"சகாரா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2,989 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சஹாரா ஆபிரிக்க கண்டத்தில் உள்ள மிகப் பெரிய பாலைவனமாகும். சஹாரா தெற்கு எல்லையாக சகேலில் எனும் சவன்னா புல்வெளி உள்ளது. சகேலிலிற்கு தெற்கே தெற்கு சூடான் நாடும் காங்கோ வடிநிலப் பகுதியும் உள்ளன. சஹாராவின் பெரும்பாலான பகுதி பாறைகற்களை கொண்டுள்ளது; மணற்குன்றுகளால் மூடப்பட்டிருக்கும் சிறிய பகுதி மட்டுமே மூடியுள்ளது.
மக்கள் கடந்த ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு பனி யுகத்தில் சஹாரா பாலைவன விளிம்பில் வாழ்ந்து வந்தார்கள். அப்போது சஹாராவில் முதலைகளும் 30,000ற்கும் மேற்பட்ட மற்றுமுள்ள நீர்வாழ் விலங்குகளும் இருந்ததற்கான படிமங்கள் தென்கிழக்கு அல்ஜீரியாவில் கண்டறியப்பட்டுள்ளன. நவீன சஹாராவில் நைல் பள்ளத்தாக்கு தவிர மற்ற இடங்கள் பசுமையாக இருந்திருக்கவில்லை. சைத்தூன் மரம் போன்ற மத்திய தரைக் கடற் பகுதித் தாவரங்களே அங்கு இருந்தன. இந்நிலை கி.மு 1600 வரை இருந்தது. இப்போதய சஹாரா பகுதியில் பூமியின் அச்சு மாற்றமும் வெப்பநிலை மாற்றங்களுக்கும் ஏற்பட்ட பிறகு, இது மணற்பாங்கான பாலைவனமாக மாறியது.
 
நடு சகாரா என்பது ஆங்காங்கே தாவரங்களுடன் கலப்பு நிலப்பகுதியாக உள்ளது. வடக்கு மற்றும் தெற்கு பாலைவனப்பகுதிகளானது, மலைப்பகுதியூடாக, சிதறிய புல்வெளி மற்றும் பாலைவனப் சிறு புதர் பகுதிகள், மரங்கள் மற்றும் உயரமான புதர்கள் போன்றவற்றைக் கொண்டதாக உள்ளது. நடு சகாராவின், கலப்பு பாலைப் பகுதியில், பெரும் பாலைவனத்தின் பல துணைப்பிரிவுகள் உள்ளன அவை: டேன்சுரூஃப், டெனெரெ, லிபிய பாலைவனம், கிழக்கு பாலைவனம், நுபியான் பாலைவனம் மற்றும் பல. இது மிகவும் வறண்ட பகுதிகளாக பல ஆண்டுகள் அடிக்கடி மழை இருக்காது.
 
வடக்கு சகாரா என்பது எகிப்தில் [[மத்தியதரைக் கடல்]] மற்றும் [[லிபியா|லிபியாவின்]] பகுதிகளைக் கொண்டதாக உள்ளது. இது   மத்தியதரைக்கடல் வனப்பகுதி, மரக்காடு, மற்றும் வட ஆபிரிக்காவின் சூழல் மண்டலங்களை சுற்றிக் கொண்டுள்ளது, இவை அனைத்தும் மத்திய தரைக்கடல் காலநிலை மற்றும் வெப்பமான கோடைக்காலம் மற்றும் குளிர் மற்றும் மழையான குளிர்காலங்களைக் கொண்டுள்ளது. வடக்கின் எல்லைகள் 100 மில்லிமீட்டர் (3.9 அங்குலம்) வருடாந்திர மழையைப் பெறுகின்றது. <ref name="Walton2007"/>
 
பருவகால அளவின் படி, சஹாராவின் தெற்கு எல்லையானது 150 மிமீ (5.9 அங்குலம்) வருடாந்திர மழைப்பொழிவு பெறுகிறது (இது ஒரு நீண்ட கால சராசரி அளவீடு ஆகும், மழைப்பொழிவு ஆண்டுதோறும் மாறுபடுகிறது). <ref name="Walton2007"/>
 
சகாராவில் அமைந்துள்ள முக்கிய நகரங்கள், மவுரித்தானியாவின் தலைநகரான [[நுவாக்சூத்]], அல்ஜீரியாவின் தாமன்ராஸெட், ஓர்குலா, பெச்சர், ஹாஸ்ஸி மெஸ்அௗத், கர்தாயா, எல் ஒய்யுட்; மாலிவில் உள்ள திம்புக்டு; நைஜரில் அகடெஸ்; லிபியாவில் காட்; சாத் நகரில் ஃபைஏ-லார்கோவ் போன்ற தகரங்களாகும்.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2286021" இருந்து மீள்விக்கப்பட்டது