நாளிதழ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
[[File:நாளிதழ் வாசிப்பு.JPG|thumb|நாளிதழ் வாசிப்பு]]
'''நாளிதழ்''' என்பது ஒவ்வொரு நாளும் அச்சிட்டு வெளியிடப்படும் [[செய்தி]] இதழ் ஆகும். தற்காலத்தில் செய்தியல்லாத பிறவற்றையும் முதன்மை நோக்கமாகக் கொண்டு நாளிதழ்கள் வெளியிடப்படுகின்றன ஆயினும், மிகப் பெரும்பாலான நாளிதழ்கள் செய்தி இதழ்களாகவே உள்ளன. எனவே இதை '''செய்தித்தாள்கள்''' (News Papers) என்றும், நாள்தோறும் வெளியிடப்படுவதால் '''தினசரிகள்''' (Dailies) என்றும் அழைப்பதுண்டு.
 
===வரலாறு===
 
கி.பி.1476 இல் இங்கிலாந்தில் வில்லியம் காக்ஸ்டன் என்பவர் அச்சு இயந்திரத்தைக் கண்டறிந்தார்.கிறிஸ்தவ சமயத்தைப் பரப்ப முனைந்த மேலை நாட்டினர் இந்தியாவில் அதை கி.பி.1550-இல் அறிமுகம் செய்துவைத்தனர்.அதன்பின்,1622 ஆம் ஆண்டில் முதல் செய்தி இதழாக The Weekly News வெளியிடப்பட்டது.பின்,London Gazetteer என்ற இதழ் முறையாக 1666 -இல் வெளிவந்தது.
 
இவ்வாறு உலகம் முழுவதும் இதழியல் வளர்ச்சி அடையத் தொடங்கியது.இந்தியாவில் 1780-இல் Bengal Gazetteer,1789-இல் Indian Gazetteer போன்ற இதழ்கள் வெளியிடப் பெற்றன.தமிழ்நாட்டில் 1831-இல் முதல் தமிழ் இதழாக 'கிறித்தவ சமயம்'வெளிவந்தது.பிறகு,1853-ஆம் ஆண்டில் தின வர்த்தமானி என்னும் தமிழ் வார இதழ் வெளியானது.கி.பி.1870-க்குப் பின்னர், சென்னை மாகாணத்தில் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் பல்வேறு நாள்,வார,மாத இதழ்கள் வெளிவர தொடங்கின.
 
==வரையறை==
"https://ta.wikipedia.org/wiki/நாளிதழ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது