இழைமணியப் பழையோள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category [[:Category:மாந்தரின ஊன்குருத்து மரபன் ஒருமைப் பண்புக் குழுக்கள்|மாந்தரின ஊன்...
+ சான்று
வரிசை 4:
[[பைபிள்]] கதையில் வரும் [[ஏவாள்|ஏவாளின்]] பெயரைக் கொண்டு இம்மூதாதையப் பெண்ணை ''Mitochondrial Eve'' ('''இழைமணி ஏவாள்''') என்றும் ஆங்கிலத்தில் அழைப்பர். இருந்தாலும் இப்பெண் மாந்தரினத்தின் முதற்பெண்ணல்ல. மாறாக, தொடர்ச்சியாக வந்த மரபுவழியில் இன்றும் '''தாய்வழி''' வழித்தோன்றல்களைக் கொண்ட ''கடைசிப்'' பெண் மட்டுமே. இப்பெண்ணின் தாயும் பிற மூதாதையர்களும் வாழ்ந்துள்ளனர். தவிர, இப்பழையோள் வாழ்ந்த நாட்களில் இருந்த மற்ற பெண்களின் வழித்தோன்றல்கள் ஆண் வழியில் வந்து இன்றும் வாழ்ந்து வருகிறார்கள். ஆனால், ஏதோ ஒரு தலைமுறையில் அவர்களின் வழித்தோன்றல்கள் அனைவரும் ஆண்களாக இருக்கும்போது அவர்களுடைய இழைமணிய மரபுப்பொருள் அதற்குமேல் கடக்க முடியாமல் போய்விடுகிறது. எடுத்துக்காட்டாக, வலப்புறம் உள்ள படத்தில் உரோசாப்பூ நிறங்கொண்ட பெண்ணும் நீலநிறம் கொண்ட பழையோளின் தலைமுறையைச் சேர்ந்தவர்தான். ஆனால், அவருக்கு இரண்டு ஆண் மகன்கள் மட்டுமே பிறந்ததால் அவரது இழைமணிய மரபுப்பொருள் இன்று இல்லை, மற்ற வழக்கமான மரபுப்பொருள் இன்றும் இருக்கும்.
 
இழைமணியப் பழையோள் எனும் தொன்முது தாய் ஏறத்தாழ 170,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த, அல்லது ஏறத்தாழ 8,000 தலைமுறைக்கு முன்பு வாழ்ந்த ஒரு பெண்மணி. இக் காலப்பகுதியானது, [[ஆப்பிரிக்கா]]வை விட்டு மாந்தர்கள் புலம் பெயர்ந்து சென்றதாக கருதப்படும் 60,000 ஆண்டுகள் என்னும் காலக்கணக்குக்கும் முற்பட்ட காலம்.<ref>{{Citation|last1=Endicott|first1=P|last2=Ho|first2=SY|last3=Metspalu|first3=M|last4=Stringer|first4=C|title=Evaluating the mitochondrial timescale of human evolution|journal=Trends Ecol. Evol. (Amst.)|volume=24|issue=9|pages=515–21|date=September 2009|pmid=19682765|doi=10.1016/j.tree.2009.04.006|url=}} {{Citation|vauthors=Soares P, Ermini L, Thomson N|title=Correcting for purifying selection: an improved human mitochondrial molecular clock|journal=Am. J. Hum. Genet.|volume=84|issue=6|pages=740–59|date=June 2009|pmid=19500773|pmc=2694979|doi=10.1016/j.ajhg.2009.05.001|url=|display-authors=etal}}. [http://www.leeds.ac.uk/news/article/245/new_molecular_clock_aids_dating_of_human_migration_history University of Leeds – New 'molecular clock' aids dating of human migration history]</ref> இந்த இழைமணி முதல்தாய் படியுரு ஆணின் ஒய்-நிறப்புரிக்கு (ஒய்-குரோமோசோம்)க்கு இணையான பெண் படிவம். ஆனால் தந்தை வழி வரும் பொது ஆண் படியுரு வேறு காலத்தது (பிற்காலத்தது).
 
[[பகுப்பு:மரபியல்]]
"https://ta.wikipedia.org/wiki/இழைமணியப்_பழையோள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது