ஆற்றல் காப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
No edit summary
வரிசை 1:
'''ஆற்றல் காப்பு''' அல்லது '''சக்திக் காப்பு''' (Conservation of energy) இயற்பியலில் [[ஆற்றல் காப்பு விதி]]யின்படி, தனியான தொகுதியொன்றின் மொத்த [[ஆற்றல்]] [[மாறிலி]] என்பதுடன் அதன் வடிவங்களை மாற்றலாமேயன்றி ஆற்றலைப் புதிதாக உருவாக்க முடியாது. எடுத்துக்காட்டாக உராய்வு [[இயக்க ஆற்றல்|இயக்க ஆற்றலை]] [[வெப்பம்|வெப்ப]] ஆற்றலாக மாற்றுகிறது. [[வெப்ப இயக்கவியல்|வெப்ப இயக்கவியலில்]], அதன் முதல் விதி, வெப்ப இயக்கவியல் தொகுதிகளில் ஆற்றல் காப்புப் பற்றிய கூற்றாக அமைகின்றது. இது ஆற்றல் காப்புப் பற்றிய முழுமையான நோக்கு ஆகும். சுருக்கமாக ஆற்றல் காப்பு விதி பின்வருமாறு கூறுகின்றது:
 
* ஆற்றல் உருவாக்கப்படவோ அழிக்கப்படவோ முடியாதது,
* அதனை ஒரு வடிவத்தில் இருந்து இன்னொரு வடிவத்துக்கு மாற்றவோ அல்லது ஒரு பொருளிலிருந்து இன்னொரு பொருளுக்கு மாற்றவோ மட்டுமே முடியும்,
* மொத்த ஆற்றல் அளவு மாறாது.
 
ஒரு சக்தி வடிவத்திலிருந்து இன்னோர் சக்தி வடிவத்துக்கு ஆற்றல் மாற்றப்படும் போது வேலை செய்யப்படுகின்றது. அதாவது அங்கு விசை தொழிற்படும். உதாரணமாக உயரத்திலிருக்கும் ஒரு பந்தில் அழுத்த சக்தி சேமிக்கப்பட்டிருக்கும். அது கீழே விழும் போது அப்பந்தில் தாக்கும் விசைகள் காரணமாக அதில் காணப்பட்ட அழுத்த சக்தி வேறு சக்தி வடிவங்களுக்கு மாற்றமடைகின்றது. பந்து விழும் போது தாக்கும் புவியீர்ப்பு விசையால் அழுத்த சக்தி இயக்க சக்தியாக மாற்றமடைகின்றது. பந்து விழும் போது தாக்கும் வளித்தடை விசையால் அழுத்த சக்தி வெப்ப சக்தியாக மாறுகின்றது.
 
மேற்கூறப்பட்ட சந்தர்ப்பத்தை பின்வருமாறு சுருக்கமாக எடுத்துரைக்கலாம். இங்கு சக்திக் காப்பு பயன்படுத்தப்படுகின்றது.
ஆரம்ப அழுத்த சக்தி = இறுதி அழுத்த சக்தி + தாக்கிய விசைகளால் செய்யப்பட்ட வேலை
ஆரம்ப அழுத்த சக்தி = இறுதி அழுத்த சக்தி + புவியீர்ப்பால் செய்யப்பட்ட வேலை + வளித்தடையால் செய்யப்பட்ட வேலை
ஆரம்ப அழுத்த சக்தி = இறுதி அழுத்த சக்தி + இயக்க சக்தி + வெப்ப சக்தி
 
மேற்கூறியது போன்று உலகில் நடைபெறும் அனைத்து மாற்றங்களும் சக்திக் காப்புக்குக் கட்டுப்பட்டே நடைபெறுகின்றது.
 
==வெப்ப இயக்கவியலின் முதலாம் விதி==
 
ஒரு மூடிய தொகுதி ஒன்றுக்கு (சடப்பொருளின் பரிமாற்றத்தை அனுமதிக்காது; சக்தி, வேலை பரிமாற்றத்தை அனுமதிக்கும்) வெப்பவியக்கவியலின் முதலாம் விதியைப் பின்வருமாறு சுருக்கமாக விபரிக்கலாம்:
ΔQ = ΔU + ΔW
இங்கு மூடிய தொகுதி ஒன்றுக்குள் வழங்கப்படும் அல்லது தொகுதியிலிருந்து எடுக்கப்படும் சக்தி அதன் உள்ளார்ந்த வெப்ப சக்தி (U) உடனும், அது செய்யும் வேலை (W) உடனும் தொடர்புபடுகின்றது என்பதை விளக்குகின்றது.
 
[[பகுப்பு:ஆற்றல்]]
"https://ta.wikipedia.org/wiki/ஆற்றல்_காப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது