இளம்பிள்ளை வாதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up, replaced: {{Link FA|en}} →
No edit summary
வரிசை 14:
}}
 
'''இளம்பிள்ளை வாதம்''' பாதிக்கப்பட்டவரின் மலத்தின் வழியாகப் பரவும் [[தீநுண்மம்|தீநுண்மத்]] [[தொற்றுநோய்]] ஆகும். மலத் துகள்களினால் மாசடைந்த [[நீர்]], அல்லது [[உணவு]] வாய்வழியாக உட்கொள்ளப்படும்போது இந்நோய் தொற்றுகிறது. இது '''போலியோ''' என்னும் ஆங்கிலப் பெயராலும் பரவலாக அழைக்கப்படுகின்றது. ''போலியோமியெலிட்டிஸ்'' ''(Poliomyelitis)'' என்பது இந்நோயின் மருத்துவப் பெயர்.போலியோமைலிட்டிஸ் இந்வைரஸ் நோய்த்தண்டுவடத்தைத் தொற்றுக்குதாக்கும்போது உள்ளானவர்களில்ஏற்படும் 90%பக்கவாதம் பேரில்இது. அறிகுறிகள்போலியோவைரசால் எதுவும்உண்டாகும் தோன்றுவதில்லை.இந்நோய் எனினும்முடமாக்கக் தீநுண்மங்கள்கூடியதும் குருதியோட்டத்துடன்மரணத்தை கலந்துவிடின்வரவழைப்பதுமான பலதொற்று வகையான அறிகுறிகள் தோன்றுகின்றனநோய். பாதிக்கப்படுபவர்களில்மனிதரில் 1%க்கும்இருந்து குறைவானவர்களில்மனிதருக்குப் தீநுண்மங்கள்பரவுகிறது. [[மையஇது நரம்புத்மூளையையும், தொகுதி]]க்குள்தண்டுவடத்தையும் சென்றுதாக்குவதால் [[இயக்கபக்கவாதத்தை நரம்பணு]]க்களைத் தாக்குவதனால் [[தசைநார்]]கள் பலவீனமுற்றுத் தீவிரமான [[தளர்வாதம்|தளர்வாதத்தை]] (flaccid paralysis) உருவாக்குகிறதுஏற்படுத்துகிறது. பாதிக்கப்படும்போலியோ [[நரம்பு]]களைப்வைரசுக்கு பொறுத்துப்அறியப்பட்ட பலவகையானஒரே [[வாதம்|வாத]]புகலிடம் (paralysis) நிலைமைகள் ஏற்படலாம்மனிதனே. [[முள்ளந்தண்டு|முள்ளந்தண்டோடு]]தொற்று தொடர்புள்ளஉள்ள இளம்பிள்ளை வாதமே மிகவும் பொதுவாகக் காணப்படுகின்றது. இதுஒருவரிடம் பொதுவாகக்இருந்து கால்களைத்இன்னொருவருக்குப் தாக்குகிறதுபரவுகிறது.
 
போலியோ தொற்றில் இரு அடிப்படை வடிவங்கள் உள்ளன
நடுநரம்பு மண்டலத்தைத் தாக்காத குறும்நோய். இது சில சமயம் குறை இளம்பிள்ளைவாதம் என அழைக்கப்படும்.நடுநரம்பு மண்டலத்தைத் தாக்கும் பெரும்நோய். இதில் பக்கவாதம் இருக்கலாம் அல்லது இல்லாமலும் இருக்கலாம
== நோய் அறிகுறிகள் ==
95% போலியோ தொற்று அறிகுறிகளைக் காட்டுவதில்லை. போலியோ வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் மலம் மூலமாக தொற்று பிறருக்குப் பரவும் அபாயம் உள்ளது.
ஏறக்குறைய 4-8% போலியோ தொற்று, குறும்நோயாக மாறுகிறது. மருத்துவ மற்றும் ஆய்வகச் சோதனைகளில் நடுநரம்பு மண்டலத்தைப் பாதித்ததற்கான தடயங்கள் இருப்பதில்லை. இது குறை இளம்பிள்ளை வாதம் எனப்படுகிறது. ஒரு வாரத்தில் முற்றிலும் குணமடைவது இதன் இயல்பு. இத்தகைய போலியோவைரஸ் தொற்றில் மூன்று அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ளன: மேல் மூச்சுப்பாதைத் தொற்று (தொண்டைவலியும் காய்ச்சலும்), இரைப்பைக்குடல் உபாதைகள் (குமட்டல், வாந்தி, வயிற்றுவலி, மலச்சிக்கல் அல்லது வயிற்றுப்போக்கு) மற்றும் இன்ஃபுளுயன்சா போன்ற நோய்கள்.
1-2 % தொற்று, வாதமற்ற பரவாத மூளைக்காய்ச்சலாக (கழுத்து, முதுகு மற்றும்/அல்லது கால் விறைப்பு அறிகுறி) உருவாகிறது. இந்த அறிகுறிகள் சிறு நோய் போல பல நாட்கள் தொடரும். அதிக அல்லது அசாதாரண உணர்வுகள் ஏற்படும். 2-10 நாட்கள் வரை இவ்வறிகுறிகள் நீடித்துப் பின் முற்றிலும் மறைந்து போகும்.
ஒட்டுமொத்தப் போலியோ தொற்றில், 1% விட குறைவானவையே தசை மெலிந்த வாதமாக வெளிப்படுகிறது. ஒரு சிறு நோயைத் தொடர்ந்து 1-10 நாட்களில் இளம்பிள்ளை வாத அறிகுறிகள் பொதுவாகத் தொடங்குகின்றன. காய்ச்சல் இயல்பு நிலைக்கு வந்த பின் மேலும் வாதம் ஏற்படாது. தொடக்கத்தில் தசைநாண் செயல்பாடு அதிகரிப்பும், கடும் தசை வலியும், அவயவ அல்லது முதுகு பிடிப்போடும் கூடிய மேலோட்டமான அனிச்சை செயல் இழப்பு அறிகுறியில் அடங்கும். ஆழ்தசைநாண் அனிச்சை செயல்கள் குறைந்து இந்நோய் தொய்வு வாதமாக மாறும். பலநாட்கள் அல்லது வாரங்களுக்கு மாற்றமின்றி அவ்வாறே இருக்கும். இந்நிலையில் இது சமச்சீரற்றுக் காணப்படும். பின் வலிமை திரும்பத் தொடங்கும். நோயாளிக்கு உணர்விழப்போ அறிவாற்றல் மாற்றமோ இருக்காது.
 
== சிக்கல்கள் ==
நிரந்தரமான தசை வாதமும், இடுப்பு, கணுக்கால், மற்றும் பாதங்களின் குறைபாடுகளும், ஊனமும், இளம்பிள்ளை வாதத்தினால் உண்டாகலாம். பல குறைபாடுகளை அறுவை மருத்துவத்தின் மூலமும் உடலியல் சிகிச்சை மூலமும் சரிசெய்ய முடியும் என்றாலும் இடம்சார்ந்த நோயாக இன்னும் விளங்கும் வளர்ந்து வரும் நாடுகளில் இந்த சிகிச்சை முறைகள் சாத்தியமில்லை. இதன் காரணமாக இளம்பிள்ளை வாதத்திற்குத் தப்பிப் பிழைக்கும் குழந்தைகள் கடுமையான குறைபாடுகளுடன்் வாழவேண்டியுள்ளது.
நுரையீரல் அழற்சி
இதயக்கீழறை மிகுவழுத்தம்
அசைவின்மை
நுரையீரல் பிரச்சினைகள்
நுரையீரல் வீக்கம்
அதிர்ச்சி
நிரந்தரத் தசை வாதம்
சிறுநீர்ப்பாதைத் தொற்று
== நோய் மேலாண்மை ==
இளம்பிள்ளை வாதத்தைக் குணப்படுத்த முடியாது. எனவே நோயாளிக்கு ஆதரவு சிகிச்சை அளிக்கப்படுகிறது. நோயாளி நலமடையும் வரை அறிகுறிகளுக்கான சிகிச்சை அளிக்கப்படும். போலியோ அறிகுறிகளுக்கான மருந்துகள், உடற்பயிற்சிகள் மற்றும் சமநிலை உணவு.அளிக்க வேண்டும்.
 
== தடுப்புமுறை ==
இளம்பிள்ளை வாதம் இதுவரை குணப்படுத்த முடியாத நோயாக இருந்து வருகிறது. எனவே தடுப்பு மருந்து ஒன்றே பாதுகாப்பும் நோயைக் கட்டுப்படுத்தும் ஒரே வழியுமாகும்.
 
இரு வகையான தடுப்பு மருந்துகள் உள்ளன: வீரியம் அழிக்கப்பட்ட இளம்பிள்ளை வாதத் தடுப்பு மருந்து மற்றும் வாய்வழி இளம்பிள்ளை வாதத் தடுப்பு மருந்து . வயதைப் பொறுத்துக் காலிலோ புயத்திலோ வீரியம் அழிக்கப்பட்ட இளம்பிள்ளை வாதத் தடுப்பு மருந்து ஊசி வழியாகச் செலுத்தப்படுகிறது. பிற தடுப்பு மருந்துகள் அளிக்கும்போதே போலியோ தடுப்பு மருந்தும் அளிக்கலாம். குழந்தைப் பருவத்திலேயே தடுப்பு மருந்து கொடுக்க வேண்டும். குழந்தைகளுக்கு 4 வேளை வீரியம் அழிக்கப்பட்ட இளம்பிள்ளை வாதத் தடுப்பு மருந்து பின்வரும் வயதில் அளிக்கவேண்டும்: 2 வது மாதம், 4 வது மாதம், 6-18 வது மாதம் மற்றும் ஊக்க அளவு 4-6 வயதில்.
 
வாய்வழி இளம்பிள்ளை வாதத் தடுப்பு மருந்தில், மூன்று போலியோவைரஸ் வகையிலும் உயிருள்ள மற்றும் வீரியம் குறைந்த போலியோ வைரஸ் திரிபுகளின் கலவை இருக்கும். போலியோ சொட்டு மருந்துத் திட்டத்தின் கீழ் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஆண்டுக்கு இரு வேளை வாய்வழி தடுப்பு மருந்து கொடுக்கப்படும். குழந்தைகள் காக்கப்படுவதோடு சமூகத்தில் பரவலாக்கப்பட்டு விரிவான பாதுகாப்பையும் அளிக்கிறது.
 
பாதிக்கப்படுபவர்களில் 1%க்கும் குறைவானவர்களில் தீநுண்மங்கள் [[மைய நரம்புத் தொகுதி]]க்குள் சென்று [[இயக்க நரம்பணு]]க்களைத் தாக்குவதனால் [[தசைநார்]]கள் பலவீனமுற்றுத் தீவிரமான [[தளர்வாதம்|தளர்வாதத்தை]] (flaccid paralysis) உருவாக்குகிறது. பாதிக்கப்படும் [[நரம்பு]]களைப் பொறுத்துப் பலவகையான [[வாதம்|வாத]] (paralysis) நிலைமைகள் ஏற்படலாம். [[முள்ளந்தண்டு|முள்ளந்தண்டோடு]] தொடர்புள்ள இளம்பிள்ளை வாதமே மிகவும் பொதுவாகக் காணப்படுகின்றது. இது பொதுவாகக் கால்களைத் தாக்குகிறது.
 
== இந்தியாவில் இளம்பிள்ளை வாதம் ==
"https://ta.wikipedia.org/wiki/இளம்பிள்ளை_வாதம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது