கபந்தன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
" File:Kabandha1.jpg|thumb|275px|இராம-இலக்கு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
[[File:Killing of Kabandha.jpg|thumb|300px|தலையும், கழுத்தும், கால்கள் அற்ற, பெரிய வயிற்றில் ஒற்றைக் கண்ணும், அகண்ட வாயும், நீண்ட கைகளுடன் கூடிய கபந்தனின் கைகளை வெட்டும் இராம-இலக்குவணர்கள்]]
 
[[File:Kabandha1.jpg|thumb|275px|இராம-இலக்குமணர்கள் கபந்தனின் நீண்ட கைகளை வெட்டும் காட்சி, 16வது நூற்றாண்டு ஓவியம், [[அயோத்தியாபட்டினம்]] இராமர் கோயில் கூரை ஓவியம், [[சேலம்]], [[தமிழ்நாடு]]]]
 
[[File:Vanaras search sita.jpg|thumb|300px|கபந்தனின் ஆலோசனையின் படி, இராம-இலக்குமணர்கள் சுக்கிரீவனின் நட்பைப் பெற்று, [[வானரம்|வானரர்களின்]] உதவியுடன் அனைத்து திசைகளிலும் சீதை தேட புறப்படும் காட்சி]]
 
 
'''கபந்தன்''' அல்லது '''கவந்தன்''' (Kabandha) ({{lang|sa|कबन्ध}}, [[இராமாயணம்|இராமாயணக்]] காவியத்தில் ஆரண்யகாண்டத்தில் கூறப்படும், கால்கள், கழுத்து, தலையும் அற்ற முண்டமும், நீண்ட கைகளும், வயிற்றில் ஒற்றைக் கண்ணும், அகண்ட வாயுடன் கூடிய ஒரு [[அரக்கர்|இராட்சசன்]] ஆவார். கபந்தனின் இரண்டு நீண்ட கைகளை [[இராமன்]] மற்றும் [[இலக்குமணன்]] வெட்டி வீழ்த்தியதால், கபந்தன் [[முக்தி]] அடைந்தான்.
 
==வரலாறு==
கபந்தன் முற்பிறவியில் தனு என்ற பெயரைக் கொண்ட தேவலோக [[கந்தர்வர்|கந்தர்வ]] இன இசைப் பாடகர் ஆவார். [[இந்திரன்|இந்திரனின்]] சாபத்தால், அறுவறுப்பான தோற்றமும், தலையும், கழுத்தும் அற்ற, கால்கள் மற்றும் தலையற்ற உடலுடன் கூடிய அரக்கனாக [[தண்டகாரண்யம்|தண்டகாரண்யத்தில்]] ஓரிடத்திலே தங்கி வாழ்ந்து மனிதர்களையும், விலங்குகளையும் கொன்று புசித்து வாழ்ந்தான்.
 
வனவாசத்தின் போது தண்டகாரண்யத்தில் இராம – இலக்குவணர்கள் வாழ்ந்த போது, கபந்தன் இருவரையும் தாக்கி கொல்ல முயற்சித்த போது, இராம-இலக்குவணர்கள் கபந்தனின் கைகளை வெட்டிக் கொன்றனர். பின்னர் கபந்தன் கந்தர்வனாக வடிவெடுத்து, [[சுக்கிரீவன்]] தங்கியுள்ள ரிசியமுக மலைக்கு சென்று அவனின் நட்பினை பெற்று, [[இராவணன்]] கவர்ந்து சென்ற [[சீதை]]யை கண்டுபிடிக்குமாறு இராம-இலக்குமணர்களுக்கு ஆலோசனை கூறினான். <ref>[http://www.tamilvu.org/slet/l3100/l3100pd1.jsp?bookid=56&auth_pub_id=71&pno=728 12. கவந்தன் படலம்]</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/கபந்தன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது