உரைநடை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 52:
#[[சுதேசமித்திரன்]](1882)
#[[மதுரைத் தமிழ்ச் சங்க]]த்தாரின்'[[செந்தமிழ்]]'
 
===உரைநடை வளர்த்த சான்றோர்கள்===
#[[ஆறுமுக நாவலர்]](1822-1888):இவர் யாழ்ப்பாணத்துத் தமிழறிஞராவார்.தமிழ்ப் பாடசாலைகளையும் அச்சுக்கூடத்தையும் நிறுவி,மாணவர்களுக்குரிய தொடக்க வகுப்புகளுக்கான பாடப் புத்தகங்களை எளிய தமிழில் உரைநடையாக எழுதியளித்தார்.[[பெரிய புராணம்]], [[திருவிளையாடற்புராணம்]] ஆகியவற்றை உரைநடையில் எழுதிப் பயனுறச் செய்தார்.பிழையற்ற எளிய இவரது உரைநடைத் தமிழை [[நாவலர் நடை]]என்றனர்.இவர் தமிழ் உரைநடையின் தந்தை{சான்று:மு.வரதராசன், தமிழ் இலக்கிய வரலாறு,ப.251.}என்று அழைக்கப்பெறுகிறார்.
 
#[[மாயூரம் முன்சீப் வேதநாயகம் பிள்ளை]](1826-1889):[[பிரதாப முதலியார் சரித்திரம்]](1876) என்னும் தமிழில் முதல் புதினத்தை இவர் இயற்றினார்.தொடர்ந்து [[சுகுண சுந்தரி]](1887) புதினத்தையும் [[பெண் கல்வி]], [[பெண் மானம்]] ஆகிய உரைநடைகளையும் எழுதினார்.ஆற்றொழுக்கான நகைச்சுவை மிக்க நடை இவருடையது.
 
#வழக்கறிஞர் கே.எஸ்.சீனிவாச பிள்ளை(1852-1929):[[தமிழ் வரலாறு]] என்னும் நூலை எழுதினார்.
 
#[[சிங்காரவேலு முதலியார்]](1853-1931):1910-இல் [[மதுரை நான்காம் தமிழ்ச் சங்கத்தைச்]] சேர்ந்த [[பாண்டித்துரைத் தேவர்]] என்பார் இவருடைய [[அபிதான சிந்தாமணி]] என்ற [[கலைக்களஞ்சிய]] நூலை வெளியிட்டார்.
 
#[[தி.செல்வக்கேசவராய முதலியார்]](1864-1921):பழமொழிகள் கலந்த கட்டுரைகள் மூலம் தமிழ் உரைநடைக்கு புதிய வழிகாட்டினார்.திருவள்ளுவர், கம்பநாடர்,தமிழ்,தமிழ் வியாசங்கள்,வியாசமஞ்சரி,கண்ணகி கதை,அபிநவக்கதைகள்,பஞ்சலட்சணம் முதலான உரைநடைகளையும் அக்பர், ரானடே,ராபின்சன் குரூசோ போன்றோரின் வாழ்க்கை வரலாறுகளையும் எழுதியுள்ளார்.
 
#எம்.எஸ்.பூரணலிங்கம் பிள்ளை(1866-1947):இவர் ஆங்கிலத்தில் தமிழ் இலக்கிய வரலாற்றை எழுதினார்.மேலும்,தமிழ்க் கட்டுரைகள், மருத்துவன் மகள்,தப்பிலி,கதையும் கற்பனையும் போன்ற உரைநடைகளைத் தமிழில் எழுதினார்.
 
#பா.வே.மாணிக்க நாயக்கர்(1871-1931):இவர் எழுதிய நூல்களாவன:கம்பன் புளுகும் வால்மீகி வாய்மையும்,அஞ்ஞானம். [[எள்ளல் நடை]] இவருடையது.
 
#சி.கே.சுப்பிரமணிய முதலியார்(1878-1961):[[சேக்கிழார்]] பற்றிய இவருடைய உரைநடை நூலும் [[ஒரு பித்தனின் சுயசரிதம்]] என்கிற [[தன் வாழ்க்கை வரலாற்று நூலும்]] நல்ல பங்களிப்புகளாவன.
 
 
 
{{இலக்கிய வடிவங்கள்}}
"https://ta.wikipedia.org/wiki/உரைநடை" இலிருந்து மீள்விக்கப்பட்டது