இலக்கியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 115:
<ref>{{cite book | title=இலக்கியக்கலை | publisher=திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை-18 | author=பேராசிரியர் அ.ச.ஞானசம்பந்தன் | year=1999 | pages=29-45}}</ref>
 
===இலக்கிய வகைகள்===
 
பொதுவாக, இலக்கியத்தை வடிவ அமைதி,பொருள், வெளிப்பாட்டு முறை ஆகியவற்றைக் கொண்டு பல வகையாகப் பாகுபடுத்தப்படும்.
 
==அயல்நிலைப் பாகுபாடு==
 
இலக்கியத்தைத் தூய இலக்கியம், சார்பு இலக்கியம் என வகைப்படுத்துவர்.இவற்றுள் தூய இலக்கியம் எனப்படுவது,இலக்கியத்தின் இயல்புகள் யாவும் முழுமையாக இடம் பெற்றுள்ள படைப்பிலக்கியமாகும்.கற்பனைக்கோ,
கலையழகிற்கோ இடம் தராமல் கருத்துகளை அறிவுறுத்தும் இலக்கியம் சார்பு இலக்கியமாகும்.
 
==அனுபவ நிலைப் பாகுபாடு==
 
ஒர் இலக்கிய படைப்பானது,படைப்பாளனின் அனுபவத் தன்மை,செறிவு வகை,மனித உறவு,முயற்சித்திறன் ஆகியவற்றிற்கேற்ப படைக்கப்படுகிறது.இந்த அனுபவ நிலையையும் பொருளின் இயல்பையும் கருத்தில்கொண்டு இலக்கியத்தை ஐந்து வகைப்பட்டனவாகப் பாகுபடுத்தப்படும்.
 
(1)தன் சொந்த அனுபவத்தின் அடிப்படையில் படைக்கப்படும் இலக்கியம். இவற்றுள் முதன்மை இடம் பெறுவது தன்னுணர்ச்சிப் பாடல்களாகும்.அடுத்து இசைப்பாடல்களும் பக்திப் பாடல்களும் அனுபூதிப் பாடல்களும்,இரங்கற்பாக்களும்,தன் வரலாறுகளும்,பயண நூல்களும்,வாழ்க்கை விளக்கமும்,கலை இலக்கிய திறனாய்வுகளும் அடங்கும்.
 
(2)மனித இனத்திற்குப் பொதுவாக அமைந்த வாழ்க்கையைப் பற்றிய இலக்கியம். அறநூல்கள், காப்பியங்கள், வரலாற்று நூல்கள், அம்மானைப் பாடல்கள், கதைப்பாடல்கள்,கதைகள்,புதினங்கள், நாடகங்கள் முதலானவை உதாரணங்களாகும்.
 
(3)பல்வகையாக விரிந்து கிடக்கும் சமுதாயத்தைச் சித்திரிக்கும் இலக்கியம்.இதனுள் வருணனை, விளக்கம், கிளத்தல் நிறைந்த இலக்கிய வகைகள் அடங்கும். கம்பனின் இராமகாதை போன்ற காப்பியங்களும்,மதுரைக் காஞ்சி, பட்டினப்பாலை, மலைபடுகடாம் போன்ற வருணனை செய்யுள்கள் எடுத்துக்காட்டுகளாவன.
 
(4)இயற்கை பற்றி எழுந்த இலக்கியம். எடுத்துக்காட்டு:அழகின் சிரிப்பு,ஆற்றுப்படை நூல்கள், ஐந்திணைப் பாடல்கள்,குறவஞ்சி இலக்கியங்கள், காப்பியங்களில் இடம் பெறும் நாட்டு,நகர,ஆற்றுப் படலங்கள் முதலியன.
 
(5)இலக்கியம் பற்றியும் கலைநயம் பற்றியும் எடுத்துரைக்கும் இலக்கியம்.இவற்றுள் ஐந்து இலக்கண நூல்கள்,தண்டியலங்காரம்,உவமான சங்கிரகம் போன்ற அணியிலக்கண
நூல்கள், பஞ்ச மரபு ,கூத்து நூல்
போன்ற கலைவிளக்க நூல்கள் அடங்கும்.
 
==வடிவ அமைதிப் பாகுபாடு==
 
துறை,தாழிசை,விருத்தம் உள்ளிட்ட செய்யுள்கள், யாப்பிலக்கியங்கள்,உரைநடை இலக்கியங்கள் இதன் பாற்படும்.
<ref>{{cite book | title=இலக்கியக்கலை | publisher=திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை-18 | author=பேராசிரியர் அ.ச.ஞானசம்பந்தன் | year=1999 | pages=47-52}}</ref>
== மேலும் காண்க ==
 
"https://ta.wikipedia.org/wiki/இலக்கியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது