இம்மானுவேல் மாக்ரோன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*துவக்கம்*
(வேறுபாடு ஏதுமில்லை)

01:51, 8 மே 2017 இல் நிலவும் திருத்தம்

எமானுவேல் யீன்-மைக்கேல் மாக்ரன் (பிரெஞ்சு: [ɛmanɥɛl makʁɔ̃]; பிறப்பு 21 டிசம்பர் 1977) பிரெஞ்சு அரசியல்வாதியும் மூத்த குடியியல் பணியாளரும் முன்னாள் முதலீட்டு வங்கியாளரும் பிரான்சின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டவரும் ஆவார். கொள்கையளவில் இவர் நடுநிலையாளராகவும் தாராளமயமானவராகவும் பார்க்கப்படுகிறார்.

வடமேற்கு பிரான்சிலுள்ள அமியின் நகரில் பிறந்த இவர் பாரிசிலுள்ள நான்ட்ரே பல்கலைக்கழகத்தில் மெய்யியலில் பட்டம் பெற்றார் பின்பு முதுகலை பட்டத்தை மக்கள் தொடர்பில் அறிவியலில்போ-வில் பெற்றார். குடியியல் நிருவாக்கத்தில் 2004இல் பட்டம் பெற்றார். பின்பு இவர் வணிக ஆய்வாளராக வணிக ஆய்வு நிறுவனத்தில் பணியாற்றினார், பின்பு ரோத்சைல்டு சி வங்கி்யில் முதலீட்டு வங்கியாளராக பணி புரிந்தார்.


சோசலிசுடு கட்சியின் உறுப்பினராக 2004 முதல் 2009 வரை இருந்தார். 2012இல் பிரான்சுவா ஆலந்து அமைச்சரவையில் துணை பொதுச்செயலாளராக இருந்தார், பின்பு 2014இல் இரண்டாம் வால் அமைச்சரவையில் தொழில், வணிக & மின்னிமம் விவகாரம் போன்ற துறைகளுக்கு அமைச்சராக இருந்தார், அப்போது் வணிகத்து ஏதுவாக பல நடவடிக்கைகளை மேற்கொண்டார். 2016 ஆகத்து அன்று 2017இல் அதிபர் தேர்தலில் போட்டியிட வசதியாக அமைச்சரவையில் இருந்து விலகினார். நவம்பர் 2016 இல் அதிபர் பதவிக்கு நடுநிலையாளராக போட்டியிடப்போவதாக அறிவித்தார். நடுநிலையாளர் என்ற அரசியல் இயக்கத்தை ஏப்பிரல் 2016 அன்று தோற்றுவித்தார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=இம்மானுவேல்_மாக்ரோன்&oldid=2278397" இலிருந்து மீள்விக்கப்பட்டது