இணையம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 15:
 
ஜூன் 30 2006-ல் உலகம் முழுவதும் நூறு கோடி மக்களுக்கும் மேல் இணையத்தை உபயோகம் செய்கிறார்கள். [http://www.internetworldstats.com/stats.htm Internet World Stats]
 
===இணையத்தின் தோற்றம்===
 
1957-ஆம் ஆண்டில் அன்றைய சோவியத் யூனியன் ஸ்புட்னிக் என்னும் ஆளில்லா செயற்கைக்கோளை விண்ணில் பறக்கவிட்டது.இது தமக்கு எதிரான இராணுவ நடவடிக்கைக்கான ஆய்வாக இருக்குமோ என்ற அச்சம் அமெரிக்காவுக்கு உண்டாகியது. விண்வெளி ஆய்வில் தாம் பின்தங்கிவிடக் கூடாது என்கிற அக்கறையும் அவாவும் அமெரிக்காவுக்கு பிறந்தது.எனவே,அப்போதைய அமெரிக்க அதிபர் ஐசன்ஹோவர்,உடனடியாக ஓர் ஆராய்ச்சி அமைப்பை உருவாக்க ஆணை பிறப்பித்தார்.அந்த ஆய்வமைப்பு ‘ஆர்ப்பா’ (ARPA - Advanced Research Project Agency) எனப்பட்டது.
 
’ஆர்ப்பா’வின் முதன்மைக் குறிக்கோள் சோவியத் யூனியனைப் போன்று விண்கலனை ஏவிப் பரிசோதனை செய்வதேயாகும்.அடுத்த ஆண்டான 1958-இல் அமெரிக்காவின் ‘எக்ஸ்புளோரர்’ விண்கலம் விண்ணில் வெற்றிகரமாகப் ஏவப்பட்டது. இதே வேளையில் அமெரிக்க இராணுவப் பாதுகாப்புத் துறையில் தகவல் தொடர்புக்குக் கணினியைப் பயன்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. விண்வெளிப் பயண ஆய்வில் ஈடுபட்டிருந்த ’ஆர்ப்பா’ ஆய்வு மையத்திடம் அமெரிக்க இராணுவத் துறையில் கணினியின் பயன்பாட்டை மேம்படுத்தும் பணி ஒப்படைக்கப்பட்டது.1962-இல் டாக்டர் ஜே.சி.ஆர்.லிக்லைடர் தலைமையில்
இப்பணி ஆரம்பிக்கப்பட்டது.
 
கணினிப் பிணையங்கள், கணினி வழியான தகவல் பரிமாற்றம் ஆகியவற்றில் ’ஆர்ப்பா’ முதலில் கவனம் செலுத்தியது. ஒரு புதுவகையான கணினிப் பிணையத்தை நிறுவுவது ‘ஆர்ப்பா’வின் தொடக்கத் திட்டமாக இருந்தது.அயல்நாட்டுடன் போர்மூண்டு, எதிரிகளின் குண்டு வீச்சில் பிணையத்தின் ஒருபகுதி சிதைக்கப்பட்டாலும் பிணையத்தின் மீதிப் பகுதி எவ்வித பாதிப்புமின்றிச் செயல்பட வேண்டுமென எண்ணினர்.
 
இதுபோன்றதொரு,அதாவது இன்றைய ’இணையம்’ போன்ற ஒரு பிணையத்தை வடிவமைக்கும் முயற்சியில் அமெரிக்காவின் ‘ரேண்டு’ (Rand)என்ற நிறுவனமும் ஈடுபட்டிருந்தது.1965-இல் அதற்கான ஒரு மாதிரிக் கட்டமைப்பை வெளியிட்டது. இதே கோட்பாடுகளின் அடிப்படையில் ஐரோப்பிய நாடுகளிலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. 1968-இல் இங்கிலாந்து நாட்டின் தேசிய இயற்பியல் ஆய்வுக்கூடம் (National Physics Laboratary) இதுபோன்ற பிணையத்தின் மாதிரியைச் சோதனை முறையில் அமைத்துக் காட்டியது.
 
இத்தகைய ஆய்வுகளின் இறுதியில் ‘ஆர்ப்பா’வின் முயற்சியால் 1969-இல் இராணுவப் பயன்பாட்டுக்கென அமெரிக்காவில் நான்கு மாநிலங்களில் செயல்பட்டு வந்த கணினிப் பிணையங்கள் இணைக்கப்பட்டு ‘ஆர்ப்பாநெட்’ (ARPANet) என்கிற அமைப்பு நிறுவப்பட்டது.இதுவே, பிற்கால இணையத்தின் முன்னோடிப் பிணைய அமைப்பாகும்.
 
இந்த சூழலில் பாஸ்டன் நகரின் எம்ஐடீயில் (MIT - Massachusetts Institute of Technology) பட்டப்படிப்புப் படித்துக் கொண்டிருந்த மாணவர் லியோனார்டு கிளெய்ன்ராக் என்பார் ஆர்ப்பாநெட்டின் மூலமாக இரு சேய்மைக் கணினிகளுக்கிடையே முதல் தகவல் பரிமாற்றத்தை நடத்திக் காட்டினார்.இதனால் இவர்,’இணையத்தின் தந்தை’ (Father of Internet) என்று அழைக்கப்படுகிறார்.
 
===இணையத்தின் வளர்ச்சி===
"https://ta.wikipedia.org/wiki/இணையம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது