புத்தத்தன்மை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
சி விரிவாக்கம் மற்றும் சில தன்முரணாட்சிகளை களைதல்
வரிசை 1:
[[படிமம்:Mahayanabuddha.jpg|thumb|280px|right|அமர்ந்த புத்தர் ]]
 
[[பௌத்தம்|பௌத்தத்தில்]] '''புத்தத்தன்மை'''([[சமஸ்கிருதம்]]:''புத்தத்துவம்'', [[பாளி]]:''புத்தத்த'', அல்லது (இரண்டிலும்) ''புத்தபாவம்'') என்பது முற்றிலும் போதியினை உணர்ந்த நிலையினை குறிக்கும். இந்நிலையை சம்யக்சம்போதி என அழைப்பர், அதாவது பரிபூரண போதிநிலை ஆகும். இந்நிலையினை அடைந்த ஒருவரை '''புத்தர்''' என அழைப்பர்.
 
==சொல் விளக்கம்==
 
பாளி சூத்திரங்களிலும் மற்றும் [[தேரவாதம்|தேரவாதத்திலும்]], '''புத்தர்''' என்ற சொல், எவருடைய உபதேசத்தினையும் பெறாமல் சுயமாக போதியினை உணர்ந்தவர்களே ''புத்தர்கள்'' என அழைக்கப்படுகின்றனர். இவர்களின் போதனையினால் போதியினை உணர்ந்தவர்கள் [[அருகன்]] என அழைக்கப்படுகின்றனர். இந்த பெயர் புத்தர்களும் உரியது என்பது குறிப்பிடத்தக்கது. [[மகாயானம்|மகாயான பௌத்தத்தில்]] '''புத்தர்''' என்பது முழுமையாக ஞானம் பெற்றுப் போதி நிலையை அடைந்த எவரையும் குறிக்கும். ஆகவே, ''அருகன்களும்'' ஒருவகையில் புத்தர்களாக கருதவேண்டிவந்தாலும் பல்வேறு காரணங்களுக்காக இவர்கள் மகாயானத்தில் முழுமையான புத்தர்களாக கருதப்படுவதில்லை. இவர்கள் நிர்வாண நிலை அடைந்த போதிலும், மற்றவர்களுக்கு போதிக்கும் திறன் இல்லாததால் இவர்களை மகாயானம் பொதுவாக புத்தர்களாக ஏற்றுக்கொள்வதில்லை.
 
 
மகாயான பௌத்தத்தில் '''புத்தர்''' என்பது முழுமையாக ஞானம் பெற்றுப் போதி நிலையை எவரையும் அடைந்த ஒருவரைக் குறிக்கும். எனினும் பொதுவாக தேரவாத [[அருகன்]]களை [[மஹாயானம்|மஹாயானத்த்தில்]] புத்தர்களாக ஏற்றுக்கொள்வதில்லை.
 
பௌத்த சூத்திரங்களில், பூரண போதி நிலையை அடைந்த அனைவருமே '''புத்தர்''' என அழைக்கப்படுகின்றனர். அவ்வப்போது நிர்வாண நிலை அடைந்த அனைவரையும் குறிக்கவும் இந்தச் சொல் பயன்படுத்தப்படுகிறது.
 
பௌத்தர்கள் கௌதம புத்தரை மட்டுமே ஒரே புத்தராகக் கருதவில்லை. பாளிச் சூத்திரங்களில் சாக்கியமுனி புத்தருக்கு முன் அவதரித்த [[28 புத்தர்கள்]] குறித்த விவரங்கள் தரப்பட்டுள்ளன. மகாயான பௌத்தம் இதை இன்னும் விரிவாகி, [[அமிதாப புத்தர்]], [[மருத்துவ புத்தர்]] எனப் பல்வேறு புத்தர்களை தன்னுள் இணைத்துக்கொண்டது. அனைத்து பௌத்த பிரிவுகளும் [[மைத்திரேயர்|மைத்திரியேரே]] அடுத்த புத்தர் என ஒன்று சேர்ந்து நம்புகின்றன.
வரி 16 ⟶ 12:
பாளிச் சூத்திரங்களில் இரண்டுவகையான புத்தர்களே கூறப்பட்டுள்ளனர், ஆனால் உரைகளில் மூன்றாவது வகைப் புத்தரும் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளார்.
 
#'''சம்யக்சம்புத்தர்கள் (संयक्संबुद्ध)''': இவர்கள் சுயமாக போதிநிலையை உணர்ந்தவுடன், மற்றவர்கள் நற்கதி அடைவதற்காக மக்களுக்குப் தர்மத்தை போதிப்பர். உலகத்தில் தர்மம் முற்றிலும் மறைந்த நிலையில், இவர்கள் மீண்டும் தர்மத்தினை உபதேசிப்பர். சம்யகசம்புத்தர்கர்கள் தோன்றும் போது, உலகில் ஏனைய புத்தர்களின் போதனைகள் முற்றிலும் மறைந்திருக்கும். எனவே இவர்கள் தர்மத்தினையும் போதி நிலை எய்துவதற்கான வழியையும் சுயமாக தெரிந்துக்கொள்வர்.
 
#'''பிரத்யேகபுத்தர் (प्रत्येकबुद्ध)''': இவர்களை ''மௌன புத்தர்கள்'' எனவும் அழைப்பர். சம்யக்சம்புத்தர்களைப் போலவே சுயமாக போதியினை உணர்ந்திருப்பினும், மற்றவர்களுக்குத் தர்மத்தை உபதேசிக்கும் இயல்பு இவர்களிடத்தில் இல்லை. எனினும் ஒழுக்கமான வாழ்வு வாழ்வதற்கா வழிமுறைகளை இவர்கள் கூறலாம்
 
சில பாளி உரைகளில் மூன்றாம வகை புத்தர்களாக '''ஸ்ராவபுத்தர்கள்''' கூறப்படுகின்றனர். சம்யக்சம்புத்தர்களின் போதனையினால் புத்தநிலையை அடைந்தவர்கள் ஸ்ராவக புத்தர்கள் ஆவர். இவர்கள் பாளி சூத்திரங்களில் ''[[அருகன்]]'' என அழைக்கப்படுகின்றனர். எனினும் [[மகாயானம்]] இவர்களையும் புத்தர்களாகவே கருதுகிறது. இவர்களை '''அனுபுத்தர்''' எனவும் அழைப்பர். இவர்களே புத்தர்களின் போதனைகளால் போதிநிலை அடைந்ததினால், புத்தரின் போதனைகள் முற்றிலும் மறைந்த நிலையில் இவர்கள் தோன்ற மாட்டார்கள். இவர்கள் மற்றவர்களையும் போதிநிலை இட்டுச்செல்ல முடியும்
 
==புத்தரின் கூறுகள்இயல்புகள்==
===ஒன்பது சிறப்பியல்புகள்===
 
#அர்ஹத(அருக) (अर्हत) - நிர்வாண நிலை அடைந்தவர்
#சம்யக்சம்புத்த (संयक्संबुद्ध) - பரிபூரணமான போதி நிலை அடைந்தவர்
#வித்யாசரணசம்பன்ன (विद्याचरणसंपन्न) - அறிவு மற்றும் நடத்தையில் பூரணமானவர்
#சுகத (सुगत) - सु - गत நன்றாக சென்றவர்
#அனுத்தரலோகவித் (अनुत्तरलोकविद्) - அனைத்து உலகங்களையும் அறிந்தவர்
#அனுத்தரபுருஷசாரதி (अनुत्तरपुरुषदम्यसारति) - அனைத்து மனிதர்களுக்கு ம் சாரதி(வாழக்கை வழிநடத்தும் பொருட்டு)
#சாஸ்திருதேவமனுஷ்யாணாம் (शास्तृदेवमनुष्याणां) - தேவர்கள் மற்றும் மனிதர்களின் ஆசிரியர்
#புத்த (बुद्द) - போதியை உணர்ந்தவர்
#பகவத் (भगवत्) - புனிதமானவர், மரியாதைக்குரியவர்
 
===மனத்தெளிவு===
வரி 39 ⟶ 36:
அனைத்து பௌத்த பிரிவினரும், '''புத்தர்''' மனதால் மிகவும் தூய்மையானவர் என கருதுகின்றனர். அவருடைய மனம் ஆசை, பகைமை, அறிவின்மை போன்றவற்றுக்கு அப்பாற்ப்பட்டது. புத்தர் சம்சாரத்திலிருந்து முற்றிலும் விடுப்பட்டவர். வாழ்க்கையின் நிலையின்மையைத் தானும் புரிந்து கொண்டு மற்றவர்களுக்கும் அதை போதித்து மக்களுக்கு நற்கதி காட்டுபவர்.
 
====பாளிச்பாளி சூத்திரங்கள்====
===புத்தரின் இயல்புகள்===
====பாளிச் சூத்திரங்கள்====
 
பாளிச் சூத்திரங்களில் புத்தரின் மனித இயல்புகளே மெச்சப்படுகின்றன. புத்தர் அளவற்ற மன ஆற்றல் பெற்றவராகக் கருதப்படுகிறார். புத்தரின் மனம் மற்றும் உடலும் கூட நிலையற்றவைதான், இருந்தாலும் புத்தர் அந்த நிலையற்ற தன்மையை புரிந்துப் கொண்டவராக உள்ளார். தர்மத்தின் மாற்றமில்லாத தன்மையை முற்றிலும் அறிந்தவராக உள்ளார். இவையே தேரவாத பௌத்தம் மற்றும் ஆதிகால பௌத்த பிரிவுகளின் கருத்துகளாகும்.
 
புத்தர்களின் தெய்வீக ஆற்றல்கள் பாளிச் சூத்திரங்களில் கூறப்பட்டிருப்பினும், தேரவாத பௌத்தம் அவர்களது மனித இயல்புகளுக்கு முதன்மை அளிக்கிறது. அழிவற்ற புத்தர் என்ற தத்துவம் ஆங்காங்கு பாளிச்பாளி சூத்திரங்களில் காணப்படுகிறது.
 
====அழிவற்ற புத்தர்====
[[படிமம்:BuddhaTwang.jpg|thumb|300px|சாக்கியமுனி புத்தர்]]
 
மகாயான பௌத்ததில், புத்தர் அழிவற்றவர். [[தர்மகாயம்|தர்மகாய]] உருவத்தை கொண்டவர். எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்ட ஒருவராக அவர் கருதப்படுகிறார். புத்தர் அனைத்தையும் அறிந்தவராய், எங்கும் [[மகாயான பௌத்தம்#த்தாகதகர்பம்|நிறைந்திருப்பவராய்]] கருதப்படுகிறார். இவரதுபுத்தர்களது தெய்வீக தன்மைகள் பல்வேறு மஹாயான சூத்திரங்களில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது.
 
==== புத்தரை கடவுளாக கருதுதல் ====
பௌத்த அறிமுகமில்லாதோர், புத்தரைப் பௌத்தர்களின் 'கடவுள்' எனத் தவறுதலாக நினைத்துவிடுகின்றனர். எனினும், பௌத்தம் நாத்திக கொள்கையுடையது, கடவுள் என்ற கருத்து பௌத்தத்தில் இல்லை. புத்தர் என்றவர் உயிர்களின் நற்கதிக்கான ஒரு வழிகாட்டி மட்டுமே. அனைத்தையும் படைத்தவர், கட்டுப்படுத்தக்கூடியவர் என்ற நிலையில் 'கடவுள்' என்ற தத்துவம் பௌத்தத்தில் இல்லை. பௌத்தத்தில் அனைத்துக்கும் காரணம் கர்மமே ஒழிய கடவுள் இல்லை.
 
"https://ta.wikipedia.org/wiki/புத்தத்தன்மை" இலிருந்து மீள்விக்கப்பட்டது