கதிர் உயிரியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 2:
 
மின்னூட்டம் கொண்ட துகள்கள் அவைகளின் மின்னூட்டம் காரணமாகவும் அவைகளின் நிறை காரணமாகவும் நேரடியாக அயனியாக்கம் நிகழக் காரணமாகின்றன.ஆனால் மின்காந்த அலைகளும் நியூட்ரான்களும் மறைமுகமாக அயனியாக்கம் நிகழ காரணமாகும்.
 
அயனியாக்கம் காரணமாகத் தோன்றும் விளைவுகள் மூலக்கூறுகளுக்கிடையே பிணைப்பை முறிக்கிறது. இதன் காரணமாக வேதிவிளைவுகள் தோன்றுகின்றன.முடிந்த நிலையில் அவைகள் உயிரியல் விளைவாக வெளிப்படுகின்றன.இவ்விளைவுகள் உடனடி விளைவாகவோ பலவருடங்கள் சென்றபின் தோன்றும் காலம் தாழ்ந்த விளைவாகவோ இருக்கக்கூடும்.இவையாவும் கதிர்களின் ஆற்றல் ,அவை ஏற்கப்படும் வீதம்,எந்தப் பகுதியில் கதிர்கள் ஏற்கப்படுகின்றன என்பன போன்ற காரணிகளைப் பொறுத்து அமையும்.விளைவுகள் குருதி அணுக்களின் எண்ணிக்கையில் மாற்றம்,தோல் சிவத்தல்,கண்புரை,இறப்புவரையில் கூட இட்டுச் செல்லும்.
 
ஆனாலும் உயிரினங்கள் மனிதன் உட்பட கதிர்வீச்சினை ஏற்று வாழப் பழகிவட்டன என்றே கூறவேண்டும்.உலகம் தோன்றிய நாள்தொட்டு உயிரினங்கள் அண்டக்கதிர்களாலும் பூமியிலிருந்து வெளிப்படும் கதிரியக்கக் கதிர்களால் தொடர்ந்து தாக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறன..மனித உடலிலேயே கரி 14, பொட்டாசியம் 40 போன்ற கதிர் தனிமங்கள் சிறிய அளவில் காணப்படுகின்றன.
 
இன்று மனிதனால் ஆக்கப்பட்ட எக்சு கதிர்கள் ,கதிரியக்கத்தனிமங்களிலிருந்து வெளிப்படும் கதிர்கள, அணு உலைகள், துகள் முடுக்கிகளிலிருந்து வெளியாகும் கதிர்கள் என பல அயனியாக்கும் கதிர்களே அச்சுறுத்தும் கதிர்களாக உள்ளன. இயற்கை கதிர்களை விட இது அதிகமாக இருக்கிறது.
"https://ta.wikipedia.org/wiki/கதிர்_உயிரியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது