரின் அடியொற்றிப் பலரும் கதைகள்,கட்டுரைகள், இதழ்கள்,அகராதிகள்,திறனாய்வுகள் முதலானவற்றில் ஈடுபாடு கொண்டு உரைநடை வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தனர்.
 
===தத்துவப் போதகரின் உரைநடைப் பணி===
 
இத்தாலி நாட்டைச் சேர்ந்த இராபர்ட் டி நொபிலி(1577-1656) என்னும் கிருத்துவப் பாதிரியார் தம் பெயரைத் தத்துவப் போதகர் என்று மாற்றிக்கொண்டு தமிழ்ப்பணி ஆற்றினார்.மந்திரமாலை,ஆத்ம நிர்ணயம்,ஞானோபதேச காண்டம், ஏசுநாதர் சரித்திரம், சுகுண விவரணம்,ஞான தீபிகை,புனர்ஜென்ம ஆட்சேபம்,நித்திய ஜீவன் சல்லாபம், தத்துவக் கண்ணாடித் தீபிகை போன்ற உரைநடை நூல்கள் இவரால் எழுதப்பட்டன.
 
===வீரமாமுனிவரின் உரைநடைத் தொண்டு===
 
இவரும் இத்தாலி நாட்டினர்.இயர்பெயர் கான்ஸ்டான்டியஸ் ஜோசப் பெஸ்கி ஆகும். தைரியநாதர் என்றும் அழைக்கப்பட்டார்.இவரது உரைநடை நூல்கள் பின்வருமாறு:
#பரமார்த்த குரு கதை
#வாமன் கதை
#வேத விளக்கம்
#வேதியர் ஒழுக்கம்
#லூத்தரினத்தியல்பு
#பேதக மறுத்தல்
#திருச்சபைக் கணிதம்
#திருக்கடவூர் நாட்டுத் திருச்சபைக்கு எழுதிய நிருபம்
#ஞானக் கண்ணாடி
#ஞானம் உணர்தல் என்பனவாம்.
 
===சென்னைக் கல்விச் சங்கம்(1812-1854)===
"https://ta.wikipedia.org/wiki/உரைநடை" இலிருந்து மீள்விக்கப்பட்டது