கணக் குறியீடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 17:
== உறுப்புகளை முன்னிலைப்படுத்தும் குறியீடுகள் ==
===பட்டியல் முறை ===
கணங்களை ஒரே உருப்படியாகக் கொள்வைதைக் காட்டிலும் அவற்றின் உறுப்புகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் நிலைகளும் உண்டு. அவ்வாறான சூழ்நிலைகளில் ஒரு கணத்தின் உறுப்புகள் இரட்டை அடைப்புக்குறிக்குள் பட்டியலிடப்படுகின்றன.

முடிவுறு கணங்களை மட்டுமே இம்முறைப்படி குறிக்க முடியும்.குறித்தல்:
 
எடுத்துக்காட்டுகள்:
வரி 31 ⟶ 33:
 
இம்முறையில் வெற்றுக் கணமானது { } எனக் குறிக்கப்படுகிறது.
 
ஏராளமான உறுப்புகளைக் கொண்ட பெரிய கணங்களைப் பொறுத்தவரை, அத்தனை உறுப்புகளையும் ஒவ்வொன்றாக எழுதிப் பட்டியலிடுதல் செயல்முறையில் மிகவும் கடினமானது. எடுத்துக்காட்டாக, ''E'' = {முதல் ஆயிரம் நேர்ம முழு எண்கள்} என்பதைப் பட்டியல் இடுவதென்பது எழுதுபவருக்கும், அதனை வாசிப்பவருக்கும்கூட மனச்சோர்வூட்டுகின்ற வேலையாகும். எனினும் ஒரு கணிதவியலாளர் இவ்வாறு பட்டியலிடுவதில்லை என்பதுடன், சொற்களாலும் விரித்துரைப்பதில்லை. மாற்றாகச் சுருக்கமான குறியீட்டு முறையில் பின்வருமாறு எழுதுவர்:
:''E'' = {1, 2, 3, ..., 1000}
 
வாசிப்பவருக்குப் புரியக்கூடிய வகையில் ஒழுங்குமுறையில் அமைந்த உறுப்புக்களைக் கொண்ட ''E'' போன்ற கணமொன்றைப் பொறுத்தவரை, பட்டியலைச் சுருக்கக் குறியீடாக எழுதி விளக்க முடியும். முழுப் பட்டியலும் [[முப்புள்ளி (தமிழ் நடை)|எச்சப்புள்ளி]] ('''...''') குறியீட்டைப் பயன்படுத்திச் சுருக்கப்பட்டுள்ளது.
 
முடிவுறாக் கணங்களையும் முப்புள்ளியைப் பயன்படுத்தி விளக்கலாம்.
:எடுத்துக்காட்டாக:
அனைத்து இரட்டை முழுவெண்களின் கணம்:
:{{nowrap|{2, 4, 6, 8, ... }.}}
 
இக் குறியீட்டைப் பயன்படுத்தும்போது, ஒழுங்குமுறை தெளிவாகப் புரியும் வகையில் போதிய அளவு உறுப்புகள் காட்டப்பட வேண்டும். எடுத்துக்காட்டாக, கீழேயுள்ள கணம் முதல் பதினாறு முழு எண்களையோ அல்லது இரண்டின் முதல் ஐந்து அடுக்குகளையோ குறிக்கக் கூடும்:
:''X'' = {1, 2, ..., 16}
 
அமைந்திருக்கும் ஒழுங்குமுறை இலகுவில் புரிந்துகொள்ள முடியாதபடி அமையுமாயின், மேற்காட்டிய சுருக்கிய பட்டியலின் பயன்பாட்டைத் தவிர்ப்பது நல்லது. எடுத்துக்காட்டாக,
:''F'' = {–4, –3, 0, ..., 357}
என்பதை வாசிக்கும்போது இக்கணமானது,
:''F'' = {வர்க்க எண்ணிலும் நான்கு குறைவான முதல் 20 எண்கள்}.
என்பது வெளிப்படையாகவோ தெளிவாகவோ தெரியவில்லை. இக்குறைபாட்டைக் கணக்கட்டமைப்பு முறை நிவர்த்தி செய்கிறது.
 
=== கணிதக்கட்டமைப்பு முறை ===
"https://ta.wikipedia.org/wiki/கணக்_குறியீடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது