மூச்சுத் தொகுதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎நோய்கள்: மேற்கோள் (edited with ProveIt)
வரிசை 48:
 
=====உட்சுவாசம்=====
{{main|உள்மூச்சு}}
 
இது உயிர்ப்பான செயற்பாடாகும். வெளிப்பழுவிடைத் தசைகள் சுருங்க உட்பழுவிடைத் தசைகள் தளரும். விலாவென்புகளும் மார்புப்பட்டையும் வெளிநோக்கி அசையும். பிரிமென்றகடு சுருங்கித் தட்டையாகும். இதனால் நெஞ்சறைக் குழியின் கனவளவு அதிகரித்து நுரையீரலினுள் வளியமுக்கம் வேகமாகக் குறைவடையும். இத்தாழமுக்கத்தை ஈடு செய்ய வெளியிலிருந்து காற்று உள்வருகின்றது. உள்வரும் காற்றிலுள்ள ஆக்சிசன் வாயு சுவாசப்பைச் சிற்றறைகளிலுள்ள குருதி மயிர்க்கலன்களிலுள்ள குருதியில் கலக்கும் அதே வேளை குருதியிலுள்ள காபனீரொக்சைட்டு நுரையீரலிலுள்ள வளியில் கலக்கின்றது. இவ்வாறு முலையூட்டிகளில் உட்சுவாசம் நடைபெறும். பொதுவாக உட்சுவாசம் இரண்டு நொடிகள் நீடிக்கும்.
சாதாரணமான இச்சையின்றிய, சந்தமான உட்சுவாசத்தில் வெளிப் பழுவிடைத் தசைகளும் (external intercostal muscles), பிரிமென்றகடும் மாத்திரமே பங்கெடுக்கின்றன. எனினும் வலிந்த உட்சுவாசத்தின் போது மேற்கூறிய தசைகள் அதிகமாக சுருங்குவதுடன் இவற்றுக்கு உதவியாக மார்பு மற்றும் கழுத்திலுள்ள தசைகளும் சுருங்கும். இதனால் அதிக வளி உள்ளெடுக்கப்படும்.
"https://ta.wikipedia.org/wiki/மூச்சுத்_தொகுதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது