திரைப்படம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 62:
[[எல்லிஸ் ஆர்.டங்கன்]](1909-2001)அமெக்காவின் ஓஹியோ மாகாணத்தில் உள்ள பார்டன் நகரில் பிறந்தவர்.தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் [[சினிமாடோகிராபி]]யில் பட்டம் பெற்று,1935ல் இந்தியா வந்து சேர்ந்தார்.அதற்குக் காரணமானவர் அவரோடு அமெரிக்காவில் சினிமாவைப் பயின்ற மணிலால் டான்டன் என்ற மும்பையைச் சேர்ந்த இந்தியராவார். டங்கனுடன் அவரது வகுப்புத் தோழன் மைக்கேல் ஆர்மலேவ் என்பவரும் உடன் வந்தார்.கொல்கத்தாவில் [[நந்தனார்]]படத்தை எடுத்துக்கொண்டிருந்த டான்டன் குழுவினர் மூலமாக [[சதிலீலாவதி]]படத்தின் தயாரிப்பாளருடன் அறிமுகமானார் டங்கன்.அப்போது சதிலீலாவதியை இயக்க டங்கன் ஒப்பந்தமானார்.டங்கனின் அந்த நுழைவு தமிழ்த் திரைப்பட வரலாற்றில் ஒரு மைல் கல்லாக அமைந்தது.
 
===சதிலீலாவதியின் சிறப்புகள்====
 
எல்லிஸ் ஆர்.டங்கன் இயக்கிய சதிலீலாவதியில் [[எம்.கே.ராதா]], எம்.எஸ்.ஞானாம்பாள், [[எம்.ஜி.ராமச்சந்திரன்]], [[என்.எஸ்.கிருஷ்ணன்]],[[டி.எஸ்.பாலையா]] முதலான நட்சத்திரங்கள் அறிமுகமாயினர்.எம்.கே.ராதாவின் தந்தையும் முன்னணி நாடகக்காரருமான [[எம்.கந்தசாமி முதலியார்]] இப்படத்திற்கு வசனம் எழுதினார். பாடல்களை சுந்தர வாத்தியார் இயற்றினார். [[ஆனந்த விகடன்]] இதழில் தொடராக எழுதி வந்த [[எஸ்.எஸ்.வாசனின்]] புதினமே இப்படத்தின் கதையாகும்.இந்தப் படத்தின் தயாரிப்பை கோவை மருதாசலம் செட்டியார் என்பவர் ஏற்றிருந்தார்.18ஆயிரம் அடி மொத்த நீளம் கொண்ட இந்தப் படத்தின் ஓரிரு காட்சிகள் இலங்கையில் படம்பிடிக்கப்பட்டன.
"https://ta.wikipedia.org/wiki/திரைப்படம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது