"வச்சிரயான பௌத்தம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

100 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  13 ஆண்டுகளுக்கு முன்
சி
சி
 
==மகாயானத்துடன் தொடர்பு==
திபெத்திய பௌத்த பார்வையில், [[தந்திரம் (பௌத்தம்)|தந்திரமும்]] [[மறைபொருள்வாதம்|மறைபொருள்வாதமும்]] வஜ்ரயானத்தை [[மகாயானம்|மகாயானத்தில்]] இருந்து வேறுபடுத்துகிறது. எனினும் இரண்டிலும் மற்ற உயிர்களுக்கு நன்மை செய்வதற்காக [[புத்தத்தன்மை]] அடைவதே இறுதி குறிக்கோள் ஆகும். மகாயானத்தில் முக்கியத்துவம் வாய்ந்த சூத்திரங்கள் பொதுவாக வஜ்ரயானத்திலும் முக்கியத்துவம் பெற்றிருக்கும். இந்த சூத்திரங்களுடன் வஜ்ரயானம் தனக்கே உரிய சில சூத்திரங்களையும் நூல்களையும் கொண்டுள்ளது. [[போதிசத்துவர்]]கள் மற்றும் எண்ணற்ற பிற [[:பகுப்பு:பௌத்த தேவதாமூர்த்திகள்|பௌத்த தேவதாமூர்த்திகளின்]] மீதுள்ள நம்பிக்கை மகாயானத்துக்கும் வஜ்ரயானத்துக்கு பொதுவானவை.
 
எனினும் ஜப்பானிய வஜ்ரயான குரு [[கூக்காய்]] வஜ்ரயானத்தையும் மகாயானத்தை தெளிவாக வேறுபடுத்துகிறார். கூக்காயை பொருத்தவரையில் மகாயானம் வெளிப்படையானது எனவே அது தற்போதைக்கும் மட்டுமே. மாறாக வஜ்ரயான போதனைகள் [[தர்மகாயம்|தர்மகாய]] உருவில் உள்ளது. ஏனெனில் இப்போதனைகள் [[மஹாவைரோசன புத்தர்]] தமக்கு தாமே பேசிக்கொள்ளும் போது தோன்றியவை. அவ்வாறெனில், உண்மையில் மகாயானமும் [[ஹீனயானம்|ஹீனயானமும்]] வஜ்ரயானத்தின் வெவ்வேறு அம்சங்களாக ஆகிவிடுகிறது. இதே வாதம் திபெத்திய பௌத்தத்திலும் காணப்படுகிறது, அதாவது புத்தத்தன்மை ஒருவர் அடவைதற்கு இறுதி வழி தந்திரமே என்கிறது.
3,721

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/229615" இருந்து மீள்விக்கப்பட்டது