மாடர்ன் தியேட்டர்ஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி JayarathinaAWB BOTஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
→‎தயாரிப்புகள்: உள்ளிணைப்புகள் சரிசெய்யப்பட்டன
வரிசை 57:
படத்தயாரிப்பில் தீவிரமாக இறங்கிய சுந்தரம் தனது முதல் தயாரிப்பாக "சதி அகல்யா" என்ற படத்தை தயாரித்தார். பிற்காலத்தில் "கவர்ச்சிக் கன்னி"யாகத் திகழ்ந்த இலங்கைக் குயில் [[தவமணிதேவி]] தான் இந்தப்படத்தின் கதாநாயகியாவார்.1937-இல் வெளிவந்த இப்படம் நல்ல வெற்றி பெற்றது. தொடர்ந்து, "பத்மஜோதி" என்ற படத்தையும் "புரந்தரதாஸ்" என்ற [[கன்னடம்|கன்னடப்]] படத்தையும் தயாரித்தார். 1938இல், "பாலன்" என்ற [[மலையாளம்|மலையாளப்]] படத்தைத் தயாரித்தார். மலையாள மொழியின் முதல் பேசும் படம் இதுதான். இப்படம் வெற்றிகரமாக ஓடியது. பின்னர் சுந்தரம் தயாரித்த படம் "நாம தேவர்." இது, தமிழில் வெளியான 100_வது படம் என்ற பெருமையைப் பெற்றது. 1938_ம் ஆண்டில் "மாயா மாயவன்" என்ற படத்தை சுந்தரம் தயாரித்தார். தமிழில் எடுக்கப்பட்ட முதல் சண்டைப்படம் இது. இதில், டி.கே.சம்பங்கி என்ற பிரபல [[நாடகம்|நாடக]] [[நடிகர்]] கதாநாயகனாக நடித்தார். நொட்டானி என்பவர் இப்படத்தை இயக்கினார்.
 
1944-இல் பர்மா ராணி, 1946-இல் சுலோச்சனா,1948-இல் ஆதித்தன் கனவு,1949-இல் மாயாவதி,1950-இல் [[எம். என். நம்பியார்]] நடித்து வெளியான துப்பறியும் கதை திகம்பர சாமியார்,1951-இல் சர்வாதிகாரி,1952-ல் வளையாபதி, 1960-இல் பாக்தாத் திருடன், போன்ற பல வெற்றிப் படங்களை மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்தினர் எடுத்தனர்.இந்நிறுவனம் எடுத்த முதல் வண்ணப்படம் [[அலிபாபாவும் நாற்பது திருடர்களும் (1956 திரைப்படம்)|அலிபாபாவும் 40 திருடர்களும்]] ஆகும்.
 
இவர் எடுத்த சில படங்கள் விவரம் வருமாறு: தட்ச யக்ஞம், [[கம்பர்]], [[தாயுமானவர்]], [[மாணிக்கவாசகர்]], உத்தமபுத்திரன், பக்த கெளரி, தயாளன், மனோன்மணி, செளசெள, பர்மா ராணி, ஆயிரம் தலைவாங்கிய அபூர்வ சிந்தாமணி, ஆதித்தன் கனவு, திகம்பர சாமியார், [[மந்திரிகுமாரிமந்திரி குமாரி]], பொன்முடி, சர்வாதிகாரி, தாய் உள்ளம், திரும்பிப்பார், இல்லறஜோதி, சுகம் எங்கே?, கதாநாயகி, மகேஸ்வரி, அலிபாபாவும் 40 திருடர்களும், பாசவலை, ஆரவல்லி, பெற்ற மகளை விற்ற அன்னை, தலைகொடுத்தான் தம்பி, வண்ணக்கிளி, கைதி கண்ணாயிரம், [[குமுதம்]], கொஞ்சும் குமரி, அம்மா எங்கே?, வல்லவனுக்கு வல்லவன், வல்லவன் ஒருவன், இரு வல்லவர்கள், எதிரிகள் ஜாக்கிரதை, காதலித்தால் போதுமா, நான்கு கில்லாடிகள், சி.ஐ.டி.சங்கர், ஜஸ்டிஸ் விஸ்வநாதன், கருந்தேள் கண்ணாயிரம் இப்படிப் பல படங்கள் உண்டு.
 
[[இரண்டாம் உலகப் போர்]] நடந்த காலத்தைச் சித்தரிக்கும் பர்மா ராணி, தமிழிலக்கியத்தில் புகழ்பெற்ற வளையாபதி, இவற்றோடு சிறுவர்களுக்கான கதை அலிபாபா இவற்றை மிகவும் சுவைபட படம் எடுத்தனர். [[ஆர். எஸ். மனோகர்|ஆர்.எஸ்.மனோகரை]] வைத்து கைதி கண்ணாயிரம் போன்ற படங்களையும் எடுத்தனர் . ஜெய்சங்கரை வைத்து பல 007 மாதிரியான துப்பறியும் படங்களையும் எடுத்திருக்கிறார். இவர்கள் எடுத்த மொத்த படங்களின் பட்டியல் அந்த நிறுவனத்தின் வாயிலில் பெரிய விளம்பரப் பலகையில் எழுதி வைத்திருந்தார்கள்.
 
==குறிப்பிடத்தக்க ஆக்கங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/மாடர்ன்_தியேட்டர்ஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது