குறைகடத்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

6,517 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
 
குறைக்கடத்தியின் மற்றொரு முக்கியமான பண்பு [[ஒளிமின்கடத்துமை]]. குறைக்கடத்தியின் மீது விழும் ஒளியலைகளின் ஆற்றலானது குறைக்கடத்தியின் [[ஆற்றல் இடைவெளி]]யைக் காட்டிலும் கூடுதலாக உடையதாய் இருப்பின், குறைக்கடத்தியின் மின்கடத்துமை கூடுகின்றது. ஒளியலைகளின் ஆற்றல், குறைக்கடத்தியின் அணுக்களின் பகிர்பிணைக்கை (covalent bond) அல்லது எதிர்மின்னி ஆற்றல் இடைவெளியைக் (electron energy band gap) காட்டிலும் கூடுதலாக இருப்பின், பகிர்பிணைப்பு முறியும், இதனால் புதிய எதிர்மின்னிகளும் புரைமின்னிகளும் உருவாகின்றன. எனவே மின்கடத்துமை கூடுகின்றது. இவ் ஒளிமின்கடத்துமை குறைக்கடத்திகளின் தனிச்சிறப்பான பண்புகளில் ஒன்று. [[மாழை]]களைப் போல அல்லாமல் குறைக்கடத்திகளின் இரண்டு வகையான நகரும் மின்மங்கள் உள்ளன: எதிர்மின்மம் உடைய எதிர்மின்னி மற்றும் நேர்மின்மம் உடைய புரைமின்னி (மின் துளை). குறைக்கடத்தியின் இன்னொரு முக்கியமான பண்பு, மிகச் சிறிதளவே குறிப்பிட்ட வகையான வேற்றணுக்கள் சேர்த்தாலும், குறைக்கடத்தியின் மின்கடத்துமையும் மிகமிகப் பெரிய அளவிலே மாறவல்லது.
 
== பொருட்கள் ==
[[File:Silicon.jpg|thumb|300px|right|நுண்மின்னணுவியல் மற்றும ஒளிமின்னழுத்தத்தில்( photovoltaics) குறைகடத்திப் பொருளாக பயன்படும் [[சிலிக்கான்]] படிகங்கள்]]
* :பெரும் எண்ணிக்கையிலான தனிமங்களும் சேர்மங்களும் குறைகடத்திப் பண்புகளைப் பெற்றிருக்கின்றன.
:[[தனிம வரிசை அட்டவணை|தனிமவரிசை அட்டவணையின்]] 14 வது தொகுதியிலுள்ள [[சிலிக்கான்]] மற்றும் [[செர்மானியம்]] உள்ளிட்ட குறிப்பிட்ட தூய தனிமங்கள் குறைகடத்தி தயாரிப்பில் வணிக ரீதியாக முக்கியத்துவம் கொண்ட தனிமங்களாகும்.[[சிலிக்கான்]] மற்றும் [[செர்மானியம்]] ஆகியவை திறம்பட பயன்படுத்தப்படுகின்றன, ஏனெனில் அவை 4 வெளிப்புற [[எலக்ட்ரான்|எலக்ட்ரான்களை]] அவற்றின் வெளிக்கூட்டில் கொண்டுள்ளன, அவை ஒரே நேரத்தில் எலக்ட்ரான்களை சமமாக பெறவோ அல்லது இழக்கவோ செய்யும் திறனை அளிக்கின்றன.
 
* :இரட்டைச்சேர்மங்கள் குறிப்பாக தனிம வரிசை அட்டவணையின் 13 மற்றும் 15 ஆவது தொகுதிகளைச் சேர்ந்த [[காலியம்]], [[ஆர்சனிக்|அர்சனைடு]], 12 மற்றும் 16 ஆவது தொகுதிகள்,14 மற்றும் 16 வது தொகுதிகள் மற்றும் 14 வது தொகுதியின் பல்வேறு தனிமங்கள்.உதாரணம்: சிலிக்கன் கார்பைடு
 
* :ஆக்சைடு மற்றும் கலப்புலோகங்கள் போன்ற முத்தனிமச் சேர்மங்கள்
 
* :கரிமச்சேர்மங்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட கரிமக் குறைகடத்திகள்
[[படிமம்:Motorola TFT LED Display 72014152001AA - IC 4770-0113.jpg|200px|thumb|வலது|மோட்டோரோலா தொடுதிரை செல்பேசியில் உள்ள குறைகடத்திகளுடன் கூடிய ஒருங்கிணைந்த சுற்று (IC Chip)]]
பெரும்பாலும் பொதுவாக பயன்படுத்தப்படும் குறைகடத்திகள் படிக திண்மங்களாகும். ஆனால் படிக அமைப்பு இல்லாத மற்றும் நீர்ம குறைகடத்திகளும் அறியப்கிடுன்றன.உதாரணம்: நீரியமாக்கிய பளிங்குருவில்சிலிக்கன் (hydrogenated amorphous silicon) மற்றும் [[ஆர்செனிக்]], [[செலினியம்]] மற்றும் [[டெலூரியம்]] ஆகியவற்றின் பல்வேறு விகிதாச்சாரத்தில் அமைந்த [[கலவை|கலவைகள்]].இடைநிலை கடத்துத்தன்மையின் பண்புகள் மற்றும் வெப்பநிலை கொண்ட கடத்துத்தன்மையின் விரைவான மாறுபாடு, அத்துடன் அவ்வப்போது எதிர்மறை எதிர்ப்பு ஆகியவற்றால் இந்த கலவைகள் நன்கு அறியப்பட்ட குறைக்கடத்திகளாகும்.
 
==குறைகடத்தி பொருட்களின் தயாரிப்பு==
இன்றைய மின்னணு தொழில்நுட்பத்தில், [[மடிக்கணினி|மடிக்கணினிகள்]], மின்வருடி, தொலைபேசி, உள்ளிட்ட பல்வேறு மிண்ணணு சாதனங்களில் பயன்படுத்தப்படும் [[ஒருங்கிணை சுற்றமைப்பு|ஒருங்கிணைந்த சுற்று]] (IC) என்ற மிக முக்கியமான அம்சம் கொண்ட அங்கங்களில் இவ்வகையான குறைக்கடத்திகள் பயன்படுத்தப்படுகின்றன.ஒருங்கிணை சுற்றமைப்பில் (IC) பயன்படுத்துவதற்காக குறைகடத்திகளானது பெருமளவில் தயாரிக்கப்படுகின்றன.ஒரு சிறந்த குறைக்கடத்தி பொருள் உருவாக்க,அவற்றில் பயன்படத்தப்பட்ட தனிமங்களின் இரசாயன தூய்மை மிக முக்கியமானதாகும். ஏதேனும் சிறிய குறைபாடுகள் கடுமையான விளைவு ஏற்படுத்தவல்லது. குறைகடத்தி பொருள் எவ்விதம் பயன்படுத்தப்பட்டுள்ளதோ அந்த அளவுக்கு குறைகடத்தியில் அவை செயலாற்றுகின்றன.
 
 
== குறைக்கடத்திகளின் வகைகள் ==
3,882

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2291861" இருந்து மீள்விக்கப்பட்டது