கியூபப் புரட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 4:
 
பதினைந்து வருட சிறைவாசத் தண்டனை விதிக்கப்பட்டபோதும், 1955 ஆம் ஆண்டே ஃபிடெல் விடுதலையானார். தனது திட்டத்திலிருந்து தளராத காஸ்ட்ரோ, மெக்ஸிகோவில் ஒரு புதிய கிளர்ச்சிப் படையைத் திரட்டினார். டிசம்பர் 2,1956 இல் மீண்டும் தோற்று, ஸியாரா மெய்ஸ்ட்ரோவுக்கு ஓடினார். இதன் பிறகே நேரடியான மோதல்களைத் தவிர்த்து கொரில்லா போர் முறையைக் கையில் எடுத்தார் ஃபிடெல்; கியூபாவெங்கும் பரவலாக இருந்த வெவ்வேறு எதிர்ப்பு சக்திகளின் உதவியையும் கேட்டுப் பெற்றார். இவரது விடா முயற்சியின் பயனாக, இறுதியில் பாடிஸ்டா பதவி விலகி 1959 புத்தாண்டு தினத்தன்று நாட்டைவிட்டே வெளியேறினார்; காஸ்ட்ரோ பிப்ரவரி 1959 இல் நாட்டின் அதிபரானார். முந்திய ஆட்சியாளர்களில் பலரும் கொல்லப்பட்டனர். தேர்தல் ரத்து செய்யப்பட்டது; கியூபாவின் நிரந்தர வாழ்நாள் அதிபராக தன்னைத்தானே பிரகடனம் செய்து கொண்டார் ஃபிடெல்.
 
எதிர்த்தோர் சிறைவாசம் அல்லது மரண தண்டனை பெற்றனர். கம்யூனிச ஆட்சி முறையைக் கொண்டு வந்து, சர்வாதிகாரியானார். எனினும் சோவியத்துடனான நட்புறவு மறைமுக எதிர்ப்புகளை நீக்க உதவியது. வெனிசுலா, கௌதமாலா, பொலிவியா, ஆகிய நாடுகளில் இவர் மேற்கொண்ட ஆட்சி கவிழ்ப்பு கிளர்ச்சிகள் தோல்வியில் முடிந்தன; இதன் காரணமாக, கியூபா அப்பகுதி நாடுகளால் தனிமைப்படுத்தப்பட்டது.
"https://ta.wikipedia.org/wiki/கியூபப்_புரட்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது