"சிப்பிக்காளான்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

5,733 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
1917ஆம் ஆண்டு முதன் முதலாக ஜெர்மன் நாட்டைச் சார்ந்த பால்க் என்பவரால் மரத்துண்டுகளில் .பிளிரோட்டர்ஸ் ஆஸ்டிரியேட்டர்ஸ் என்ற வகை சிப்பிக் காளான் வளர்கப்பட்டது. சிப்பிக் காளான் வளர்க்கும் தொழில் நுணுக்கங்களை அமெரிக்காவைச் சார்ந்த விஞ்ஞானிகளான பிளாக,; டாஸோ,ஹாவ் ஆகியோர் ஆராய்ந்து வெளியிட்டனர். இந்தியாவில் முதல் முதலாக மத்திய உணவு மையத்தில் நெல் வைக்கோலில் பிளிரோட்டர்ஸ் ஃபிளாபெல் லேட்டஸ் வகை சிப்பிக் காளான் மைசூரைச் சார்ந்த பானோ மற்றும் ஸ்ரீவத்ஸவ் ஆகிய விஞ்ஞானிகளால் வெற்றிகரமாக 1962ல் வளர்க்கப்பட்டது. இந்திய சூழல் மற்றும் தட்ப வெட்ப நிலைக்கு ஏற்ற வகையில் அமைந்த சாம்பல் சிப்பிகாளானான பிளிரோட்டர்ஸ் சசோர்காஜீ என்ற வகை 1974ல் ஜாண் டைக் மற்றும் கபூர் என்பவர்களால் எம் 2 ரகமாக இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.வெள்ளை நிறமுடைய பிளிரோட்டர்ஸ் சிட்ரினோபைரியேட்டஸ் வகையான சிப்பிக் காளான் தமிழகத்தில் முதன் முதலாக நெல் வைக்கோலில் வளாக்கப்பட்டது. பிறகு முறையாக தமிழ் நாடு வேளாண்மை பல்கலைகழகத்தால் 1986ம் ஆண்டு கோ 1 என்னும் ரகமாக வெளியிடப்பட்டது. தற்போது அகில இந்திய இளவில் ஒருங்கிணைந்த காளான் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பல்வேறு மாநிலங்களில் உள்ள வேளாண் பல்கலைக்கழகங்கள் வழியாக சிப்பிக்காளான் பற்றிய ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.<ref>மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் , சென்னை 6 (ஆகஸ்டு 1983) " காளானும் ஒரு சத்துணேவ" உறையகம் 8.4.1</ref> </blockquote>
 
== காளான் பயிர் செய்யும் முறை ==
* சதுரப் படுக்கை முறை
* வெற்றிட உருளைப் படுக்கை முறை
* உயர்ந்த படுக்கை முறை
 
=== சதுரப் படுக்கை முறை ===
:காய்ந்த வைக்கோல் சுமார் 1.5 கிலோ எடுக்க வேண்டும். வைக்கோலை சிறு சிறு துண்டுகளாக (5 செ.மீ) வெட்ட வேண்டும். பின்னர் அதை வெளியே எடுத்து கொதிக்கும் நீரில் சுமார் பதினைந்து நிமிடங்கள் கொதிக்க வைக்க வேண்டும். இதனால் வைக்கோலிலிருக்கும் நோய் கிருமிகளும் அவற்றின் முட்டைகளும் வெப்பத்தால் அழிந்து விடும். பின்னர் தண்ணீரை பிழிந்து நீக்கி விட்டு வைக்கோலை உபயோகப்படுத்த வேண்டும். 1.5 கிலோ வைக்கோலுக்கு சுமார் 300 கிராம் வித்து தேவைப்படும். இதனை வேளாண் பல்கலைகழகத்திலிருந்து வாங்கலாம். காளான் வித்துக்களை மூன்று பகுதிகளாகப் பிரித்து வைத்துக் கொள்ள வேண்டும். அலுமினிய டிரேயில் ஒரு பாலிதீன் தாளை விரித்து வைக்க வேண்டும்.
:பாலீதின் தாளின் மேல் சுமார் இரண்டு செ.மீ கனத்தில் வைக்கோல் துண்டுகளை பரப்ப வேண்டும். அதில் ஒரு அடுக்காக காளான் வித்துக்களை தூவ வேண்டும். இரண்டாவது அடுக்காக அதன் மேல் வைக்கோலை பரப்பி காளான் வித்திட வேண்டும். இது போல் மூன்றாவது அடுக்காக வைக்கோலைப் பரப்பி வித்திட வேண்டும். இதன் மேல் மீதமிருக்கும் வைக்கோல் துண்டுகளைத் தூவி ஒரு பலகையால் அழுத்த வேண்டும். பின்னர் பாலிதீன் தாழை மடித்து கயிற்றால் கட்ட வேண்டும். இதுவே வித்திட்ட சதுரப் படுக்கை ஆகும்.
:ஓலை வேய்ந்த இடத்தில் தரையில் மணலை பரப்ப வேண்டும். நீர் தெளித்து தரையை குளிர்ச்சியாக்க வேண்டும். அந்த அறையில் வித்திட்ட படுக்கைகளை சமநிலையில் வரிசையாக வைக்க வேண்டும். 16 நாட்களில் காளான் வித்து முளைத்து வெள்ளை நிற நூலிழைப் போல படரும். இப்பஐவத்தில் நீர் தெளிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் தரையில் நீர் தெளித்து அறையை குளிர்ச்சியாக வைக்க வேண்டும்.
:16 நாட்களுக்கு பிறகு பாலிதீன் தாழை வெளியே எடுத்து விட்டு படுக்கையை சாய்வாக தாங்கிகளை கொண்டு நிறுத்த வேண்டும். நாள்தோறும் பூவாளியால் காலையிலும் மாலையிலும் நீர் தெளிக்க வேண்டும். படுக்கையில் சிறு சிறு வெண்மையான மொட்டுக்கள் தோன்றும். பின்னர் அவை வளர்ந்து அடுக்கடுக்காக சிற்பிகள் போல் வளர்ச்சி அடையும். இந்த காளான்களை மூன்று முறை அறுவடை செய்யலாம். முதல் அறுவடைக்கு பிறகு இரண்டாவது , மூன்றாவது அறுவடை ஒருவார இடைவெளியில் செய்யலாம். சிப்பிக் காளானை உருளை வடிவ பாலிதீன் பைகளிலும் தயாரிக்கலாம்.<ref>மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் , சென்னை 6 (ஆகஸ்டு 1983) " காளானும் ஒரு சத்துணேவ" உறையகம் 8.4.2</ref>
=== மேற்கோள்கள் ===
{{Reflist}}
67

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2288834" இருந்து மீள்விக்கப்பட்டது