வேதி வினைவேகவியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 5:
பீட்டா் வாகே மற்றும் கேடோ கல்ட்பெர்க் ஆகியோா்  வேதி வினைவேகவியலின் வளா்ச்சிக்கான முன்னோடியாக 1864 ஆம் ஆண்டு நிறைத்தாக்க விதியினை உருவாக்கினா். இந்த விதியானது, ஒரு வேதிவினையின் வேகமானது வினைபடுபொருட்களின் அளவோடு விகிதத் தொடா்பில் இருக்கும் என்கிறது.<ref name="GW1">C.M. Guldberg and P. Waage,"Studies Concerning Affinity" ''Forhandlinger i Videnskabs-Selskabet i Christiania'' (1864), 35</ref><ref name="GW2">P. Waage, "Experiments for Determining the Affinity Law" ,''Forhandlinger i Videnskabs-Selskabet i Christiania'', (1864) 92.</ref><ref name="GW3">C.M. Guldberg, "Concerning the Laws of Chemical Affinity", ''Forhandlinger i Videnskabs-Selskabet i Christiania'' (1864) 111</ref>
 
வாண்ட்ஹாஃப் வேதிவினைகளின் இயக்கவியல் பற்றிய தனது புகழ் பெற்ற ஆய்வு முடிவுகளை 1884 ஆம் ஆண்டு வெளியிட்டார். வேதிவினைகளின் இயக்கவியல் பற்றிய விதிகள், கரைசல்களில் சவ்வூடு பரவல் அழுத்தம் ஆகியவை தொடா்பாக இவரின் வியத்தகு சேவைகளைப் பாராட்டி 1901 ஆம் ஆண்டில் இவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.<ref>[http://www.nobelprize.org/nobel_prizes/chemistry/laureates/1901/ The Nobel Prize in Chemistry 1901]  வாண்ட்ஹாஃப்பிற்குப் பிறகு, வேதி வினைவேகவியலானது, சோதனைகளின் அடிப்படையில் வினைகளின் வேகத்தைக் கண்டறிதல், அதிலிருந்து வேக விதிகள் மற்றும் வேக மாறிலிகள் ஆகியவற்றைக் கண்டறிதல் எனத் தொடர்ந்தது.
 
ஒப்பீட்டளவில் எளிய சுழி வகை வினைகள், முதல் வகை வினைகள், இரண்டாம் வகை வினைகள் ஆகியவற்றுக்கான வேக விதிகள் உருவாக்கப்பட்டள்ளன. மற்ற வகை வினைகளுக்கும் இவற்றின் அடிப்படையில் வேக விதிகளை உருவாக்கலாம். எளிய வகை வினைகள் நிறைத்தாக்க விதியினை அடிப்படையாகக் கொண்டுள்ளன. ஆனால் படிநிலைகளின் படி நிகழும் வினைகளுக்கு பல வேக விதிகளை இணைத்து சமன்பாடுகள் உருவாக்கப்பட வேண்டியுள்ளன. இன்னும் சில தொடர் வினைகளில் வேகத்தை நிா்ணயிக்கும் வினையின் படிநிலை தான் வினை வேகவியலைத் தீா்மானிக்கிறது. ஒரு வினையின் செயற்படு பொருண்மையானது, அா்ஹீனியஸ் மற்றும் ஐரிங் ஆகிேயாாின் சமன்பாடுகளால் சோதனை முறைப்படி கண்டுபிடிக்கப்பட வேண்டியுள்ளது. ஒரு வேதி வினையின் வேகத்தை தீா்மானிக்கக்கூடிய காரணிகளாக வினைபடு பொருட்களின் இயற்பியல் நிலை, செறிவு, வினையின் வெப்பநிலை, வினைவேக மாற்றிகள் ஆகியவை உள்ளன.
 
கோர்பன் மற்றும் யாப்லான்ஸ்கை ஆகியோர் கூற்றுப்படி வேதிவினைவேகவியலின் வரலாற்றை மூன்று பிரிவுகளாகப் பிாிக்கலாம் என்கின்றனா். <ref>A.N. Gorban, G.S. Yablonsky [https://www.researchgate.net/publication/281411623_Three_Waves_of_Chemical_Dynamics Three Waves of Chemical Dynamics], ''Mathematical Modelling of Natural Phenomena'' 10(5) (2015), p. 1–5.</ref> 1–5.</ref> வினைவேகவியலுக்கும் வெப்ப இயக்கவியலுக்கும் இடையேயான தொடர்புகளை வருவிப்பதன் மூலம் வேதிவினைகளின் வேகம் தொடர்பான பொதுவான சமன்பாடுகளைத் தேடிய வாண்ட்ஹாஃப் காலம் முதலாவது பிரிவாகவும், செமினோவ் - ஹின்செல்வுட் காலத்தில் சங்கிலித் தொடர் வினைகளுக்கான வினை வழிமுறைகள் மீதான தீவிரமான பார்வை இரண்டாவது பிாிவாகவும், வேதிவினைகளின் வலைப்பின்னலை விாிவான கணிதவியல் சமன்பாடுகளாக மாற்ற முயன்ற ரூதா்ஃபோர்டு ஆரிஸ் காலம் மூன்றாவது பிாிவாகவும் கொள்ளப்படலாம்.
 
== குறிப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/வேதி_வினைவேகவியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது