வத்திக்கான் நகர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 60:
'''வத்திக்கான் நகர்''' (''Vatican City'') [[இத்தாலி]] நாட்டின் உரோமை நகரிலுள்ள ஒரு தன்னாட்சியுடைய சுதந்திர நாடாகும். இதன் மொத்தப் பரப்பளவு 44 எக்டேர், (108.7 [[ஏக்கர்]]) ஆதலால் இதுவே உலகின் மிகச் சிறிய நாடு ஆகும். இதன் அரசியல் தலைவர் [[திருத்தந்தை]]யாவார். வத்திக்கான் நகரத்தில் இவரின் அதிகாரப்பூர்வ உறைவிடமும் அலுவலகமும் அமைந்துள்ள கட்டடம் '''[[திருத்தூதரக அரண்மனை]]''' என அழைக்கப்படுகிறது. எனவே கத்தோலிக்க கிறித்தவத்தின் தலைமை மையமாக வத்திக்கான் நகரம் திகழ்கிறது. இதன் மொத்த மக்கள் தொகை சுமார் 804 ஆகும்.இதுவே பரப்பளவு மற்றும் மக்கட்தொகை அடிப்படையில் உலகின் மிகச்சிறிய நாடாகும்.
 
இது ஒரு திருச்சபை <ref name="factbook"/> அல்லது புனித தலம்-முடியாட்சி <ref name=pages>{{cite web|url=http://www.catholic-pages.com/vatican/vatican_city.asp |title=Vatican City |publisher=Catholic-Pages.com |accessdate=12 August 2013}}</ref> நாடு (ஒரு வகையான அரசியலமைப்பு) இதை ஆள்பவர் ரோமின் பிஷப்பான - போப் ஆவார். இதன் உயர்நிலை அலுவலர்கள் அனைவரும் பல்வேறு தேசிய மரபுகளைச் சேர்ந்த கத்தோலிக்க குருமார்களாவர்.   1377 ஆம் ஆண்டில் [[அவிஞ்ஞோன் திருத்தந்தை ஆட்சிக்காலம்|அவிஞானில்]] இருந்து போப் இங்கு திரும்பியதிலிருந்து, அவர்கள் இப்போது வத்திக்கான் நகரத்தில் உள்ள [[திருத்தூதரக அரண்மனை]]யில் வசித்து வந்தனர்.
 
வத்திக்கான் நகரம் 1929ஆம் ஆண்டு முதல் நிலைத்திருக்கும் ஒரு நகர-நாடு. 1929இல் தன்னாட்சி நாடாக உருவெடுத்த வத்திக்கான் நகரத்தைக் கிறித்தவ சமயத்தின் தொடக்கத்திலிருந்தே நிலைத்துவருகின்ற திருப்பீடத்திலிருந்து ([http://en.wikipedia.org/wiki/Holy_see Holy See]) வேறுபடுத்திக் காண வேண்டும். வத்திக்கான் நகரின் அரசாணைகள் இத்தாலிய மொழியிலும்; திருப்பீடத்தின் அரசாங்க ஆவணங்கள் இலத்தீன் மொழியிலும் வெளியிடப்படுகின்றன. இரு ஆட்சியமைப்புககளுக்கும் வெவ்வேறு கடவுச்சீட்டுக்கள் உள்ளன: நாடில்லாத '''திருப்பீடம்''' வெறும் அரசுதொடர்புடைய மற்றும் சேவை கடவுச்சீட்டுகளை பிறப்பிக்கின்றது; வத்திக்கான் நகரம் குடியுறிமை கடவுச்சீட்டுக்களை பிறப்பிக்கின்றது. இரண்டு அரசுகளுமே குறைந்த அளவிலேயே கடவுச்சீட்டுக்களை பிறப்பிக்கின்றன.
 
1929ஆம் ஆண்டு [[இலாத்தரன் உடன்படிக்கை]] மூலமாக உருவான வத்திக்கான் நகர் ஒரு புதிய உருவாக்கமாகவே அமைந்தது. முந்தைய மத்திய இத்தாலியை உள்ளக்கியிருந்த திருத்தந்தை நாடுகளின்(756-1870) சுவடாக இதனை யாரும் கருதுவதில்லை. 1860-ஆம் ஆண்டு திருத்தந்தை நாடுகள் முழுதும் [[இத்தாலி]] முடியரசோடு சேர்க்கப்பட்டது. இருதியாக [[உரோமை நகரம்|உரோமை நகரமும்]] அதன் சுற்று பகுதியும் 1870இல் சேர்க்கப்பட்டது.
 
வத்திக்கான் நகரத்தில் [[புனித பேதுரு பேராலயம்]], [[சிஸ்டைன் சிற்றாலயம்]], வத்திக்கான் அருங்காட்சியகங்கள் போன்ற சமய மற்றும் கலாச்சார தளங்கள் உள்ளன. இவை உலகின் மிகப் பிரபலமான ஓவியங்கள் மற்றும் சிற்பங்களைக் கொண்டுள்ளன. வத்திக்கான் நகரத்தின் தனித்துவமான பொருளாதாரமானது அஞ்சல்தலைகள் மற்றும் சுற்றுலாப் பொருட்களின் விற்பனை, அருங்காட்சியகங்களுக்கான நுழைவுக் கட்டணம், மற்றும் வெளியீடுகளின் விற்பனை ஆகியவற்றால் திரளும் நிதி ஆதரவைக் கொண்டுள்ளது.
 
== நில அமைப்பு ==
"https://ta.wikipedia.org/wiki/வத்திக்கான்_நகர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது