அமோனியம் நைட்ரேட்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 69:
 
சிலி நாட்டிலுள்ள அடகாமா பாலைவனத்தின் மிகவும் வறட்சியான பகுதிகளில் அம்மோனியம் நைட்ரேட்டானது (அம்மோனியா நைட்ர் - சால்ட்பீட்டர் எனப்படும் அம்மோனியத்தை ஒத்த பொருளாகவும், சோடியம் நைட்ரேட் எனப்படும் நைட்ரேட் சோ்மமாகவும்) இயற்கையான கனிமமாக கிடைக்கிறது. கடந்த காலத்தில் அம்மோனியம் நைட்ரேட்டானது கடந்த காலத்தில் சுரங்கத் தொழிலின் மூலமாக பெறப்பட்டது. நடைமுறையில் தற்போது பயன்படுத்தப்படும் அம்மோனியம் நைட்ரேட்டானது 100 % தொகுப்பு முறையில் தயாரிக்கப்பட்டதாகும்.
 
==தயாரிப்பு==
அம்மோனியம் நைட்ரேட்டின் தொழில் முறை தயாரிப்பானது அமில கார வினையின் அடிப்படையிலானது. இவ்வினையில் அம்மோனியாவானது நைட்ரிக் அமிலத்துடன் வினைப்பட்டு அம்மோனியம் நைட்ரேட்டானது கிடைக்கிறது.<ref>http://www.google.com/patents/pdf/Process_of_producing_concentrated_soluti.pdf?id=XronAAAAEBAJ&output=pdf&sig=ACfU3U0iYFRDUxltKLaVind-3wwP_JYPxg</ref>
:HNO<sub>3</sub> + NH<sub>3</sub> → NH<sub>4</sub>NO<sub>3</sub>
 
நீரற்ற வாயு நிலையில் உள்ள அம்மோனியாவும் அடர் நைட்ரிக் அமிலமும் இவ்வினையில் பயன்படுத்தப்படுகிறது. இந்த வினையானது அதிக அளவிலான வெப்ப உமிழ் வினையாக இருக்கும் காரணத்தால் தீவிரமான வினையாக உள்ளது. 83% செறிவுள்ள கரைசலாக உருவான பிறகு, மிகுதியாக உள்ள நீரானது ஆவியாக்கப்பட்டு 95% முதல் 99.9% வரை செறிவுள்ள அம்மோனியம் நைட்ரேட் கிடைக்கப்பெறுகிறது. இவ்வாறு கிடைக்கும் அம்மோனியம் நைட்ரேட் உருக்கானது சிறு மணிகளாக துாவி கோபுரம் மூலமாக உருவாக்கப்படுகின்றன. இந்த அம்மோனியம் நைட்ரேட் மணிகள் அல்லது குருணைகள் கெட்டிப்படுவதைத் தடுக்க மேலும் உலர்த்தப்பட்டு, குளிர்விக்கப்படுகின்றன. இவ்வாறு கிடைக்கக்கூடிய குறுமணிகள் வணிகரீதியான அம்மோனியம் நைட்ரேட் இறுதி விளைபொருளாகும்.
 
இந்த வினைக்கான அம்மோனியாவானது ஹேபர் முறையில் நைட்ரஜனையும் ஹைட்ரஜனையும் இணைப்பதன் மூலம் கிடைக்கிறது. ஹேபர் முறையில் தயாரிக்கப்ட்ட அம்மோனியாவானது ஆஸ்ட்வால்ட் முறையில் நைட்ரிக் அமிலமாக ஆக்சிஜனேற்ற வினையின் மூலம் மாற்றப்படுகிறது.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/அமோனியம்_நைட்ரேட்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது