ஹொங்கொங்கில் தமிழ் மொழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
HK Arun (பேச்சு | பங்களிப்புகள்)
HK Arun (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 90:
செப்டம்பர் 2004 இல் ஆரவமும் அர்ப்பணிப்பும் மிக்க "இந்திய இளம் நண்பர்கள் குழு" வால் துவங்கப்பட்டது "தமிழ்க் கல்வித் திட்டம்". ஹொங்கொங்கின் இடப் பிரச்சினைகளையும் பணி அழுத்தங்களையும் மீறி நடத்தப்படும் தமிழ் வகுப்புகள், வார இறுதிகளின் மதியப் பொழுதுகளை 35 க்கும் மேற்பட்ட சிறுவர்களுக்கு அர்த்தமுள்ளதாக்கி இருக்கிறது. தமிழைப் பாடமாகப் படிக்க இயலாத ஹொங்கொங் சூழலில் இந்த முயற்சி கவனம் பெறுகிறது. இந்தக் கல்வி இவர்களுக்குத் தமிழ் எழுத்துக்களுக்கு அப்பால் தமிழ் இலக்கியத்த்ஹிற்கான சாளரங்களையும், தமிழ் பண்பாட்டிற்கான கதவுகளையும் திறந்துவிடுமென்பதை இவர்களின் பெற்றோர்கள் உணர்ந்தே இருக்கிறார்கள்.
 
ஹொங்கொங் இந்தியச் சமூகத்தின் மாணவர்கள், எல்லா மொழி வழிச் சிறுபான்மையினரைப் போல், ஆங்கிலப் பயிற்று மொழி (Medium of instruction) மூலமாகவே கற்கிறார்கள்... ஆயினும் தத்தமது தாய்மொழியை ஒரு பாடமாகக் கற்கிற வாய்ப்பு எப்படி இருக்கிறது?
 
ஹொங்கொங்கில் சுமார் 35,000 இந்தியர்கள் வாழுகிறார்கள். இதில் 2,000 தமிழர்கள் 2,000 பேர் இருக்கலாம் என்பது ஒரு மதிப்பீடு. மேற்கு கவ்லூனின் எல்லிஸ் கடோரிப் பள்ளியின் மாணவர்களில் 38% வீதம் இந்தியர்கள், 41% வீதம் பாகிஸ்தானியர்கள். இந்த அரசுப் பள்ளியில் இந்தியும் உருதும் கற்பிக்கப்படுகிறது. எஸ். எஸ் குரு கோவிந்த சிங் கல்வி அறக்கட்டளை சீக்கிய மாணவர்களுக்குப் பஞ்சாபி கற்பிக்கிறது. இவற்றைத் தவிர ஹொங்கொங்கில் முறையாகக் கற்பிக்கப்படும் இந்திய மொழிக் கல்வி குறித்து வேறு விவரமில்லை. கடந்த ஆண்டு வரை இந்தப் பட்டியலில் தமிழ்க் கல்வி இல்லாதிருந்தது. ஹொங்கொங் தமிழர் வரலாற்றில் முறையான பாடத்திட்டத்தோடு தொடர்ச்சியாகத் தமிழ் வகுப்புகள் நடப்பது இதுவே முதல் முறையாக இருக்கக் கூடுமென்பதால் இந்த வகுப்புகள் முக்கியத்துவம் பெறுகின்றன.
 
இந்த பணியின் ஒருங்கிணைப்பாளர் டி. உபைதுல்லா. நிர்வாகப் பணிகளை அப்துல் அஜீஸ் கவனிக்கிறார். பணிடிதச் சாயல் சிறிதுமின்றி பாடஞ் சொல்லித் தருகிறார்கள் காழி அலாவுதீனும் வெங்கட் கிருஸ்ணனும். இந்த வகுப்புகள் துவங்கப்பட்டதன் பின்னனி என்ன? "மொழி, கலாச்சாரத்தின் வேர். தாய் மொழி அறியாத சிறுவர்கள் சொந்த வீட்டிற்குள்ளேயே அந்நியர்களாய் வளர்கிறார்கள். இந்த ஆதங்கந்தான் இந்தத் திட்டத்தின் விதையாய் அமைந்தது", என்கிறார் உபைதுல்லா. "ஹொங்கொங் தமிழ்ச் சமூகச் சிறுவர்கள் தமிழைப் படிக்கவும் பிழையின்றி எழுதவும் கற்பிப்பதுதான் இந்தத் திட்டத்தின் நோக்கம்" என்கிறார் அஜீஸ்.
 
வகுப்புகள் துவங்கப்பட்ட முதல் மாதத்திலேயே 45 மாணவர்கள் சேர்ந்தனர். 5 முதல் 13 வயதிற்கிடையிலான இவர்களின் தமிழ்க் கல்வி, எழுத்துப் பயிற்சிப் புத்தகங்களின் ஜெராக்ஸ் நகல்களில் துவங்கியது. விரைவில் பாடத்திட்டம் (Syllabus) வகுக்கப்பட்டது. அலாவுதீனும் வெங்கட்டும் தமிழ்க் கல்வி குறித்தான இணையத் தளங்களையும், தமிழ் நாட்டுப் பாட நூல் நிறுவனத்தின் நூல்களையும், சிங்கப்பூர் அரசு அங்கீகரித்த தமிழ்ப் பாடநூல்கள் மற்றும் பயிற்சிப் புத்தகங்களையும் பரிசீலித்து, முழ்கிக் கரை சேர்ந்த போது ஹொங்கொங் சூழலுக்கு இசைவான ஒரு பாடத்திட்டம் அவர்கள் கையில் இருந்தது. இப்போது சிங்கப்பூர்ப் பாட நூல்கள் பயன்படுத்தப்படுகின்றன. தமிழகத்தில் தனியார் நிறுவனங்கல் வெளியிட்டிருக்கிற பயிற்சிப் புத்தகங்களில் (exercise books) கோடிட்ட இடங்களை நிரப்புவது, ஹொங்கொங் கல்வித் திட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கு, தனியே எடுத்து எழுதுவதைக் காட்டிலும் எளிதாயிருக்கிறது.
 
மாணவர்கள் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப் பட்டிருந்தனர். எழுத்துக்கள் மட்டும் முதற் பிரிவுக்கும், சொற்களும் சொற்றொடர்களும் பாடலக்ளும் கதைகளும் இரண்டாம் பிரிவிற்கும், வாக்கியங்களும் உரைநடையும்....
 
'''குறிப்பு''': மு. இராமனாதன் அவர்கள் தின்னை, தினமனி, காலச்சுவடு போன்றத் தளங்களில் எழுதிவருகிறார்.
"https://ta.wikipedia.org/wiki/ஹொங்கொங்கில்_தமிழ்_மொழி" இலிருந்து மீள்விக்கப்பட்டது