"சியா இசுலாம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

4,076 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
அலீ அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய நபித்துவம் அவர் சிறு வயதினராக இருந்ததால் முகம்மது நபி அவர்களிடம் வழங்கப்பட்டது என்பதும் ஷியாக்களின் நம்பிக்கையாகும்.<ref name="onlinepj.com">{{cite web | url=http://www.onlinepj.com/kelvi_pathil/nambikai_thotarbutaiyavai/-shiya-muslimkal-enpavarkal-yaar-avarkalukkum-mathahapukalukkum-enna-vithiyasam/#.WSVHFjVevCO | title=ஷியா முஸ்லிம்கள் என்பவர்கள் யார்? | accessdate=24 மே 2017}}</ref>
 
சுன்னி இஸ்லாத்தின் தொழுகைக்கான அழைப்பி (பாங்கு): "அல்லாஹு அக்பர்' என்று தொடங்கும் பாங்கின் பொருள், "இறைவன் மிகப் பெரியவன்! வணக்கத்துக்குரியவன் இறைவனைத் தவிர வேறெவரும் இல்லை. முஹம்மது இறைவனின் தூதர். தொழ வாருங்கள். வெற்றி பெற வாருங்கள்' என்பது. இதில், ஷியாக்கள் மேலும் ஒரு வரியைச் சேர்த்துக் கொள்கிறார்கள். "முஹம்மது நபி அல்லாஹ்வின் இறுதித் தூதர்; அவரது வாரிசு அலி' என்பதே அவ்வாசகம். ஐந்து வேளைத் தொழுகையை, மூன்று வேளைகளில் (இரண்டை ஒரே வேளையில்) தொழுது விடுகின்றனர் ஷியாக்கள். தொழுகையில், ஸஜ்தா எனும் சிரம் பணியும் நிலையில், "காகே ஷிபா' எனப்படும் புனித கர்பலாவின் மண்ணால் செய்யப்பட்ட "சில்' (ஓடு) ஒன்றை வைக்கிறார்கள். சன்னிகள் இவ்வாறு செய்வதில்லை.
ஷிஆ பிரிவு 12 இமாமகளை பின்பற்றுகிறது.
== பன்னிரண்டு இமாம்கள் ==
==== அலி ====
[[அலீ]] [[முகம்மது நபி]]யின் பெரிய தந்தையின் மகனும், முகம்மது நபியின் மருமகனுமான '''அலீ''' அவர்கள் நான்காவது [[கலீபா]]வாகப் பதவி வகித்தார். அலி [[ராசிதீன் கலீபாக்கள்|ராசித்தீன் கலீபாக்களில்]] நான்காவது மற்றும் இறுதி கலீபா ஆவார். இவர் கிபி 656 முதல் கிபி 661 வரை ஆட்சி செய்தார். கிபி 661-ம் ஆண்டு இவர் படுகொலை செய்யப்பட்டார்.
 
==== ஹஸன் ====
[[அலீ]]யின் மூத்த மகனும் [[முகம்மது நபி]]யின் பேரனும் ஆவார்.
==== ஹுஸைன் ====
[[அலீ]]யின் இளைய மகனும் [[முகம்மது நபி]]யின் பேரனும் ஆவார்.
==== ஸஜ்ஜாத் ====
ஹுஸைனின் மகனாவார்.
==== முஹம்மத் பாக்கிர் ====
ஹுஸைனின் மகனாவார்.
==== ஜஃபர் ஸாதிக்====
முஹம்மத் பாக்கிரின் மகனாவார். சிறந்த சட்ட மேதை. சுன்னா பிரிவாலும் போற்றபடுபவர்.
==== மூஸா அல் காழிம் ====
ஜஃபர் ஸாதிக்கின் மகனாவார். கும்ஸ் எனும் ஜகாத் பொருட்களை வசூலிக்க நடைமுறையை உருவாக்கியவர்.
==== றிழா====
மூஸா அல் காழிமின் மகனாவார். கலீபா மாமுன் ரஷீதால் இளவரசராக நியமிக்கப்பட்டவர்.
==== ஜவாத் ====
றிழாவின் மகனாவார்.அப்பாசிய கலீஃபாவின் துன்புறுத்தலுக்கு ஆளானவர். பெருந்தன்மை மற்றும் பக்திக்கு புகழ்பெற்றவர்.
==== ஹாதி====
ஜவாத்தின் மகனாவார் இவர் கலீஃபா அல் முத்தாஸ்ஸின் ஆணையின்படி விஷம் கொடுத்துக் கொல்லப்பட்டார்.
==== ஹஸன் அல் அஸ்கரீ====
தந்தை ஹாதியின் மரணத்திற்கு பிறகு தனது வாழ்நாளில் பெரும்பகுதி கலீபாவால் இவருக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. பின்னர் இவரும் கலீஃபா அல் முத்தமீதுவின் ஆணையின்படி விஷம் கொடுத்துக் கொல்லப்பட்டார்.
==== மஹ்தி ====
இறுதி இமாம் மற்றும் வாக்குறுதியளிக்கப்பட்ட மஹ்தி என்பவர் ஆவார். இவர் மீண்டும் இஸ்லாம் சரியான ஆட்சியை மீண்டும் நிலைநிறுத்தி, பூமியை நீதி மற்றும் சமாதானத்துடன் வழங்குவார்.
என நம்பப்படுகிறது.
== ஜகாத் ==
தமது வருவாயில் இரண்டரை சதவீதத்தை ஜகாத் (ஏழை வரி அல்லது கொடை) தர வேண்டும் என்பது ஒவ்வொரு முஸ்லிமுக்கும் விதிக்கப்பட்ட கடமை. பணக்காரர்களின் செல்வத்தில் ஏழைகளுக்கு உரிய பங்கு இது. ஷியா முஸ்லிம்கள், இந்த இரண்டரை சதவீத ஜக்காத்துடன், மொத்த ஆண்டு சேமிப்பில் 20 சதவீதத்தை கும்ஸ் ஆகத் தர வேண்டும்.
6,368

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2293599" இருந்து மீள்விக்கப்பட்டது