இரும்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: AFTv5Test இல் இருந்து நீக்குகின்றது
No edit summary
வரிசை 61:
# [[தேனிரும்பு]] - எஃகை விட குறைந்த கரி சேர்ந்த இரும்பு கலவை மாழை ஆகும்.
# [[வார்ப்பிரும்பு]] - இரும்பு அல்லது இரும்புக் கலவையை நீர்மநிலைக்கு மாறுமாறு காய்ச்சி வார்ப்பு அல்லது அச்சுகளில் ஊற்றி திண்மநிலைக்கு குளிர்வித்துப் பெறும் இரும்பு வகை ஆகும்.
 
== இரும்பு தயாரித்தல் ==
 
[[File:Chinese Fining and Blast Furnace.jpg|thumb|இரும்புத் தாதுவிலிருந்து இரும்பை உருக்கிப் பிரித்தல். ஊது உலையில் வார்ப்பு இரும்பு தயாரிக்கப்படுகிறது.]]
 
[[File:Iron-Making.jpg|thumb|19 ஆம் நூற்றாண்டில் இரும்பு தயாரிக்கப்பட்ட முறை]]
 
இரும்பு அல்லது எஃகு உற்பத்தி இரண்டு முக்கிய கட்டங்களை உள்ளடக்கிய ஒரு செயல்முறை ஆகும். முதல் கட்டத்தில் கச்சா இரும்பு ஒரு ஊது உலையில் தயாரிக்கப்படுகிறது. மாற்றாக, இது நேரடியாக ஒடுக்க முறையிலும் தயாரிக்கப்படலாம். இரண்டாவது கட்டத்தில் இக்கச்சா இரும்பு வார்ப்பிரும்பாக மாற்றப்படுகிறது <ref name=Greenwood1073>Greenwood and Earnshaw, p. 1073</ref><!--https://books.google.com/books?id=xkVPNtRagDkC-->.
ஒரு சில வரையறுக்கப்பட்ட நோக்கங்களுக்காக தேவைப்படும் போது தூய இரும்பு ஆய்வகங்களில் சிறிய அளவில் தயாரித்துக் கொள்ளப்படுகிறது. முதலில் இரும்பு ஆக்சைடு அல்லது இரும்பு ஐதராக்சைடுடன் ஐதரசனைச் சேர்த்து இரும்பு பென்டாகார்பனைல் தயாரிக்கப்படுகிறது. பின்னர் இதை 250 பாகை செல்சியசு வெப்பநிலைக்கு சூடாக்கிச் சிதைத்து தூய இரும்புத்தூள் தயாரிக்கப்படுகிறது. பெர்ரசு குளோரைடு சேர்மத்தை மின்னாற்பகுப்பு செய்தும் தூய இரும்பு தயாரிக்கலாம்<ref>H. Lux "Metallic Iron" in Handbook of Preparative Inorganic Chemistry, 2nd Ed. Edited by G. Brauer, Academic Press, 1963, NY. Vol. 2. p. 1490–1.</ref>.
=== ஊது உலையில் ===
 
Fe2O3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஏமடைட்டு மற்றும் Fe3O4. என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்டமேக்னடைட்டு என்ற இரும்புத் தாதுக்களில் இருந்து தொழிற்சாலை இரும்பு உற்பத்தி தொடங்குகிறது. இத்தாதுக்களுடன் கார்பன் சேர்த்து சூடுபடுத்தப்படும் வினையான [[உயர்வெப்பக்கார்பன் வினை]]யினால் தாதுக்கள் இரும்பாக ஒடுக்கப்படுகின்றன. இம்மாற்றம் ஊது உலையில் சுமார் 2000° செல்சியசு வெப்பநிலையில் நிகழ்கிறது. கல்கரி வடிவக் கார்பன் இதற்காகப் பயன்படுத்தப்படுகிறது. இச்செயல் முறையில் [[சுண்ணக்கல்|சுண்ணாம்புக்கல்]] இளக்கியாகச் சேர்க்கப்படுகிறது. இளக்கியின் மூலமாக சிலிக்கா மாசுக்கள் அகற்றப்படுகின்றன. கல்கரியும் சுண்ணாம்புக்கல்ல்லும் உலையின் மேற்புறமாக தாதுக்களுடன் சேர்க்கப்படுகின்றன. வெப்பக் காற்று ஊது உலையின் கீழ்ப்புறமாக வேகமாகச் செலுத்தப்படுகிறது.
ஊது உலையில் கல்கரி ஆக்சிசனுடன் வினைபுரிந்து கார்பன் மோனாக்சைடு உருவாகிறது.
:2 C + O<sub>2</sub> → 2 CO
 
கார்பன் மோனாக்சைடு தாதுக்களை உருகிய இரும்பாகக் குறைக்கிறது.
:Fe<sub>2</sub>O<sub>3</sub> + 3 CO → 2 Fe + 3 CO<sub>2</sub>
 
சிறிதளவு இரும்பு நேரடியாக கல்கரியுடன் வினைபுரிந்து இரும்பாக ஒடுக்கப்படுகிறது.
:2 Fe<sub>2</sub>O<sub>3</sub> + 3 C → 4 Fe + 3 CO<sub>2</sub>
உருகலில் இடம்பெற்றுள்ள சுண்ணாம்புக்கல், [[கால்சியம் கார்பனேட்டு]], டோலமைட்டு போன்ற இளக்கிகள் கார்பன் மோனாக்சைடாக மாறுகின்றன. தாதுவின் தன்மைக்கேற்றப்ப இளக்கிகளும் மாறுபடுகின்றன.
:CaCO<sub>3</sub> → CaO + CO<sub>2</sub>
கால்சியம் ஆக்சைடு சிலிக்கன் டையாக்சைடுடன் சேர்ந்து கசடாக மாற்றப்படுகிறது.
:CaO + SiO<sub>2</sub> → CaSiO<sub>3</sub>
செயல்முறையில் உருவான இரும்பும், கசடும் தனித்தனியாக வெளியேற்றப்படுகின்றன.
 
[[File:LightningVolt Iron Ore Pellets.jpg|thumb|எஃகு தயாரித்தலில் பயன்படும் தாதுக் குவியல்]]
 
=== நேரடி இரும்பு ஒடுக்கம் ===
 
நேரடியாக இரும்பு தயாரித்தல் சூழலுக்கு தகுந்தவாறு பின்பற்றப்படுகிறது. நேரடி இரும்பு ஒடுக்கம் முறை மாற்று முறையாகப் பயன்படுத்தப்படுகிறது.
 
இயற்கை வாயு பகுதியாக ஆக்சிசனேற்றம் செய்யப்பட்டு கார்பன் மோனாக்சைடு உருவாக்க்கப்படுகிறது.
:2 CH<sub>4</sub> + O<sub>2</sub> → 2 CO + 4 H<sub>2</sub>
 
இவ்வாயு இரும்புத்தாதுவுடன் சேர்க்கப்பட்டு சூடுபடுத்தப்படுவதால் இரும்பு உருவாகிறது.
:Fe<sub>2</sub>O<sub>3</sub> + CO + 2 H<sub>2</sub> → 2 Fe + CO<sub>2</sub> + 2 H<sub>2</sub>O
சுண்ணாம்புக்கல் இளக்கி சேர்க்கப்பட்டு சிலிக்கா மாசுக்கள் அகற்றப்படுகின்றன.
 
இவற்றுள் பல உட்பிரிவுகள் உள்ளன.
"https://ta.wikipedia.org/wiki/இரும்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது