வால்வெள்ளி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 4:
 
நமது சூரியக் குடும்பத்தில், வால்வெள்ளிகளின் சுற்றுப்பாதை, [[புளூட்டோ]]வையும் தாண்டிச் செல்கிறது. சூரியக் குடும்பத்தின் உட்பகுதிக்குள் வரும் வால்வெள்ளிகளுள் பெரும்பாலானவை மிக நீண்ட நீள்வட்ட வட்டணையைக் கொண்டுள்ளன. "தூசுப் பனிப்பந்துகள் (dirty snowballs)" என்று பெரும்பாலும் விளிக்கப்படும் வால்வெள்ளிகள், பெருமளவு உறைந்த [[காபனீரொட்சைட்டும்]], [[மெத்தேனும்]] மற்றும் [[நீரும்]] என்பவற்றுடன் [[தூசியும்]], [[கனிமம்|கனிமத்திரளைகளும்]] கலந்து உருவானவை.
 
வால்வெள்ளிகள் மிகவும் மையம்பிறழ் நீள்வட்ட வட்டணைகளைக் கொண்டுள்ளன. இவற்றின் வட்டணை அலைவுநேரம் அகன்ற நெடுக்கம் கொண்டதாகும். இந்நெடுக்கம் பல ஆண்டுகளில் இருந்து பல மில்லியன் ஆண்டுகள் வரை அமையும். சிற்றலைவுநேர வால்வெள்ளிகள் நெப்டியூன் வட்டணைக்கு அப்பல் உள்ள கைப்பர்பட்டையில் இருந்து அல்லது அதைச் சார்ந்த சிதறிய வட்டில் இருந்து தோன்றுகின்றன. நெட்டலைவுநேர வால்வெள்ளிகள் கைப்பர்பட்டையின் வெளிப்புறத்தில் இருந்து அடுத்த விண்மீனின் பாதி தொலைவு வரை விரிந்தமையும் ஊர்த் முகிலில் இருந்து தோன்றுவதாக்க் கருதப்படுகின்றன.<ref>{{cite book |title=[[Dark Matter and the Dinosaurs]]: The Astounding Interconnectedness of the Universe |publisher=Ecco/HarperCollins Publishers |location=New York |first=Lisa |last=Randall |pages=104–105 |date=2015 |isbn=978-0-06-232847-2}}</ref> இவை ஈர்ப்பு குற்றலைவுகளால் ஊர்த் முகிலில் இருந்து சூரியனை நோக்கி இயக்குவிக்கப்படுகின்றன, இந்த குற்றலைவுகல் அருகாமையில் உள்ள கடந்த, எதிர்கால, கடந்துசெல்லும் விண்மீன்களால் உருவாக்கப்படுகின்றன. மீவலைய வால்வெள்ளிகள் உடுக்கன இடைவெளிக்குள் பரந்துபோகும் முன் உட்புறச் சூரியக் குடும்பத்தின் ஊடாக்க் கடக்கலாம். அலைவுநேர வால்வெள்ளியின் தோற்றம் வால்வெள்ளியின் மீட்சி எனப்படுகிறது.
 
[[சூரிய ஒண்முகில்]]கள் [[ஒடுக்கம்|ஒடுங்கும்போது]] எஞ்சிய கழிவுகளே வால்வெள்ளிகள் என்று கருதப்படுகின்றன. இத்தகைய ஒண்முகில்களின் வெளி விளிம்புகள், நீர், [[வளிம/வாயு]]நிலையிலன்றித் [[திண்மம் (வடிவவியல்)|திண்ம]] [[இயற்பியல்/பௌதீக நிலை|நிலையில்]] இருக்கக்கூடியதாகவும் போதிய அளவு [[தாழ்வெப்பநிலை|குளிர்ந்த]] நிலையில் இருப்பதாகவும் வாதிடப்படுகிறது. வால்வெள்ளிகளைப் பனியால் சூழப்பட்ட [[சிறுகோள்]] என வரையறுப்பது சரியல்ல. வால்வெள்ளிகளின் வால் எப்போதும் சூரியனுக்கு எதிர்த் திசையிலேயே காணப்படும். மற்றைய வான்பொருட்கள் போலவே வால்வெள்ளிகளும் சூரியனைச் சுற்றுகின்றன. இதற்கு ஒரு உதாரணம் [[ஆல்லே வால்வெள்ளி]]யாகும். இதனை புவியில் இருந்தபடி 76 ஆண்டுகளுக்கு ஒரு முறையே அவதானிக்கலாம்.
"https://ta.wikipedia.org/wiki/வால்வெள்ளி" இலிருந்து மீள்விக்கப்பட்டது