மொழிபெயர்ப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category பயன்பாட்டு மொழியியல்
வரிசை 4:
 
[[தொழிற்புரட்சி]]க்குப் பிறகு, வணிக ஆவணங்களின் தேவைக்காக 18வது நூற்றாண்டின் நடுவிலிருந்து சில மொழிபெயர்ப்பு கூறுகள் முறையான வடிவில் இதற்கென தனிப்பட்ட பள்ளிகளிலும் தொழில்முறை சங்கங்களிலும் கற்பிக்கப்பட்டன.<ref>Andrew Wilson, ''Translators on Translating: Inside the Invisible Art'', Vancouver, CCSP Press, 2009.</ref>
 
===வரலாறு===
 
கி.மு.240-இல் இலீவியஸ் அந்திரோனிக்ஸ் என்பார் கிரேக்க மொழியில் ஹோமர் எழுதிய ஒடிசி என்ற காப்பியத்தை இலத்தீன் மொழியில் மொழிபெயர்த்ததே தொன்மையாகும்.இதன்பின்,சிசிரோ,
காட்டலஸ் முதலானோர் பண்டைக் கிரேக்க இலக்கிய படைப்புகளையும் பிற துறைசார் நூல்களையும் இலத்தீன் மொழியில் மொழிபெயர்த்தனர்.
 
கி.பி.எட்டாம் நூற்றாண்டில் அரேபியர்கள் பாக்தாத் நகரில் மொழிபெயர்ப்பு மையம் ஒன்றை நிறுவி கிரேக்க மொழியிலிருந்து,மெய்யியல், மருத்துவம், வானநூல்,உடலியல், பொருளியல்,எண்ணியல்,சொற்களஞ்சியம் ஆகியவற்றை அரேபிய மொழியில் உருவாக்கினர்.
 
===ஐரோப்பாவில் மொழிபெயர்ப்பு===
 
கி.பி.பன்னிரண்டாம் நூற்றாண்டில் ஸ்பெயின் நாட்டிலுள்ள டொலடோவில் அரபு மொழியிலிருந்த யுகிலிட்ஸின் கொள்கைகள்,குரான்,அறிவியல் நூல்கள் முதலானவை இலத்தீன் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டன.அதன்பின்,15 ஆம் நூற்றாண்டில் விவிலியம் மற்றும் சமய நூல்கள் ஹீப்ரு,ஆங்கிலம்,பிரெஞ்சு, ஜெர்மன்,டச்சு மொழிகளில் மொழிபெயர்ப்பு மேற்கொள்ளப்பட்டது.
 
===இந்தியாவில் மொழிபெயர்ப்பு===
 
பதினேழாம் நூற்றாண்டின் இறுதியில் கிறிஸ்தவ சமயத்தைப் பரப்பிடும் பொருட்டு இந்திய மொழிகளில் விவிலிய கருத்துகள் மொழிபெயர்த்து வழங்கப்பட்டன.பிறகு, இலக்கியம்,தத்துவம்,மருத்துவம்,வேதங்கள், அறிவியல் சார்ந்த நூல்கள் ஐரோப்பிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டன.
 
 
மொழிபெயர்ப்பிற்கு சலிக்காத உழைப்பு தேவையிருப்பதால் 1940களில் பொறியியலாளர்கள் தானியக்கமாக மொழிபெயர்க்க ([[இயந்திர மொழிபெயர்ப்பு]]) அல்லது மனித மொழிபெயர்ப்பாளருக்கு துணையாக இருக்க கருவிகளை உருவாக்கி வருகிறார்கள்.<ref>W.J. Hutchins, ''Early Years in Machine Translation: Memoirs and Biographies of Pioneers'', Amsterdam, John Benjamins, 2000.</ref> [[இணையம்|இணையத்தின்]] வளர்ச்சி உலகளவில் மொழிபெயர்ப்பு சேவைகளுக்கான சந்தையை விரிவுபடுத்தி உள்ளது. மேலும் இடைமுக மொழியின் உள்ளூராக்கலுக்கும் வழிவகுத்துள்ளது.<ref>M. Snell-Hornby, ''The Turns of Translation Studies: New Paradigms or Shifting Viewpoints?'', Philadelphia, John Benjamins, 2006, p. 133.</ref>
வரி 33 ⟶ 49:
===மொழிபெயர்ப்பின் ஊதியம்===
நாளொன்றுக்கு அதிகமாக ஊதியம் பெறக்கூடிய தொழில்களில் மொழிபெயர்ப்பும் தன்னை உட்படுத்தியிருக்கின்றது என்று சொல்லும் அளவுக்கு மிகவும் சௌகரியமான மற்றும் கௌரவமானதொரு வருமானம் இதன் மூலம் பெறப்படுகின்றது. பக்கம் ஒன்றிற்கான கட்டணம், சொல் ஒன்றிற்கான கட்டணம், மணித்தியாலம் ஒன்றிற்கான கட்டணம், திட்டம் ஒன்றிற்கான கட்டணம் என்ற அடிப்படையில் மொழிபெயர்ப்பின் கட்டண விபரங்கள் அமையப்பெற்றுள்ளன.
 
 
== வெளியிணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/மொழிபெயர்ப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது