நாளிதழ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Added {{non-free}} tag to article (மின்)
பதிப்புரிமை மீறல் உள்ளக்கம் நீக்கம்
வரிசை 1:
{{non-free|date=மே 2017}}
[[File:நாளிதழ் வாசிப்பு.JPG|thumb|நாளிதழ் வாசிப்பு]]
'''நாளிதழ்''' என்பது ஒவ்வொரு நாளும் அச்சிட்டு வெளியிடப்படும் [[செய்தி]] இதழ் ஆகும். தற்காலத்தில் செய்தியல்லாத பிறவற்றையும் முதன்மை நோக்கமாகக் கொண்டு நாளிதழ்கள் வெளியிடப்படுகின்றன ஆயினும், மிகப் பெரும்பாலான நாளிதழ்கள் செய்தி இதழ்களாகவே உள்ளன. எனவே இதை '''செய்தித்தாள்கள்''' (News Papers) என்றும், நாள்தோறும் வெளியிடப்படுவதால் '''தினசரிகள்''' (Dailies) என்றும் அழைப்பதுண்டு.
வரி 299 ⟶ 298:
(2) செய்தித் தலைப்பு.
தலைமைத் தலைப்புகள் அரசியல் மாற்றம், போர், இயற்கை நிகழ்வு, பெரிய விபத்துகள், திடீர்த் திருப்பங்கள், அரசின் புதிய திட்டங்கள், உடன்படிக்கைகள், அமைச்சர்களின் வெளிநாட்டுப் பயணங்கள் முதலானவற்றை உள்ளடக்கியதாக அமையும். ஏனைய செய்திகளின் தலைப்புகள் செய்தித் தலைப்பு எனப்படும்.
 
===தலைப்பின் வகைகள்===
 
தலைப்பு வகைகள் பல்வேறு விதமாகப் பாகுபடுத்தப்படுகின்றன.அவை பின்வருமாறு:
 
 
நெற்றித் தலைப்பு (Topic Headline)
 
சிறப்புத் தலைப்பிற்கு மேல் சிறிய எழுத்துக்களாலும் அடிக் கோடிட்டும் அமைவதே நெற்றித் தலைப்பு எனப்படும்.
 
எடுத்துக்காட்டு :"ரேங்க் முறை ரத்து"
 
இடைநிலைத் தலைப்பு (Cross Line)
 
பக்க அமைப்பில் உள்ள பத்திகளில், பல பத்திகளை அடைத்துக் கொண்டு ஒரே தொடரில் இடைநிலையில் அமைவது இடைநிலைத் தலைப்பு எனப்படும்.
 
எடுத்துக்காட்டு :மாநிலத்திலேயே பிளஸ் 2 தேர்வெழுதிய ஒரே ஒரு திருநங்கை தேர்ச்சி
 
 
முழுப்பக்க இடைநிலைத் தலைப்பு
 
இடப் பக்கத்திலிருந்து வலது பக்கம் வரை எட்டுப் பத்திகளையும் அடைத்தாற்போல் தலைப்பிடுவது முழுப்பக்க இடைநிலைத் தலைப்பு ஆகும்.எ.கா.:இலங்கைத் தமிழர்களுக்கு மேலும்10ஆயிரம் வீடுகள்.
 
கூம்புத் தலைப்பு (Pyramid Headline)
 
ஒன்றிற்கு மேற்பட்ட தொடர்கள் வருகின்ற அமைப்புடைய தலைப்பில், புதுக்கவிதை போலத் தொடரை வெட்டி, எகிப்தின் பிரமிடு போலக் கூம்பு வடிவத்தில் அமைப்பதாகும்.எ.கா.
 
திருவாரூர்
மாவட்டத்தில்
2நாட்களாக மழை
 
கவிழ் கூம்புத் தலைப்பு (Inverted Pyramid Headline)
 
ஒன்றிற்கு மேற்பட்ட தொடர்கள் வரும் தலைப்பில், பிரமிடு அமைப்பின் தலைகீழ் வடிவில் கவிழ் வடிவில் தலைப்பு அமைப்பது ஆகும்.சான்று:
 
நெசவுத் தொழிலாளர்களுக்கு
எல்இடி மின்விளக்குகள்
வழங்கல்.
 
 
சிறுதொடர் மேல்தலைப்பு (Kicker method)
 
தலைப்பிற்கு மேல் சிறிய தொடராகச் சிறு தலைப்பு அமைப்பது சிறுதொடர் மேல்தலைப்பாகும்.
உதாரணம்:அகில இந்திய ஹாக்கி போட்டி
 
நீண்ட தொடர் மேல்தலைப்பு (Reverse Kicker method)
 
சிறப்புத் தலைப்பினை விட மேலே இருக்கும் தலைப்பு நீளமானதாகவும், சிறிய அளவு எழுத்துகளாலும், அடிக்கோடிட்டும் அமைவது நீண்ட தொடர் மேல்தலைப்பாகும்.
 
எடுத்தக்காட்டு:கல்லீரல் நோய் ஒழிப்பு பிரச்சாரம்
 
கிளர்ச்சியூட்டும் தலைப்பு (Exciting Headline)
 
படிப்பவர்களுக்குக் கிளர்ச்சியூட்டும் வகையில் எடுப்பான துடிப்பான சொற்களால் அமைவது இத்தலைப்பாகும்.
 
எடுத்துக்காட்டு:பஞ்சாப் 'த்ரில்'வெற்றி!
 
பரபரப்பூட்டும் தலைப்பு (Sensational Headline)
 
படிப்பவர்கள் பரபரப்புடன் செய்தியைப் புரட்டிப் படிக்கத் தூண்டும் வகையில் அமையும் தலைப்பு இது.
 
எடுத்துக்காட்டு:பல தார மணம் குறித்து விசாரிக்க மாட்டோம்.
 
தீவிரத் தலைப்பு (Radical Headline)
 
அதிரடியாகத் தரும் தலைப்பு ஆகும். பொதுவாக அரசியல் செய்திகள் இங்ஙனம் அமையும்.
 
எடுத்துக்காட்டு:இனி 500,1000 செல்லாது.
 
மிதவாதத் தலைப்பு (Conservative Headline)
 
தீவிரப் போக்கின்றி மிதவாத நிலையில் அமைப்பது மிதவாதத் தலைப்பாகும்.
 
எடுத்துக்காட்டு:ஏடிஎம்-மில் பணம் எடுக்க ரூ.25 கட்டணம்.
 
உந்து தலைப்பு (Topical Headline)
 
தலைப்பைப் படித்த அளவிலேயே முழுச் செய்தியையும் படிக்கத் தூண்டும் தலைப்பு உந்து தலைப்பு எனப்படும். இது சிறப்புத் தலைப்பிற்கு மேல் ஒரு தலைப்பாக அமைந்து, அடிக்கோடும் போடப்பட்டிருக்கும்.
 
எடுத்துக்காட்டு:பள்ளிப் பொதுத் தேர்வில் ரேங்க் முறை ஒழிப்பு
 
மேற்கோள் குறியுடைத் தலைப்பு (Quotation Headline)
 
தலைப்பின் இரு புறங்களிலும் மேற்கோள் குறியிடப்பட்ட தலைப்பு மேற்கோள் குறியுடைத் தலைப்பு எனப்படும்.
 
சான்று:'மூடப்பட்ட மதுக்கடைகளில் மது விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை'
 
வினாத் தலைப்பு (Question Headline)
 
வினா முறையில் அமையும் தலைப்பு இதுவாகும்.
 
எடுத்துக்காட்டு :குணசேகரா உனக்கு ஏதுசாவு?
 
நேர் வரிசை அடுக்குத் தலைப்பு (Flush left)
 
இவ்வகையில் தலைப்பு ஒரே சீரான நேர்வரிசை அடுக்குகளாக அமையும்.
 
எடுத்துக்காட்டு :தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநிலச் செயற்குழுக் கூட்டம்.
 
மாறுவரிசை அடுக்குத் தலைப்பு (Step line)
 
தலைப்பு அடுத்து வரும் வரிகள் சற்று உள் அடங்கி இருத்தல் இவ்வகையில் அடங்கும்.
 
எடுத்துக்காட்டு:வேலைவாய்ப்பு உருவாக்கும் முதலீடுகளை
அரசு கண்காணிக்க முடிவு.
 
உடுக்கைத் தலைப்பு
 
இதில் உடுக்கை வடிவத்தில் தலைப்பு ஒருவரி உள் அடங்கியும், முன் பின் உள்ள வரிகள் சற்று முன்னால் தொடங்குவனவாகவும் அமையும்.
எடுத்துக்காட்டு:
ஸ்நாப்டீலை
பிளிப்கார்ட்டுக்கு விற்க
நெக்ஸஸ் ஒப்புதல்.
 
===தலைப்பு எழுத்து வகை===
வரி 421 ⟶ 307:
தலைப்புகள் பல்வேறு வகையில் உருவாக்கப்படுவதால் உண்டாகும் பலன்கள் அதிகம்.அவையாவன:
 
#பெரிய எழுத்துகள், மிகப் பெரும் எழுத்துகள் யாவும் ஆர்வத்தை உண்டாக்குகின்றன.
1) படிப்பவர்கள் செய்தியைப் படிப்பதற்கு ஒரு தூண்டுகோலாகவும், புதிய உத்திகள் காரணமாக ஓர் ஈர்ப்பைத் தூண்டுவதாகவும் தலைப்புகள் அமைகின்றன.
 
2)பெரிய எழுத்துகள், மிகப் பெரும் எழுத்துகள் யாவும் ஆர்வத்தை உண்டாக்குகின்றன.
 
3)#அதிகம் எழுதப் படிக்கத் தெரியாத பாமர மக்கள் தலைப்புகள் காரணமாக எழுத்துக்கூட்டிப் படிக்கும் விழிப்புணர்வை அடைகின்றனர்.
 
4)#அடிக்கோடிட்டுச் செய்தித் தலைப்பைத் தருவதன் மூலமாக,அது இன்றிமையாததாகின்றது.மேலும், தலைப்புகளே செய்தியில் பாதியைத் தெரிவித்து விடுகின்றன.மீதமுள்ள பகுதியையும் படிக்கும்படி அவையே ஆர்வத்தைத் தூண்டிவிடுகின்றன.
 
===உள்ளடக்கப் பயன்கள்===
 
1)#தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், ராசி பலன், வானிலை, அங்காடி விலை நிலவரம், வரி விளம்பரம், புத்தக விமர்சனம், மக்கள் உபயோகப் பொருட்களின் விளம்பரம் முதலியன குறிப்பிடத்தக்கனவாக அமைந்து ஈர்ப்பை அதிகப்படுத்துகின்றன.
 
2)#நாளிதழ்கள் பல்வேறு இலவச இணைப்புகளையும் தருவதால்,அவை வெளிவரும் நாள், இணைப்பின் பெயர் ஆகியன உள்ளடக்கத்தைத் தீர்மானிக்கின்றன.
 
3)#நாளிதழ்கள் பெரும்பாலும் மாவட்ட
வாரியாக வெளியிடப்படுகின்றன.எனவே அந்தந்த மாவட்டங்களின் செய்திகள் அந்தந்த மாவட்டங்களில் வெளியாகும் இதழ்களில் முக்கியச் செய்தியாக அமைகின்றன.மேலும் மாநிலச் செய்திகள், மாநகரச் செய்திகள், இந்தியச் செய்திகள், உலகச் செய்திகள், விளையாட்டுச் செய்திகள்,திரைப்படச் செய்திகள்,வணிகச் செய்திகள்,இலக்கிய செய்திகள் முதலியனவும் நாளிதழின் உள்ளடக்கத்திற்குக் கூடுதல் ஈர்ப்பை மக்களிடம் ஏற்படுத்த விளைகின்றன.
 
"https://ta.wikipedia.org/wiki/நாளிதழ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது