முதலாளித்துவம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 1:
'''''முதலாளித்துவம்''''' ([[ஆங்கிலம்]]:Capitalism) என்பது, [[உற்பத்திச் சாதனங்கள்]] பெரும்பாலும் தனிப்பட்டவர்களின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் ஒரு [[பொருளியல்]] முறைமையாகும். அத்துடன் இம் முறையில், முதலீடு, விநியோகம், வருமானம், உற்பத்தி, பொருள்களின் விலை குறித்தல், சேவைகள் என்பன சந்தைப் பொருளாதாரத்தினால் தீர்மானிக்கப்படுகின்றன. இதில், [[மூலதனப் பொருட்கள்]], [[கூலி]], [[நிலம்]] மற்றும் [[பணம்]] ஆகியவற்றில் வணிகத்தில் ஈடுபடுவதற்கான தனிப்பட்டவர்களினதும், சட்ட அடிப்படையில் நபர்களாகச் செயற்படும் தனிப்பட்டவர்களைக் கொண்ட குழுக்களினதும், உரிமைகள் தொடர்புபடுகின்றன.
 
முதலாளித்துவச் செயற்பாடுகள், 16 ஆம் நூற்றாண்டுக்கும், 19 ஆம் [[நூற்றாண்டு]]க்கும் இடையில் [[ஐரோப்பா]]வில் நிறுவனப்படுத்தப்பட்டது. [[வணிக முதலாளித்துவம்|வணிக முதலாளித்துவத்தின்]] தொடக்க வடிவங்கள் மத்திய காலத்தில் சிறப்புற்று விளங்கின. [[நிலப்பிரபுத்துவம்|நிலப்பிரபுத்துவத்தின்]] முடிவுக்குப் பின்னர், முதலாளித்துவம் [[மேலை நாடு]]களில் முதன்மை பெற்று விளங்கியது. இது இங்கிருந்து, சிறப்பாக இங்கிலாந்தில் இருந்து படிப்படியாக [[அரசியல்]] மற்றும் [[பண்பாடு|பண்பாட்டு]] எல்லைகளைக் கடந்து பிற இடங்களுக்கும் பரவியது. 19 ஆம், 20 ஆம் நூற்றாண்டுகளில் முதலாளித்துவம், உலகம் முழுவதிலும் [[தொழில்மயமாக்கம்|தொழில்மயமாக்கத்துக்கான]] முக்கிய காரணியாக விளங்கியது.
"https://ta.wikipedia.org/wiki/முதலாளித்துவம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது