மெசியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி இணைப்புகள் திருத்தம்
சி clean up and re-categorisation
வரிசை 6:
[[பழைய ஏற்பாடு]] என்று கிறித்தவர்களால் அழைக்கப்படுகின்ற நூல் தொகுதியான எபிரேய விவிலியத்தில் "மெசியா" அல்லது "மஷியா" (''mashiach'') என்று வரும் சொல் எண்ணெயால் திருப்பொழிவு (அபிசேகம்) செய்யப்பெறுகின்ற அரசன், பெரிய குரு போன்றோரைக் குறிக்கும் (காண்க: விடுதலைப் பயணம் 30:22-25).
 
மெசியா என்னும் கருத்துருவகம் யூத சமயத்துக்கு மட்டுமே உரியதன்று. எபிரேய விவிலியமே, பெர்சிய மன்னனான சைரசு என்பவரை "மெசியா" என்று அழைக்கிறது.<ref>[http://jewishencyclopedia.com/articles/4828-cyrus#anchor7 Jewish Encyclopedia: Cyrus: Cyrus and the Jews]: "This prophet, Cyrus, through whom were to be redeemed His chosen people, whom He would glorify before all the world, was the promised Messiah, "the Shepherd of Yhwh" (xliv. 28, xlv. 1)."</ref> ஏனென்றால் யூத சமயத்தைச் சாராதவராக இருந்தாலும் சைரசு மன்னன் யூதர்களின் கோவிலை மறுபடியும் கட்டி எழுப்ப ஆணையிட்டு, இசுரயேல் மக்களுக்கு ஆதரவு காட்டினார்.
 
யூதர்களின் மெசியா என்பவர் [[தாவீது அரசர்|தாவீது அரசனின்]] வழித்தோன்றலாக வருவார் என்றும், கடவுளிடமிருந்து திருப்பொழிவு பெறுவார் என்றும், இசுரயேலின் பன்னிரு குலங்களையும் அரசாள்வார் என்றும், அமைதி நிலவுகின்ற ஒரு புதிய உலகைத் தோற்றுவிப்பார் என்றும் யூதர்கள் நம்பினர்.
வரிசை 51:
== இசுலாம் பார்வையில் மெசியா ==
 
திருக்குரான் போதனைப்படி, மரியாவின் மகனான இயேசு (அரபி: ''Isa ibn Maryam'') மெசியாவாகவும் இறைவாக்கினராகவும் யூத மக்களுக்கு அனுப்பப்பட்டார் (குரான் 3:45). இயேசு விண்ணகத்தில் உயிரோடு இருக்கிறார் என்றும் அவர் உலகிற்குத் திரும்பவும் வந்து போலி மெசியாவை முறியடிப்பார் என்றும் கூறப்படுகிறது.<ref name="MC_1" /> போலி மெசியாவை முறியடித்தபின் இயேசு முசுலிம்களின் தலைவர் ஆவார். அவர் இசுலாமிய குழுமத்தை ("உம்மா") ஒன்று சேர்த்து, அல்லாவை வழிபடும் சமூகமாக ஒன்றிணைப்பார். அவ்வாறு நிகழும்போது, கிறித்தவர்களும் யூதர்களும் இயேசுவைக் குறித்து நம்புகின்றவை தவறு என்று தெரியவரும். இவ்வாறு திருக்குரானில் உள்ளது. இக்கருத்தைக் கிறித்தவர்களும் யூதர்களும் ஏற்பதில்லை.
 
இசுலாமிய போதனை தொடர்பான [[ஹதீஸ்]] இலக்கியத்தின்படி, மரியாவின் மகனான இயேசு மீண்டும் வருவார். அவ்வாறு வரும்போது தான் இயேசு உண்மையாகவே உயிர்நீப்பார். ஏனென்றால், சிலுவையில் இயேசு இறக்கவில்லை. அவர் இறந்ததாகப் பிறர்தான் நினைத்துக்கொண்டார்கள். மாறாக, இயேசுவை அல்லா தம்மிடம் எடுத்துக்கொண்டார்.
வரிசை 83:
* [http://encyclopedia.jrank.org/MEC_MIC/MESSIAH_Dan_x_25_26_.html Messiah] in the 1911 [[பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம்]]
* [http://www.newadvent.org/cathen/10212c.htm The Catholic Encyclopedia: Messiah]
 
[[பகுப்பு:விவிலியம்]]
[[பகுப்பு:கிறித்தவம்கிறிஸ்தவம்]]
[[பகுப்பு:யூதம்]]
"https://ta.wikipedia.org/wiki/மெசியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது