இந்தியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category [[:Category:ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகள்|ஐக்கிய நாடுகள் சபையின் உறுப...
வரிசை 24:
== அரசியல் அமைப்பு ==
[[படிமம்:Constitution of India.jpg|thumb|இந்திய அரசியல் சாசனத்தின் முகவுரை]]
இந்தியா 29 [[மாநிலங்கள்|மாநிலங்களையும்]] 7 [[ஒன்றியப் பகுதி (இந்தியா)|ஒன்றியப் பகுதிகளையும்]] கொண்ட ஒரு [[கூட்டாட்சி|கூட்டமைப்பு]] ஆகும். இக்கூட்டமைப்பு ஆற்றல்பூர்வமாக இந்திய [[விடுதலை (அரசியல்)|சுதந்திர]] [[சமூகவுடமை]] சமய சார்பற்ற [[மக்களாட்சி]]க் குடியரசு என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய [[அரச நிர்வாகம்]] [[சட்டப் பேரவை]], [[செயலாற்றுப் பேரவை]], [[சுதந்திர நீதியமைப்பு]] ஆகிய மூன்று கூறுகளால் பேணப்படுகின்றது. இவை கூட்டாகவும், அதேவேளை ஒவ்வொரு கூறும் மற்றதன் நடவடிக்கைகளை, தவறான ஆற்றல் பயன்பாடுகளை, ஊழலைக் கண்காணிக்ககூடிய வகையில் ஆங்கிலேய நிர்வாக அமைப்புகளைப் பின்பற்றிக் கட்டமைக்கப்பட்டுள்ளன. இந்திய நாட்டின் தலைவராகக் [[இந்தியக் குடியரசுத் தலைவர்| குடியரசுத் தலைவர்]] இருக்கின்றார் எனினும் இவரது கடமைகள் பெரும்பாலும் மரபுவழிச்சடங்குகள் அடிப்படையிலேயே அமைகின்றன. குடியரசுத் தலைவரும் குடியரசுத் துணைத்தலைவரும் பாராளுமன்ற மற்றும் மாநில, நாட்டு சட்டமன்றங்களின் (ஈரவை அமைப்பாயின் கீழவை) உறுப்பினர்களால் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை தேர்ந்தெடுக்கப் படுகின்றனர்.
[[செயலாட்சியர்|செயல் அதிகாரம்]] [[பிரதமர்|பிரதமரிடமும்]] அவரின் தலைமையின் கீழ் இயங்கும் [[இந்தியக் குடியரசின் அமைச்சரவை|அமைச்சரவையிடமும்]] இருக்கின்றது. பாராளுமன்றத்தில் பெரும்பான்மை உள்ள கட்சி அல்லது [[கூட்டணி]]யின் தலைவரைக் குடியரசுத் தலைவர் பிரதமாராக நியமிப்பார். பிரதமரின் ஆலோசனைக்கேற்ப பிற அமைச்சர்களைக் குடியரசுத் தலைவர் அங்கீகரிப்பார்.
 
"https://ta.wikipedia.org/wiki/இந்தியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது